Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
நீங்க குறட்டை அதிகமா விடுவீங்களா? தினமும் 'இத' ஒரு ஸ்பூன் சாப்பிட்டா குறட்டை வராதாம்.. ட்ரை பண்ணி பாருங்க..
Snoring Remedies: குறட்டை என்பது ஒரு பொதுவான தூக்கம் தொடர்பான பிரச்சனையாகும். குறட்டை உயிருக்கு ஆபத்தான பெரிய பிரச்சனையாக இல்லாவிட்டாலும், குறட்டை விடுபவர்களை விட, அவர்களின் அருகில் படுப்பவர்கள் தான் அதிகம் சிரமப்படுவார்கள். குறட்டையானது தூக்கத்தில் சுவாசிக்கும் போது வெளிவரும் சப்தமாகும். சிலர் குறைவான சப்தத்தில் குறட்டை விட்டு தூங்குவார்கள்.
இன்னும் சிலர் அருகில் யாரும் படுக்க முடியாத அளவில் அதிக சப்தத்துடன் குறட்டை விடுவார்கள். இந்த குறட்டை சப்தம், தூக்கத்தில் வாய் மற்றும் மூக்கின் வழியாக சுவாசிக்கும் போது ஏற்படும் தடைகளால் தொண்டை திசுக்களில் ஏற்படும் அதிர்வுகளின் ஓசையாகும். ஒருவருக்கு குறட்டை பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் உடல் பருமன், மூக்கு அல்லது தொண்டையின் அசாதாரண அமைப்பு, மூக்கடைப்பு, மதுப்பழக்கம், தூக்க நிலை போன்றவை குறிப்பிடத்தக்கவை.

குறட்டையைத் தடுக்க பல வழிகள் உள்ளன. அதில் ஒரு எளிமையான வழி தான் உணவுகள். அதுவும் நம் வீட்டு சமையலறையில் இருக்கும் அதிக மருத்துவ குணம் கொண்ட தேன் குறட்டையைக் குறைக்க உதவும் என்பது தெரியுமா? Mirror.co.uk இன் அறிக்கையின்படி, குறட்டை பிரச்சனையால் போராடிக் கொண்டிருப்பவர்கள் தேனை இரவு நேரத்தில் ஒரு ஸ்பூன் உட்கொண்டு வந்தால், நல்ல நிம்மதியான மற்றும் ஆழ்ந்த தூக்கத்தைப் பெற உதவும் என தூக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதற்கு தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளும், நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் தான் காரணம். இந்த தேனை தொண்டையில் தடவுவதன் மூலம் ஒலிகளை உண்டாக்கும் திசுக்களை அது அமைதிப்படுத்தி, குறட்டை சப்தத்தைக் குறைக்க உதவும். மேலும் இது மூச்சுக்குழாய்களில் உள்ள நெரிசலையும், தொண்டையில் உள்ள வீக்கத்தையும் குறைக்க உதவும். அதற்கு ஒரு ஸ்பூன் தேனை இரவு தூங்கும் முன் அப்படியே சாப்பிடலாம் அல்லது தூங்கும் முன் ஒரு கப் சுடுநீர் அல்லது இஞ்சி டீயுடன் சேர்த்து கலந்தும் குடிக்கலாம்.
குறட்டையைக் குறைக்க உதவும் பிற வழிகள்:
உடல் எடையைப் பராமரிக்கவும்
அதிக உடல் எடை, குறிப்பாக கழுத்தைச் சுற்றியுள்ள பகுதி அதிகம் வீங்கியிருந்தால், அது சுவாசப்பாதையை சுருக்கி, குறட்டை வரும் அபாயத்தை அதிகரிக்கும். எனவே உடல் எடையை கணிசமான அளவில் குறைப்பதன் மூலும், சுவாசப்பாதையில் ஏற்படும் அழுத்தம் குறைந்து, குறட்டையும் குறையும்.
பக்கவாட்டில் தூங்கவும்
தூங்கும் போது ஒரு நேராக அதாவது, முதுகுப் பகுதியில் தரையில் படுமாறு படுக்கும் போது, நாக்கு மற்றும் மென்மையான திசுக்கள் தொண்டையை நோக்கி தள்ளப்பட்டு, சுவாசிக்கும் போது சுவாச ஓட்டத்தில் தடையை உண்டாக்கி, குறட்டையை ஏற்படுத்தும். எனவே குறட்டை வருவதைத் தடுக்க வேண்டுமானால், தூங்கும் போது பக்கவாட்டில் ஒருபக்கமாக திரும்பி தூங்குங்கள்.
தலையை உயர்த்திய நிலையில் வைக்கவும்
குறட்டை பிரச்சனையைக் கொண்டவர்கள் படுக்கும் போது சற்று உயரமான தலையணையை பயன்படுத்தி, தலை உயர்ந்த நிலையில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தூங்குவதன் மூலம் காற்றோட்டம் சீராக இருந்து, குறட்டை வருவது குறையும்.
நீரை அதிகம் குடிக்கவும்
உடலில் நீர்ச்சத்து போதுமான அளவில் இல்லாமல் இருந்தால், அது காற்றுப் பாதையில் சளியை இறுக்கமடையச் செய்து, குறட்டையை அதிகரிக்கும். எனவே குறட்டை வராமல் இருக்க வேண்டுமானால், போதுமான அளவில் நீரைக் குடியுங்கள்.
மது பழக்கத்தைத் தவிர்க்கவும்
மதுப்பழக்கம் தொண்டை சதையை தளர்வடையச் செய்து, காற்றுப் பாதையில் சுவாச ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி குறட்டை சப்தத்தை அதிகரிக்கும். எனவே குறட்டை வராமல் இருக்க வேண்டுமானால், மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
