உடம்பில் இந்த அறிகுறிகள் தெரிஞ்சா.. கணைய புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தமாம்.. உஷார்...

Pancreatic Cancer Symptoms In Tamil: உலகளவில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக ஏராளமான மக்களின் உயிரைப் பறிக்கும் கொடிய நோய் தான் புற்றுநோய். இந்த புற்றுநோய் நமது உடலில் உள்ள செல்கள் மரபணு மாற்றங்களுக்கு உட்படும் போது உருவாகிறது. அவ்வாறு மாற்றங்களுக்கு உள்ளாகும் செல்கள் கட்டுப்பாடின்றி வளர்ச்சியடைந்து கட்டிகளாக மாறுவதோடு, பிரிவுக்கும் வழிவகுக்கிறது. இப்படி வளரும் கட்டிகள் மற்ற திசுக்களை ஆக்கிரமித்து பரவத் தொடங்குகிறது. அப்படி கணையம் வரை பரவும் புற்றுநோய் தான் கணையப் புற்றுநோய்.

நமது உடலில் நடக்கும் செரிமான செயல்முறையில் கணையம் முக்கிய பங்கை வகிக்கிறது. இந்த கணையம் நமது வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு பின்னால் அமைந்துள்ளது. இது நமது கையளவு தான் இருக்கும். செரிமானத்தின் போது கணையம் தான் கணைய நீர் என்னும் செரிமான நொதிகளை உருவாக்குகிறது.

Pancreatic Cancer Symptoms Early Warning Signs of Pancreatic Cancer In Tamil

இந்த நொதிகள் தான் நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்புக்கள், ஸ்டார்ச் போன்றவற்றை உடைக்கின்றன. இவ்வளவு முக்கியமான உறுப்பிலும் புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளது. ஆனால் இந்த மிகச்சிறிய கணையத்தில் புற்றுநோய் செல்கள் வளர்ந்தால், அது நமக்கு ஒருசில அறிகுறிகளை வெளிப்படுத்தும். ஆனால் அந்த அறிகுறிகள் பெரும்பாலும் புறக்கணிக்கும் வகையில் இருக்கும்.

இருப்பினும் ஒருசில அறிகுறிகளை தொடர்ந்து சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். கீழே கணைய புற்றுநோய் இருந்தால், வெளிப்படும் சில ஆரம்ப கால அறிகுறிகள் மற்றும் இந்த புற்றுநோய்க்கான காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை சந்தித்தால் தாமதிக்காமல் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

கணைய புற்றுநோய் வருவதற்கான காரணங்கள்

கணைய புற்றுநோய் ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் வரலாம். அவையாவன:

* புகைப்பிடிப்பது
* சர்க்கரை நோய்
* நாள்பட்ட கணைய அழற்சி அல்லது கணைய வீக்கம்
* கணைய புற்றுநோயின் குடும்ப வரலாறு
* சில மரபணு கோளாறுகள்

கணைய புற்றுநோயின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள்:

1. எடை இழப்பு

எந்த ஒரு முயற்சியும் இல்லாமல் திடீரென்று உடல் எடை குறைகிறதா? அப்படியானால் அப்போது சந்தோஷப்படாமல் உடனே அதற்கான காரணம் என்னவென்பரதை அறிந்து கொள்ளுங்கள். கணையத்தில் புற்றுநோய் இருந்தால், அது உடலின் ஜீரணிக்கும் திறனைப் பாதிப்பதோடு, ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதையும் பாதிக்கும்.

