Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் தேடிவருமாம் -
ராகு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கிரகண யோகம்: மே 10 முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. -
வெயிலால் எரியும் சருமத்தை கூலாக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை தினமும் நைட் போடுங்க.. -
இன்ஸ்டாகிராம் 'போலி லவ் குரு' கும்பல் வேட்டை: தம்பதிகளுக்கு போலீஸ் விடுத்த அதிரடி எச்சரிக்கை! -
Mothers Day 2026: வேலைக்கு செல்லும் அம்மாக்களுக்கான சில ஆரோக்கிய டிப்ஸ்! -
இன்ஸ்டாகிராம் ஜோதிடர் பெயரில் பகீர் மோசடி! ஆன்மீக வலை விரித்து பெண்களை மிரட்டிய கொடூரம்! -
மொறுமொறுப்பான.. சோயா பாப்கார்ன் - எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
குரு-சுக்கிர சேர்க்கையால் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்! -
கொளுத்தும் கோடையில் கற்றாழை வெச்சு.. இப்படி ஒருவாட்டி குழம்பு செய்யுங்க.. மீன் குழம்பு மாதிரி இருக்கும்.. -
மே 8 கிரகப்பிரவேசம்: உங்கள் புதிய வீட்டில் செல்வம் கொழிக்க இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க!
எச்சரிக்கை! இனிமேல் பாப்கார்ன் அதிகம் சாப்பிடாதீங்க.. இல்லன்னா நுரையீரல் நோயால் உயிரை இழக்க நேரிடும்..
Popcorn Lungs In Tamil: நீங்கள் பாப்கார்ன் பிரியரா? எங்கு சென்றாலும் பாப்கார்ன் வாங்கி சாப்பிடுவீர்களா? அப்படியென்றால் இனிமேல் பாப்கார்னை அதிகம் சாப்பிடாதீர்கள். அதுவும் பட்டர் பாப்கார்ன் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த பாப்கார்னை அதிகம் சாப்பிட்டால், அது நுரையீரலில் பெரிய சேதத்தை ஏற்படுத்தி, சில சமயங்களில் உயிரையே பறித்துவிடும் அபாயம் உள்ளது.
அதுவும் பாப்கார்னை அதிகம் சாப்பிட்டால் சந்திக்கக்கூடிய ஒரு நுரையீரல் பிரச்சனை தான் Bronchiolitis obliterans என்னும் பாப்கார்ன் நுரையீரல். இந்த பிரச்சனையின் போது நுரையீரலில் வடுக்கள் மற்றும் வீக்கம் ஏற்பட்டு, சுவாசிப்பதில் மிகுந்த சிரமத்தை உண்டாக்கும்.

நிபுணர்களின் கூற்றுப்படி, மைக்ரோவேவ் பாப்கார்னில் சுவைக்காக செயற்கை வெண்ணெய் சுவையைத் தரும் டயசெடைல் என்னும் கெமிக்கல் பயன்படுத்தப்படுகிறது. இந்த டயசெடைல் மிகவும் தீங்கு விளைவிக்கக்கூடியது.
உணவு மற்றும் மருந்து நிர்வாகமானது டயசெடைல் என்னும் கெமிக்கல் பாதுகாப்பானதாக கூறப்பட்டாலும், அளவுக்கு அதிகமாக உள்ளிழுக்கும் போது அது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும். இந்த டயசெடைல் ப்ளேவர்டு காபி, பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் பழச்சாறுகள், கேராமல் மற்றும் சில பால் பொருட்களிலும் காணப்படுகிறது.
பாப்கார்ன் நுரையீரல் என்றால் என்ன?
Bronchiolitis obliterans என்று அழைக்கப்படும் பாப்கார்ன் நுரையீரல், மூச்சுக்குழாய்களை பாதிக்கும் ஒரு சுவாச பிரச்சனையாகும். இந்த பிரச்சனையில் நுரையீரலில் உள்ள மிகச்சிறிய மூச்சுக்குழாய்களில் அழற்சி ஏற்பட்டிருக்கும். இந்நிலையில் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களை சுவாசிக்கும் போது, இந்த மிகச்சிறிய மூச்சுக்குழாய்கள் வீங்கி, சேதமடைந்து, வடுக்களை உண்டாக்கும்.
