Ramadan 2024: ரமலான் நோன்பு இருக்கீங்களா? அப்ப ஆரோக்கியமா இருக்க இத மறக்காம ஃபாலோ பண்ணுங்க...

Ramadan 2024: இஸ்லாமியர்களின் மிகவும் புனிதமான மாதமாக கருதப்படும் ரமலான் மாதம் தொடங்கிவிட்டது. இன்று இஸ்லாமியர்கள் அனைவரும் ரமலான் நோன்பை அதிகாலையில் தொழுகையுடன் திறந்திருப்பார்கள்.

இந்த ரமலான் மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை நீர் கூட அருந்தாமல் கடுமையான நோன்பை மேற்கொள்வார்கள். இதில் சூரிய உதயத்திற்கு முன் உண்ணும் உணவு சுஹர் எனவும், சூரிய அஸ்தமனத்திற்கு பிந்தைய உணவு இஃப்தார் என்றும் அழைக்கப்படுகிறது.

Ramadan 2024 Tips To Stay Active During Ramadan In Tamil

இந்த ரமலான் நோன்பு 29 அல்லது 30 நாட்கள் வரை நீடித்திருக்கும். இந்த ரமலான் நோன்பை துறக்கும் பண்டிகை தான் ஈத் அல்-பித்ர் என்று அழைக்கப்படும் ரம்ஜான் பண்டிகை. ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு மேற்கொள்ளும் போது ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை பராமரிப்பது என்பது மிகவும் முக்கியம். ஆனால் இது சற்று சிரமம் தான்.

ஏனெனில் இத்தனை நாட்கள் நன்கு சாப்பிட்டு விட்டு திடீரென்று நோன்பை ஆரம்பிக்கும் போது, முதல் ஓரிரு நாட்கள் சற்று கடினமாக இருக்கும். உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்காமல் மிகுந்த உடல் சோர்வையும், களைப்பையும் சந்திக்க நேரிடும்.

இந்நிலையில் நோன்பு தொடங்கிய முதல் ஓரிரு நாட்கள் உடலுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வை அளிப்பதன் மூலம், உடலின் ஆற்றலை பராமரிக்கலாம். இப்படி ஓரிரு நாட்கள் மேற்கொள்ளும் போது, உடல் புதிய வழக்கத்திற்கேற்ப மாறிவிடும். இது தவிர நோன்பை திறக்கும் முன்பும், நோன்பை முடிந்த பின்பும் ஒருசில உணவுகளை உட்கொள்வதன் மூலம் உடலின் ஆற்றலைப் பராமரிக்கலாம்.

பாலுடன் நட்ஸ்

பாலில் கால்சியம் அதிகம் உள்ளது. இது எலும்புகளை வலிமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்த பாலுடன் பாதாம், பிஸ்தா போன்றவற்றை தட்டிப் போட்டு குடிக்கும் போது, பாலில் உள்ள சத்துக்களுடன், பாதாம் மற்றும் பிஸ்தாவில் உள்ள சத்துக்களும் கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பாலை நோன்பை திறக்கும் முன் குடிப்பது மிகவும் நல்லது.

பேரிச்சம் பழம்

ரமலான் நோன்பை முடிக்கும் போது பாரம்பரியமாக உட்கொள்ளப்படும் ஒரு உணவுப் பொருள் தான் பேரிச்சம் பழம். இந்த பேரிச்சம் பழம் உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும். மேலும் இதில் உள்ள இயற்கை சர்க்கரை இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவி புரியும். எனவே இந்த பேரிச்சம் பழத்தை ரமலான் நோன்பின் போது அதிகம் உட்கொள்வது நல்லது.

உலர் பழங்கள்

உலர்ந்த ஆப்ரிகாட், உலர் திராட்சை, உலர்ந்த முந்திரிப் பழம் போன்றவற்றில் இயற்கை சர்க்கரை மற்றும் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளன. எனவே இவற்றை ரமலான் நோன்பின் போது அதிகம் உட்கொண்டு வந்தால், உடலின் ஆற்றல் பராமரிக்கப்படுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடும் ஆரோக்கியமாக இருக்கும்.

நட்ஸ் மற்றும் விதைகள்

நோன்பு காலத்தில் முடிந்த வரை ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தால், நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்படலாம். அதுவும் நட்ஸ், விதைகள் போன்றவற்றில் ஆரோக்கியமான கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே பாதாம், முந்திரி, வால்நட்ஸ், பூசணி விதைகள் போன்றவற்றை ஒன்றாக கலந்து உட்கொள்ளுங்கள். இதனால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும்.

சத்து உருண்டைகள்

ரமலான் நோன்பு மேற்கொள்ளும் போது நாள் முழுவதும் உடலில் ஆற்றல் நிலைத்திருக்க வேண்டுமானால், பேரிச்சம் பழம், நட்ஸ், உலர் பழங்கள் ஆகியவற்றைக் கொண்டு ஒரு சத்து உருண்டைகளை தயாரித்து, அவற்றை நோன்பு திறப்பதற்கு முன்பும், நோன்பு முடித்த பின்னரும் சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள சத்துக்கள் உடலுக்கு நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குவதோடு, உடலை ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

Story first published: Tuesday, March 12, 2024, 15:25 [IST]
Desktop Bottom Promotion