2. மேல் வயிற்று வலி மற்றும் அசௌகரியம்

கணைய புற்றுநோய் ஒருவருக்கு இருந்தால், அடிக்கடி மேல் வயிறு மற்றும் முதுகு பகுதியில் வலியை சந்திக்க நேரிடும். அதுவும் இந்த வலியானது மிதமானதாகவோ அல்லது ஒருவித வயிற்று அசௌகரியம் போன்றோ இருக்கலாம். மேலும் அடிக்கடி இந்த வலி வந்து போகலாம். எனவே இப்படி மேல் வயிற்றுப் பகுதியில் வலியை அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

3. பசியின்மை

நீங்கள் சிறிது உணவை உட்கொண்டாலும், வயிறு நிரம்பியது போன்று உள்ளதா அல்லது பசியே எடுக்காமல் உள்ளதா? அப்படியானால் அது கணைய புற்றுநோயைக் குறிக்கலாம். அதுவும் புற்றுநோய் கட்டிகள் கணையத்தில் இருந்தால், அது அழுத்தத்தைக் கொடுத்து, செரிமான செயல்பாட்டை பாதிக்கலாம்.

4. உடல் சோர்வு

ஒருவருக்கு உடல் சோர்வு பல்வேறு காரணங்களால் வரலாம். அதில் பொதுவாக அதிகமாக வேலை செய்தால் உடல் சோர்வை சந்திக்க நேரிடும். ஆனால் நன்கு ஓய்வை எடுத்த பின்னரும், ஒருவர் மிகுந்த உடல் சோர்வை சந்தித்தால், கணையத்தில் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை இருக்க வாய்ப்புள்ளது. எனவே உடல் சோர்வை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.

5. மஞ்சள் காமாலை

உங்கள் கண்கள் மற்றும் சருமத்தின் நிறம் மஞ்சள் நிறத்தில் இருப்பதை உணர்கிறீர்களா? எப்போது ஒருவரது பித்தநாளத்தில் அடைப்பு ஏற்பட்டு, கல்லீரலில் பித்தம் தேங்குகிறதா, அப்போது மஞ்சள் காமாலை ஏற்படும். அதுவும் கணையத்தில் புற்றுநோய் கட்டி வளர்ந்திருந்தால், அதனால் கூட இப்படியான நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. எனவே சரும நிறம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருந்து, சிறுநீரின் நிறம் அடர் நிறத்திலும், மலம் வெளிரிய நிறத்திலும் இருந்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

6. சர்க்கரை நோய்

ஒருவருக்கு 50 வயதிற்கு பின் சர்க்கரை நோய் ஏற்பட்டால், அது கணைய புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஏனெனில் இந்த புற்றுநோய் கட்டி கணையத்தின் இன்சுலின் உற்பத்தி செய்யும் திறனைப் பாதித்து, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் உடனே மருத்துவரை அணுகுங்கள். ஆரம்ப கட்டத்திலேயே புற்றுநோய்க்கு மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொண்டு வந்தால், சிகிச்சை அளிக்க எளிமையாக இருக்கும். மேலும் புற்றுநோயால் உயிரிழப்பு ஏற்படும் அபாயத்தையும் தடுக்கலாம். எனவே உடலில் வித்தியாசமான அறிகுறிகளை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.

FAQs
உடலில் கணையம் எங்கு அமைந்துள்ளது?

கணையம் நமது வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு பின்னால் அமைந்துள்ளது. இது நமது கையளவு தான் இருக்கும். செரிமானத்தின் போது கணையம் தான் கணைய நீர் என்னும் செரிமான நொதிகளை உருவாக்குகிறது.

கணைய புற்றுநோய்க்கான காரணங்கள் என்ன?

* புகைப்பிடிப்பது

* சர்க்கரை நோய்

* நாள்பட்ட கணைய அழற்சி அல்லது கணைய வீக்கம்

* கணைய புற்றுநோயின் குடும்ப வரலாறு

* சில மரபணு கோளாறுகள்

கணைய புற்றுநோயைத் தவிர்ப்பது எப்படி?

* மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்.

* பணியிடத்தில் ரசாயனங்களுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும்.

* பழங்கள், காற்கறிகள் போன்றவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும்.

* சர்க்கரை பானங்கள், மாட்டிறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியைத் தவிர்க்க வேண்டும்.

BoldSky Lifestyle

Desktop Bottom Promotion