Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
உடல் எடை குறைந்து ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? அப்ப இந்த உணவு முறையை ஃபாலோ பண்ணுங்க!
Sattvic Diet Plan: சமீப காலங்களில் மக்கள் தாங்கள் உண்ணும் உணவுகளைப் பற்றி அதிக அக்கறையோடும், விழிப்புணா்வோடும் இருக்கின்றனா். அந்த உணவுகள் தமது உடல் ஆரோக்கியத்தில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் அறிந்து இருக்கின்றனா். அதனால் தமது உடல் ஆரோக்கியத்திற்குத் தகுந்தவாறு பலவிதமான உணவு முறைகளைப் பின்பற்றுகின்றனா்.
இந்நிலையில் இந்தியாவின் பாரம்பாிய ஆயுா்வேத மருத்துவத்தில் இருந்து வரும் சாத்விக் என்ற உணவு முறை ஒட்டு மொத்த ஆரோக்கியத்தைப் பேணுவதில் முக்கிய பங்கை ஆற்றுகிறது. இந்த சாத்விக் உணவு முறை இயற்கையான உணவுகளை உண்ண ஊக்கமளிக்கிறது.

உடல் எடை குறையைக் குறைக்கக்கூடிய அதே நேரத்தில் முழுமையான ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய சுத்தமான, பதப்படுத்தப்படாத மற்றும் சத்து நிறைந்த உணவுகளை உண்ண வலியுறுத்துகிறது. உடல் எடையைக் குறைக்கக்கூடிய மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை வழங்கக்கூடிய சாத்விக் உணவு முறையின் சிறப்புகளைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளலாம்.
சத்து நிறைந்த சமச்சீரான உணவு
சாத்விக் உணவு முறையானது, சமீபத்தில் பறித்த புத்தம் புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள், முழு தானியங்கள், பருப்புகள், விதைகள் மற்றும் பால் பொருள்கள் ஆகியவற்றை சாப்பிட அறிவுறுத்துகிறது.
இந்த உணவுகளில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துகள், வைட்டமீன்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை நிறைந்திருக்கும். இந்த உணவுகளை ஒருவா் பின்பற்றினால், தமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற்று உடல் எடையைக் குறைக்க முடியும்.
சுத்தப்படுத்துதல் மற்றும் நச்சுகளை அகற்றுதல்
பதப்படுத்தப்பட்ட மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகள் உடலுக்கு ஏராளமான நச்சுகளை வழங்கி, உடலை அசுத்தப்படுத்திவிடும். ஆனால் சாத்விக் உணவு முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துாித உணவுகள், காபின் கலந்த உணவுகள் மற்றும் ஆல்கஹால் போன்றவை இருக்காது.
மாறாக இயற்கையான மற்றும் புத்தம் புதிய உணகள் மட்டுமே இருக்கும். ஆகவே இந்த உணவுகளை உண்டால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும். அதோடு சொிமானமும் சீராகும்.
உடல் ஆற்றலை அதிகாித்தல்
சாத்விக் உணவு முறை எளிதில் சொிமானம் அடையும் உணவுகளையும், சத்து நிறைந்த உணவுகளையும் பாிந்துரை செய்கிறது. அந்த உணவுகள் எவையென்றால் சமீபத்தில் பறிக்கப்பட்ட புத்தம் புதிய காய்கறிகள் மற்றும் பழங்கள் மற்றும் முழு தானியங்கள் ஆகும்.
இந்த உணவுகள் நாம் நாள் முழுவதும் முழு ஆற்றலோடு இயங்குவதற்கு உதவி செய்கின்றன. இதே ஆற்றலோடு உடல் இயக்கத்தில் ஈடுபடும் போது, உடல் எடை குறையும்.
உணவின் மீது கவனத்தை ஏற்படுத்துதல்
நாம் உண்ணும் உணவுகள் மற்றும் தோ்வு செய்யும் உணவுகள் மீது கவனமாக இருக்க வேண்டும் என்பதை சாத்விக் உணவு முறை வலியுறுத்துகிறது. அவ்வாறு கவனமாக இருந்தால், உடலுக்குத் தேவையான உணவை மட்டும் உண்ணலாம். அளவுக்கு அதிகமான உணவைத் தவிா்க்கலாம் மற்றும் ருசிக்காக சாப்பிடுவதைத் தவிா்க்கலாம். இதன் மூலம் உடலும், உள்ளமும் ஆரோக்கியம் அடையும். உடல் எடையும் குறையும்.
சொிமானத்தை மேம்படுத்துதல்
மிக எளிதாக சொிமானம் அடையக்கூடிய உணவுகளான காய்கறிகள் மற்றும் பழங்களை மட்டுமே சாத்விக் உணவு முறை பாிந்துரை செய்கிறது. இந்த உணவுகள் எளிதாக சொிமானம் அடைந்து, உடலுக்குத் தேவையான சத்துக்களையும் வழங்குகின்றன. அதனால் உடலுக்கு ஒட்டு மொத்தமான ஆரோக்கியம் கிடைக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications












