இந்தியாவில் உள்ள அனைத்து பிராண்ட் உப்பு, சர்க்கரையிலும் புற்றுநோயை உண்டாக்கும் பிளாஸ்டிக் இருக்காம்.. உஷார்..

Microplastics In Salt And Sugar: தினசரி சமையலில் உணவில் சுவைக்காக நாம் பயன்படுத்தும் முக்கியமான இரண்டு பொருட்கள் தான் உப்பும், சர்க்கரையும். இவ்விரு பொருட்களும் சேர்க்காத எந்த உணவின் சுவையையும் நம்மால் முழுமையாக அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட உப்பு மற்றும் சர்க்கரை குறித்த ஒரு அதிர்ச்சிகரமான செய்தி தற்போது வெளிவந்துள்ளது.

அது என்னவெனில், இந்தியாவின் ஒவ்வொரு பிராண்டு உப்பு மற்றும் சர்க்கரையிலும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் 5 மிமீ விட்டம் கொண்ட மிகச்சிறிய துகள்கள். இவை பெரிய பிளாஸ்டிக் குப்பைகளின் முறிவால் அல்லது தயாரிக்கும் பொருட்களில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த சிறிய துகள்கள் நமது சுற்றுச்சூழலில் பரவலாக உள்ளன. அதுவும் இவை கடல்கள், ஆறுகள், மண் மற்றும் காற்றிலும் காணப்படுகின்றன.

Shocking Study Finds All Indian Salt And Sugar Brands Contain Cancer Causing Microplastics

இந்த ஆய்வை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமான டாக்ஸிக்ஸ் லிங்க் நடத்தியது. இந்த ஆய்வில் இந்தியாவில் விற்பனை செய்யும் பல்வேறு உப்பு மற்றும் சர்க்கரைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட சோதனை செய்யப்பட்டன. அதில் தான் அதிர்ச்சியே காத்திருந்தது. இந்த சோதனைக்குட்படுத்தப்பட்ட அனைத்து உப்பு மற்றும் சர்க்கரையிலும் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் அனைத்தும் மிகவும் ஆபத்தானவை. குறிப்பாக இவை புற்றுநோயை உண்டாக்கும்.

இந்த ஆய்வில் டேபிள் உப்பு, கல் உப்பு, கடல் உப்பு, உள்ளுர் மூல உப்பு உட்பட கிட்டத்தட்ட 10 வகையான உப்புக்களும், 5 வகையான சர்க்கரைகளும் சோதனை செய்யப்பட்டன. இவை அனைத்திலுமே மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் இருந்தன. அதுவும் இந்த துகள்களின் அளவுகளானது 0.1 மி.மீ முதல் 5 மி.மீ வரை இருக்கும். உப்பு மாதிரிகளை சோதனை செய்ததில் ஒரு கிலோ உப்பில் 6.71 முதல் 89.15 துண்டுகள் மைக்ரோபிளாஸ்டிக்குகள் கலந்திருந்தது. சமையலில் பயன்படுத்தும் 1 கிலோ அயோடின் உப்பில் 89.15 துண்டுகளும், 1 கிலோ ஆர்கானிக் கல் உப்பில் 6.70 துண்டுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன. அதேப் போல் 1 கிலோ சர்க்கரையில் 11.85 முதல் 68.25 துண்டுகள் வரை மைக்ரோபிளாஸ்டிக்குகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மைக்ரோபிளாஸ்டிக்குகள் உடலுக்கு எவ்வாறு தீங்கு விளைவிக்கும்?

ஏற்கனவே பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென்று அரசு வலியுறுத்தி, ஆங்காங்கு அது தடைசெய்யப்பட்டு பிளாஸ்டிக் இல்லாத சூழலில் வாழ முயற்சித்துக் கொண்டிருக்கும் வேளையில், உண்ணும் உணவிலேயே பிளாஸ்டிக்குகள் இருப்பது மிகப்பெரிய கவலையாக உள்ளது. ஏனெனில் மைக்ரோபிளாஸ்டிக்குகள் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தற்போது அதிகரித்து வரும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு இவை காரணமாக இருக்கலாம். இப்போது மைக்ரோபிளாஸ்டிக்குகள் உடலுக்கு எம்மாதிரியான தீங்கை உண்டாக்கும் என்பதைக் காண்போம்.

ஹார்மோன் சீர்குலைவு

மைக்ரோபிளாஸ்டிக்குகள் ஈஸ்ரோஜென் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் போன்ற ஹர்மோன்கள் மற்றும் நாளமில்லா சுரப்பிகளை சீர்குலைத்து, பல மோசமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க வைக்கலாம். குறிப்பாக இந்த மைக்ரோபிளாஸ்டிக்குகள் சர்க்கரை நோய், பெண்கள் அதிகம் பாதிக்கப்படும் பிசிஓஎஸ் மற்றும் கருவுறுதல் பிரச்சனைகள் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும்.

நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகள்

ஆய்வுகளின் படி, மைக்ரோபிளாஸ்டிக்குகள் நீண்ட காலமாக நாளமில்லா சுரப்பியை சீர்குலைத்து வந்தால், அது இதய நோய்கள், வாதம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் உடல் பருமன் போன்றவற்றின் அபாயத்தை அதிகரிக்கும். மேலும் இவை குடல் ஆரோக்கியத்திலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருவரது குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் அது நோயெதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி, மேலும் பல நோய்களின் அபாயத்தை அதிகரித்துவிடும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Desktop Bottom Promotion