Latest Updates
-
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க.. -
1 கப் உளுந்து இருந்தா, ஈவ்னிங் டைம்-ல இப்படி செஞ்சு குடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
அன்னாசி பழம் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சுவாரஸ்யமான விஷயங்கள்!
Pineapple Benefits In Tamil: அன்னாசி பழத்தில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகிறது. அன்னாசி பழத்தில் மாங்கனீசு, ஃபோலேட், வைட்டமின் சி மற்றும் தாமிரம் போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அன்னாசி பழம் வெப்பமான பகுதிகளில் காணப்படும் பழமாகும்.
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற சத்து காணப்படுகிறது. இது புற்றுநோய் தடுப்பு, நோயெதிர்ப்பு சக்தி செயல்பாடு, குடல் ஆரோக்கியம் போன்ற பல்வேறு நோய்களுக்கு பயன்படுகிறது. அன்னாசி பழம் நம்முடைய செரிமான பிரச்சினைகளுக்கும் சிகிச்சை அளிக்க பயன்படுகிறது. சரி வாங்க அன்னாசி பழத்தின் கூடுதல் நன்மைகள் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.

அன்னாசி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
அன்னாசி பழம் நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளை வழங்க கூடியது. அன்னாசி பழத்தை நீங்கள் உட்கொண்டு வந்தால் இதய நோய், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் ஒட்டுமொத்த இறப்பு அபாயத்தையும் குறைக்க முடியும். ஆரோக்கியமான சரும பாதுகாப்பு, குறைந்த எடை போன்றவற்றிற்கு அன்னாசி பழம் உதவுகிறது. அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற சத்து காணப்படுகிறது. இது உங்களுக்கு எப்பொழுதும் சிறந்த ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
நீரிழிவு நோய்
அன்னாசி பழத்தில் நிறைய நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது டைப் 1 நீரிழிவு நோயை குறைக்க உதவி செய்யும். இது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த உதவுகிறது. ஒரு நடுத்தர அன்னாசி பழத்தில் சுமார் 13 கிராம் அளவிற்கு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. ஆண்களுக்கு ஒரு நாளைக்கு தேவையான நார்ச்சத்து அளவு 30-38 கிராம் நார்ச்சத்துக்கள் ஆகும். பெண்களுக்கு ஒரு நாளைக்கு 21-25 கிராம் அளவிற்கு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது.
இரத்த அழுத்தம்
அன்னாசி பழத்தில் பொட்டாசியம் நிறைய அளவு காணப்படுகிறது. இதில் உள்ள அதிகளவு பொட்டாசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். தேசிய உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து பரிசோதனைக் கணக்கெடுப்பின்படி, தினசரி பொட்டாசியம் தேவையாக 4700 மி. கி யை பரிந்துரைக்கின்றனர். அதிக அளவு பொட்டாசியம் உட்கொள்வது இறக்கும் அபாயத்தை 20% குறைக்கிறது.
வயது தொடர்பான மாகுலர் சிதைவு
ஒரு நாளைக்கு 3 அல்லது அதற்கு மேற்பட்ட அளவுகளில் நீங்கள் அன்னாசி பழத்தை எடுத்துக் கொள்ளும் போது கண்களில் ஏற்படும் மாகுலர் சிதைவு தடுக்கப்படுகிறது. அன்னாசி பழத்தில் நிறைய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை காணப்படுகிறது.
ஆஸ்துமா ஆபத்தை குறைக்கிறது
அன்னாசி பழம், பாதாமி, மாம்பழம் போன்ற பழங்கள் ஆஸ்துமா ஆபத்தை குறைக்க உதவுகிறது. எனவே ஆஸ்துமா அறிகுறிகளை குறைக்க இந்த பழங்களை எடுத்துக் கொண்டு வரலாம்.
செரிமான சக்தியை மேம்படுத்துகிறது
அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் காணப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
வீக்கத்தை குணப்படுத்த உதவுகிறது
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் என்ற சத்து காணப்படுகிறது. இது சருமத்தில் ஏற்படும் வீக்கம், சிராய்ப்பு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. தொண்டை, மூக்கு மற்றும் காது அறுவை சிகிச்சை காயங்களை குணப்படுத்தவும், சுளுக்கு, தசைநாண் அழற்சி போன்ற தசை காயங்களை குணப்படுத்தவும் ப்ரோமெலைன் உதவுகிறது.
அன்னாசி பழம் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள்
* அன்னாசிப்பழம்" என்ற சொல் ஸ்பானிஷ் வார்த்தையான பினாவிலிருந்து வந்தது. 1398 இல் பைன்கோனைக் குறிக்க இந்த வார்த்தை முதன் முதலாக பயன்படுத்தப்பட்டது.
* 1493 இல் கரீபியன் தீவான குவாடலூப்பில் ஐரோப்பியர்களால் அன்னாசி பழம் கண்டுபிடிக்கப்பட்டது.
* 16 ஆம் நூற்றாண்டில் தான் ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசிய ஆய்வாளர்கள் தங்கள் தென் பசிபிக், ஆப்பிரிக்க மற்றும் ஆசிய காலனிகளில் அன்னாசிப்பழத்தை அறிமுகப்படுத்தினர்.
* அன்னாசி பழம் மிகவும் அழிந்து போகக் கூடிய பழமாக இருந்ததால் அன்னாசி பழம் அந்தஸ்து மற்றும் சமூக வர்க்கத்தின் அடையாளமாக மாறியது.
* அமெரிக்காவில், அன்னாசிப்பழமானது முதன்முதலில் 18 ஆம் நூற்றாண்டில் தான் ஹவாயில் பயிரிடப்பட்டது.
* பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, பிரேசில், மெக்சிகோ மற்றும் சீனா ஆகியவை வணிக ரீதியாக அன்னாசி பழங்களை வளர்க்கும் நாடுகளாக உள்ளன.
* ஒரு அன்னாசி பழம் முதிர்ச்சி அடைய 3 ஆண்டுகள் வரை ஆகும்.
* அன்னாசி பழத்தின் அனைத்து பாகங்களும் பயன்படுகிறது. அன்னாசி பழத்தின் உட்பகுதி, தோல் போன்றவை ஆல்கஹால், விலங்கு உணவுகள் மற்றும் வினிகர் தயாரிக்க பயன்படுகிறது.
கருவுறுதலுக்கு பயன்படுகிறது
அன்னாசி பழம் ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்த பழமாகும். இது ப்ரீ ரேடிக்கலை எதிர்த்து போராட உதவுகிறது. கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் அன்னாசி பழத்தை சாப்பிட்டு வரலாம். மேலும் அன்னாசி பழத்தில் பீட்டா கரோட்டின், வைட்டமின்கள் சி, தாமிரம், ஃபோலேட் மற்றும் துத்தநாகம் போன்ற சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications