Latest Updates
-
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
குரு-சூரியனால் உருவாகியுள்ள சிவ ராஜயோகம்: இந்த 4 ராசிகளின் கஷ்டம் தீர்ந்து செல்வம் பெருகும்! -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
காளான் பட்டாணி மசாலா ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
மழைக்காலத்திலும் அழகா இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
இந்த 3 ராசிக்காரர்களால் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாதாம் - இவங்க கோபம் பேரழிவை ஏற்படுத்துமாம் -
கஃபே ஸ்டைல் பன் மஸ்கா - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைங்களுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் நார்த்தங்காய் சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா அருமையா இருக்கும்
ஸ்பெயினில் எபோலா போன்ற நோயால் கண்ணில் இரத்தம் கசிந்து ஒருவர் பலி.. அதென்ன நோய்? இது எப்படி பரவுகிறது?
Spain Man Dies Due To Ebola Like CCHF Disease: ஸ்பெயினில் ஒருவர் எபோலா போன்ற கொடிய வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 74 வயதான அந்நபர் கடந்த சனிக்கிழமை மாட்ரிட் அருகில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டார். அப்போது அவரை பரிசோதித்ததில், அவர் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் (Crimean-Congo Hemorrhagic Fever) என்னும் கொடிய கண்ணில் இரத்தக்கசிவை உண்டாக்கும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இந்த நோயானது 40 சதவீதம் இறப்பு விகிதத்தைக் கொண்ட ஒரு கொடிய வைரஸ் நோயாகும்.
மாட்ரிட்டில் இருந்து தென்மேற்கே சுமார் 100 மைல் தொலைவில் உள்ள டோலிடோவில் உண்ணி ஒன்று கடித்ததால், அடையாளம் தெரியாத ஒருவர் ஸ்பெயினின் மோஸ்டோல்ஸில் உள்ள ரெய் ஜுவான் கார்லோஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸ் தாக்கியிருப்பது தெரிந்த பின், அந்நபரை மாட்ரிட்டில் உள்ள லா பாஸ் பல்கலைக்கழக மருத்துவமனையில் உள்ள னிமைப்படுத்தப்பட்ட பிரிவுக்கு மாற்றப்பட்டார். ஆரம்பத்தில் அவரது உடல்நிலை நிலையாக இருந்தது. ஆனால் போக போக கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலின் அறிகுறிகள் தெரியத் தொடங்கியது. பின் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
துரதிர்ஷ்டவசமாக, அந்த 74 வயது முதியவர் சனிக்கிழமையன்று இறந்தார். மே 2020-ல் 69 வயதான ஒருவரது இறப்புக்கு பின் ஸ்பெயினில் கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலால் (CCHF) ஏற்பட்ட முதல் இறப்பு இதுவாகும். இந்த வைரஸ் தொற்றிற்கு எவ்வித தடுப்பூசியும் இல்லை. எனவே இந்த வைரஸ் ஒருவரைத் தாக்கினால், மரணம் நிகழ நிறைய வாய்ப்புள்ளது. ஆகவே இதன் பரவலைத் தடுக்க சுகாதார அதிகாரிகள் அப்பகுதி மக்களை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளனர். இப்போது இந்த கொடிய வைரஸ் குறித்த சில முக்கியமான விஷயங்களைக் காண்போம்.
கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்றால் என்ன?
கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சல் என்பது புன்யாவிரிடே குடும்பத்தைச் சேர்ந்த டிக்-போர்ன் வைரஸ் (நைரோவைரஸ்) மூலம் பரவும் ஒரு கொடிய நோயாகும். இந்த வைரஸ் கடுமையான இரத்தக்கசிவு காய்ச்சலை ஏற்படுத்தும். இதன் இறப்பு விகிதமானது 10-40 சதவீதம் ஆகும். இந்த கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலானது மிகவும் கொடிய எபோலா போன்றது என்று கூறப்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் பட்டியலில் இந்த வைரஸ் முன்னுரிமை தரக்கூடிய வைரஸ்களின் பட்டியலில் உள்ளது. மேலும் இந்த நோய்க்கு எந்த ஒரு தடுப்பூசியும் இல்லை. ஒரு பெருந்தொற்றுநோயை தூண்டக்கூடிய 9 வகையான நோய்க்கிருமிகளில் இதுவும் ஒன்றாகும். இந்த வைரஸ் ஆப்ரிக்கா, பால்கன்கள், மத்திய கிழக்கு மற்றும் ஆசியா பகுதிகளில் இது உள்ளது.
இந்த வைரஸ் எப்படி பரவுகிறது மற்றும் இதன் அறிகுறிகள் என்ன?
கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலை உண்டாக்கும் வைரஸானது உண்ணிகள் கடித்தால் அல்லது இந்த உண்ணிகள் கடித்த விலங்குகள் அல்லது மனிதர்களின் உடல் திரவங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலம் பரவுகிறது. உண்ணிகள் லைம் நோய், போவாசன் வைரஸ் போன்ற பல்வேறு நோய்களை பரப்பக்கூடும்.
கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலின் ஆரம்ப கால அறிகுறிகள் என்றால், காய்ச்சல், தசை வலி, அடிவயிற்று வலி, தொண்டை புண், வாந்தி போன்றவை. இது தவிர மனநிலை மாற்றங்கள், மனக்குழப்பம், மிகுந்த தூக்கத்தையும் உண்டாக்கலாம். தீவிர நிலையில், இந்த வைரஸ் தொற்றானது மூக்கு அல்லது கண்களில் இருந்து இரத்தத்தைக் கசியத் தூண்டும்.
கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலுக்கான சிகிச்சைகள் மற்றும் தடுப்பு வழிகள்
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, கிரிமியன்-காங்கோ ரத்தக்கசிவு காய்ச்சலின் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சைகள் வழங்கப்படும். இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால், அதற்கு எதிராக ரிபாவிரின் என்னும் வைரஸ் எதிர்ப்பு மருந்து சிகிச்சைக்காக பயன்படுத்தப்படுகிறது.
இந்த வைரஸ் உண்ணிகள் மூலம் பரவுவதால், இதன் பரவலைத் தடுக்க பாதுகாப்பான ஆடைகளை அணிய வேண்டும், பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்ததும், பூச்சிக்கடித்துள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். இவற்றை தவறாமல் பின்பற்றுவதன் மூலம், அபாயத்தைக் குறைக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications