75 வயதிலும் பிரதமர் மோடி ஃபிட்டாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதன் ரகசியம் 'இந்த' டயட் தாங்க..

PM Narendra Modi Fitness Routine In Tamil: இந்தியாவின் பிரதமரான நரேந்திர மோடி அவர்கள் இன்று தனது 75 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடி அவர்கள் 75 வயதிலும் இவ்வளவு ஃபிட்டாகவும், சுறுசுறுப்பாகவும் இருப்பதன் ரகசியம், அவரது ஒழுக்கமான உணவுப் பழக்கங்களும், தினமும் மேற்கொள்ளும் யோகா பயிற்சிகளும் தான். முக்கியமாக மோடி அவர்கள் அவ்வப்போது விரதத்தையும் மேற்கொள்வாராம். அப்படியான ஒழுக்கமான விரதமும் இவரது ஃபிட்னஸில் முக்கிய பங்கை வகிக்கிறது எனலாம்.

அமெரிக்காவைச் சேர்ந்த பாட்காஸ்டரும் AI ஆராய்ச்சியாளருமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் நடந்த ஒரு உரையாடலின் போது, பிரதமர் மோடி அவர்கள் தனது விரத முறைகள் குறித்தும், அந்த விரதம் எப்படி அவரது வாழ்க்கை முறையை வடிவமைத்தது என்பதைப் பற்றியும் மனம் திறந்து பேசினார்.

PM Narendra Modi Health Secrets Staying Fit And Active At 75

அந்த உரையாடலில், லெக்ஸ் ஃப்ரிட்மேன் பிரதமர் மோடியிடம், அவரது ஃபிட்னஸின் ரகசியம் குறித்து கேட்டார். அதற்கு பிரதமர் மோடி, தான் ஜூன் முதல் தீபாவளி வரையிலான காலத்தில் சதுர்மாஸ் என்ற விரதத்தைப் பின்பற்றுவதாக வெளிப்படுத்தினார். இந்த விரதத்தின் போது, நான் ஒரு நாளில் 1 வேளை மட்டுமே சாப்பிடுவேன் என்றும் மோடி கூறினார்.

இது தவிர பிரதமர் மோடி தனது நவராத்திரி விரதத்தைப் பற்றியும் தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, இந்த நவராத்திரி விரதத்தின் போது 9 நாட்களும் உணவுகளை முற்றிலும் தவிர்த்து, வெறும் சுடுநீரை மட்டும் குடிப்பதாக கூறினார். மேலும் தினந்தோறும் சுடுநீரையே தனது அன்றாட வழக்கத்தின் ஒன்றாக இருப்பதாகவும் கூறினார்.

கூடுதலாக, மோடி அவர்கள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் வட இந்தியாவில் கொண்டாடப்படும் சைத்ர நவராத்தியின் போதும் விரதத்தை மேற்கொள்வதாக கூறினார். அந்த விரதத்தின் போது அவர் ஒரு நாளைக்கு ஒருமுறை ஒரு வகை பழம் என ஒன்பது நாட்களும் எந்த பழத்தை முதல் நாளில் தேர்ந்தெடுத்து உட்கொள்கிறேனோ, அதே பழத்தை 9 நாட்களும் உட்கொள்வதாக கூறினார். உதாரணமாக, பப்பாளி பழத்தை தேர்ந்தெடுத்தால், அந்த பப்பாளி பழத்தை மட்டுமே 9 நாட்களும் சாப்பிடுவதாக கூறினார். இப்படியான பழக்கத்தை சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றி வருவதாகவும் மோடி அவர்கள் கூறினார்.

முக்கியமாக மோடி அவர்கள் தினமும் தவறாமல் யோகா பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த யோகா அவரது உடலை மட்டுமின்றி, மனதையும் தெளிவாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.

சுடுநீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்

* சுடுநீரை தினமும் குடிப்பதன் மூலம் செரிமான மண்டலத்தின் செயல்பாடு சீராக நடைபெறும்.
* தினமும் சுடுநீரை குடித்தால் உடலில் இருந்து நச்சுக்கள் நீக்கப்படும் மற்றும் சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்.
* முக்கியமாக சுடுநீரை உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவும்.
* அதோடு சுடுநீர் சுவாச மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகிறது.

பழ டயட்டின் நன்மைகள்

* பழ டயட்டில் அத்தியாவசிய வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவைகள் நிரம்பியிருப்பதால், இந்த டயட்டின் மூலம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி மேம்படும், எடை இழப்புக்கு உதவும், செரிமானம் மேம்படும், இதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் மற்றும் உடலும் நச்சுக்களின்றி சுத்தமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, September 17, 2025, 11:03 [IST]
Desktop Bottom Promotion