Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இரண்டே வாரங்களில் பானை மாதிரி இருக்க உங்க தொப்பையை குறைக்க... இந்த 4 மசாலாவை சாப்பிட்டா போதுமாம்!
பானை மாதிரி உங்க வயிறு முன்னாடி முட்டிகிட்டு நிக்குதா? உங்க அழகான தோற்றத்தை உங்க தொப்பை அசிங்கமா காட்டுதா? இனிமே கவலைப்படாதீங்க... உங்க தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் அற்புதமான மூலிகைகள் சில உள்ளன.
அந்த பிடிவாதமான தொப்பை கொழுப்பை குறைக்க முயன்று நீங்கள் சோர்வடைந்து வீட்டிர்களா? ஆம். எனில், அதிகப்படியான தொப்பை கொழுப்பைக் குறைக்க விரைவான மற்றும் இயற்கையான வழி இருக்கிறது. தொப்பை கொழுப்பு ஒரு அழகியல் கவலை மட்டுமல்ல; அது அடிப்படை சுகாதார பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

உடல் பருமன் எண்ணற்ற சுகாதார பிரச்சனைகளை உங்களுக்கு ஏற்படுத்தும். சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் சில நேரங்களில் இதய நோய் போன்ற உயிருக்கு ஆபத்தான பிரச்சனைகளை ஏற்படுத்துவதற்கு கூட தொப்பை கொழுப்பு மற்றும் உடல்பருமன் வழிவகுக்கும். ஆதலால், உடனே அதை குறைக்க முயற்சி செய்யத் தொடங்குங்கள்.
பிடிவாதமான தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் இயற்கையான மூலிகைகள், உங்கள் சமையலறையில்தான் உள்ளது. ஆம், இரண்டு வாரங்களில் உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க உதவும் சமையலறை மூலிகைகள் என்னென்ன என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
மஞ்சள்
மஞ்சள் அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்காக நன்கு அறியப்பட்ட மசாலா பொருள் ஆகும். மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற செயலில் உள்ள சேர்மமானது அடிவயிற்றில் கொழுப்பு சேர்வதைக் குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
உங்கள் உணவில் மஞ்சளைச் சேர்ப்பது அல்லது அதை ஒரு துணைப் பொருளாக நீங்கள் உட்கொள்ளும் உணவில் சேர்ப்பது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும். நீங்கள் எடை இழப்பு பயணத்தில் இருக்கிறீர்கள் என்றால், மஞ்சளை உங்கள் உணவில் சேர்க்க மறக்காதீர்கள்.
வெந்தயம்
பல நூற்றாண்டுகளாக இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் வெந்தய விதைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வெந்தயம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு திரட்சி குவிவதைக் குறைக்கவும் உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. அந்த வகையில், உங்கள் உணவில் வெந்தயத்தைச் சேர்ப்பது ஒரு சுவையான மற்றும் பயனுள்ள தேர்வாக இருக்கும்.
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை ஒரு நறுமண மசாலா மட்டுமல்ல; இது தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவும் அற்புதமான மூலிகையும் கூட. சில ஆய்வுகள் இலவங்கப்பட்டை இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி உள்ள நபர்களில் தொப்பையை குறைக்கும் என்று கண்டறிந்துள்ளது. உங்கள் இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், அதிகரித்த உடல் பருமனை குறைக்கவும் இந்த ஒரு மசாலா உங்களுக்கு உதவும்.
இஞ்சி
இஞ்சி அதன் செரிமான நன்மைகளுக்காக நன்கு அறியப்பட்ட மசாலா ஆகும். இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமல்லாமல் எடையை குறைக்கவும் உதவும். இஞ்சி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது.
உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகள் தேங்கியிருந்தால், அதை குறைக்க இஞ்சி உதவும். தினமும் காலையில், நீங்கள் இஞ்சி தேநீர் அருந்தலாம் மற்றும் உங்கள் உணவுகளிலும் சேர்க்கலாம்.
இறுதிக் குறிப்பு
இரண்டே வாரங்களில், இந்த மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்களை உங்கள் தினசரி வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம், உங்கள் எடை இழப்பு பயணத்தை எளிதாக மாற்றலாம். பானை போல இருக்கும் உங்கள் தொப்பை கொழுப்பு கரைந்து, மெலிதான இடுப்பை பெறலாம். உங்கள் தொப்பை கொழுப்பை குறைக்க உணவு கட்டுப்பாடுகளுடன் உடற்பயிற்சியும் அவசியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
மறுப்பு: உங்கள் உணவில் ஏதேனும் புதிய மூலிகைகள் அல்லது சப்ளிமெண்ட்ஸ்களை சேர்ப்பதற்கு முன், அவை பாதுகாப்பானவை மற்றும் உங்களுக்கு ஏற்றவை என்பதை உறுதிப்படுத்த ஒரு சுகாதார நிபுணருடன் ஆலோசனை செய்ய வேண்டியது மிக அவசியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
