Latest Updates
-
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
மூங்கில் அரிசி கிச்சடி - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
உங்க கால்களில் இந்த மாதிரி இருக்கா? அப்ப உங்க கணையம் படுமோசமான நிலையில் உள்ளது என்று அர்த்தம்... உஷார்...
Pancreatitis Symptoms In Tamil: உடலில் உள்ள சில உறுப்புக்கள் மிகவும் முக்கியமான சில பணிகளைச் செய்யும். அதில் ஒன்று தான் கணையம். இந்த கணையம் அடிவயிற்றுப் பகுதியில் அமைந்துள்ளது. இது நாம் உண்ணும் உணவுகளை எரிபொருளாக மாற்ற செரிமான நொதிகளை உற்பத்தி செய்வது, இன்சுலின் போன்ற ஹார்மோன்களை உற்பத்தி செய்வது போன்ற முக்கிய பணிகளை செய்கிறது.
எனவே நாம் உண்ணும் உணவுகளில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைக்க வேண்டுமானால், அதற்கு கணையம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். ஆனால் கணையம் முக்கியமான பணிகளை செய்வதால், இதில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன.

குறிப்பாக கணையத்தில் ஏற்படும் விவரிக்க முடியாத ஒரு வீக்கம் தான் கணைய அழற்சி (pancreatitis). இந்த நிலையானது பித்தப்பை கற்கள், மது அருந்துவது, குறிப்பிட்ட மருந்துகளை உட்கொள்வது போன்ற பல்வேறு காரணிகளால் ஏற்படலாம்.
கணையத்தில் தீவிர பிரச்சனை இருந்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கவனித்து மருத்துவரை அணுகினால், நிலைமை மோசமாவதைத் தடுக்கலாம். குறிப்பாக கணையத்தில் தீவிர அழற்சி ஏற்பட்டிருந்தால் அல்லது சரியாக வேலை செய்யாவிட்டால், கால்கள் மற்றும் பாதங்களில் ஒருசில அறிகுறிகள் தென்படும். அந்த அறிகுறிகள் என்னவென்பதை இப்போது காண்போம்.
கால் விரல்களில் வீக்கம்
கால் விரல்கள் திடீரென்று வீக்கமடைந்து பெரிதாக இருந்தால், கணையம் ஆரோக்கியமான நிலையில் இல்லை என்று அர்த்தம். குறிப்பாக இம்மாதிரியான அறிகுறி உடலில் உள்ள ஒரு தீவிரமான பிரச்சனையைக் குறிக்கிறது. அதுவும் இம்மாதிரி ஒருவருக்கு வருகிறது என்றால், அதற்கு முதன்மையான காரணம், கணையத்தில் அழற்சி ஏற்பட்டிருப்பதாகவே இருக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, கணைய அழற்சியுடன் தொடர்புடைய கால் விரல்களில் ஏற்படும் வீக்கமானது அதிகப்படியான இரத்த ஓட்டத்தினால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
ஊதா நிற கால் விரல்கள்
கால் விரல்கள் ஊதா நிறத்தில் இருக்கும் நிலையை அக்ரோசைனோசிஸ் (crocyanosis) என்று அழைப்பர். இதுவும் ஒரு தீவிரமான சுகாதார நிலையைக் குறிக்கிறது. இந்நிலையில் மோசமான இரத்த ஓட்டத்தினால் கால் விரல்கள் ஊதா நிறத்தில் மாறுகின்றன. இம்மாதிரியான நிலை ஏற்பட பல காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் கணைய அழற்சி. எனவே உங்கள் கால் விரல்கள் ஊதா நிறத்தில் மாறுவதைக் கண்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்யுங்கள்.
விவரிக்க முடியாத கால்கள் மற்றும் பாத வீக்கம்
அடிக்கடி பாதங்கள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுகிறதென்றால், முதலில் மருத்துவரிடம் சென்று கணையத்தை பரிசோதனை செய்யுங்கள். ஏனெனில் இரத்த ஒட்டத்தில் அழற்சியை ஏற்படுத்தும் கெமிக்கல்கள் கலந்திருக்கும் போது தான் கால்கள் மற்றும் பாதங்களில் வீக்கம் ஏற்படுகிறது. ஒருவரது கணையம் நல்ல ஆரோக்கியமான நிலையில் இல்லாவிட்டால், இம்மாதிரியான கால் வீக்கத்தை சந்திக்கக்கூடும்.
வலிமிக்க கால்கள் மற்றும் பாதங்கள்
உங்கள் கால்கள் மற்றும் பாதங்களில் கடுமையான வலியை அனுபவிக்கிறீர்களா? அப்படியானால் உங்கள் கணையத்தில் அழற்சி ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. கணைய அழற்சியானது கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகளை சேதமடையச் செய்து, கடுமையான வலியை ஏற்படுத்தலாம். மேலும் இந்த வலியானது கால்கள் மற்றும் பாதங்களில் மோசமான இரத்த ஓட்டத்தின் காரணமாகவும் ஏற்படலாம். எனவே இம்மாதிரியான அறிகுறியை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
சிவந்த பாதங்கள் மற்றும் கால்கள்
கணைய அழற்சி ஏற்பட்டிருந்தால் வெளிப்படும் மற்றொரு எச்சரிக்கை அறிகுறி தான் பாதங்கள் மற்றும் கால்கள் சிவந்து இருப்பது. ஒருவரது கணையத்தில் தீவிர அழற்சி ஏற்பட்டிருக்கும் போது, அது கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கால்களை சிவக்க செய்யலாம். ஆகவே இந்த அறிகுறியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