பாப்கார்ன் நுரையீரல் எவ்வளவு பொதுவானது?
நிபுணர்களின் கூற்றுப்படி, பாப்கார்ன் நுரையீரல் ஒரு அரிய கோளாறு. இது நோய்த்தொற்று அல்லது ஒருசில கெமிக்கல்களை சுவாசிக்கும் எவருக்கும் ஏற்படலாம். மேலும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களுக்கும் இப்பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதுவும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்களில் சுமார் 50 சதவீதம் பேருக்கு, அறுவை சிகிச்சைக்கு 5 ஆண்டுகளுக்கு பின் இந்த பாப்கார்ன் நுரையீரல் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பாப்கார்ன் நுரையீரல் அறிகுறிகள்
பாப்கார்ன் நுரையீரல் அறிகுறிகளானது தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்களை சுவாசித்த 8 வாரங்களுக்கு பின் வெளிப்படத் தொடங்கும். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
* சுவாசிப்பதில் சிரமம்
* தொடர்ச்சியான மற்றும் வறட்டு இருமல்
* காய்ச்சல்
* அதிகப்படியான காய்ச்சல்
* விவரிக்க முடியாத உடல் சோர்வு மற்றும் களைப்பு
* எடை இழப்பு
* மூச்சுத்திணறல்
* கண், சருமம், மூக்கு அல்லது வாயில் எரிச்சல்
* இரவில் அதிகமாக வியர்ப்பது
* சரும அரிப்பு
பாப்கார்ன் நுரையீரல் ஏற்பட காரணம் என்ன?
மைக்ரோவேவ் பாப்கார்ன் தொழிற்சாலைகள் மற்றும் ஈ-சிகரெட்டுக்களில் காணப்படும் தீங்கு விளைவிக்கும் கெமிக்கல்கள், துகள்கள் மற்றும் புகைகளை சுவாசிக்கும் போது உயிரைப் பறிக்கும் பாப்கார்ன் நுரையீரல் பிரச்சனையை சந்திக்கக்கூடும். இது தவிர, இந்த பாப்கார்ன் நுரையீரல் குளோரின், அம்மோனியா, சல்பர் டைஆக்ஸைடு, நைட்ரஜன் டைஆக்ஸைடு, வெல்டிங் புகை, பார்மால்டிஹைடு மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்ற கெமிக்கல்களாலும் வரக்கூடும். பாப்கார்ன் நுரையீரல் வேறு பிற நோய்களையும் வரத் தூண்டலாம். அவை பின்வருமாறு:
* நிமோனியா, நுரையீரல் அழற்சி
* வைரல் தொற்றுகள்
* கொலாஜன் வாஸ்குலர் நோய்கள்
* ருமடாய்டு ஆர்த்ரிடிஸ்
* ஸ்டீவன் ஜான்சன் சிண்ட்ரோம்
பாப்கார்ன் நுரையீரல் வரும் அபாயத்தைக் குறைப்பது எப்படி?
நிபுணர்களின் கூற்றுப்படி, நுரையீரலை ஒவ்வொருவரும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அததுவும் பின்வரும் விஷயங்களை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
* புகைப்பிடிப்பதை நிறுத்துவது, புகைப்பிடிப்போரின் அருகில் இருப்பது மற்றும் மாசுபடுத்தப்பட்ட இடங்களில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
* நுரையீரலைத் தாக்கும் நோய்த்தொற்றுக்களில் இருந்து பாதுகாப்புடன் இருக்க வேண்டும்.
* நுரையீரல் ஆரோக்கியத்திற்காக மருத்துவர் பரிந்துரைக்கும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ள வேண்டும்.
* ஆபத்தான கெமிக்கல்கள் இருக்கும் இடங்களில் இருப்பவர்கள் அல்லது தொழிற்சாலைகளில் இருப்பவர்கள், பாதுகாப்பு கவசங்களை எப்போதும் அணிந்திருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications