Latest Updates
-
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்!
மலச்சிக்கலுக்கு குட்-பை சொல்லணுமா? இந்த 3 பொருளை தொடர்ந்து 3 நாள் சாப்பிடுங்க.. கூறும் ஊட்டச்சத்து நிபுணர்..
Constipation Relief Tips: உலகளவில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனை தான் மலச்சிக்கல். இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு நிறைய பேர் மருந்தகங்களில் விற்கப்படும் மலமிளக்கிகளை வாங்கி உட்கொள்கிறார்கள். ஆனால் இப்படி அடிக்கடி மலச்சிக்கலுக்கு மலமிளக்கிகளைப் பயன்படுத்தினால், உடலின் இயற்கை செயல்முறை சீர்குலைந்து, குடலை எரிச்சலடையச் செய்யும்.
எனவே எப்போதும் மலச்சிக்கலுக்கு எடுத்ததும் மருந்தகங்களில் விற்கப்படும் மலமிளக்கிகளை வாங்கிப் பயன்படுத்தாமல், இயற்கை வழிகளில் சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். அதுவும் மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல நிவாரணமளிக்கும் நார்ச்சத்து நிறைந்த பழங்கள், விதைகள் மற்றும் நட்ஸ், மசாலா பொருட்கள் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்ப்பதன் மூலம், குடலியக்கம் மேம்பட்டு, மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு நல்ல தீர்வை அளிக்கும் ஒரு அற்புதமான இயற்கை தீர்வை சுகாதார ஊட்டச்சத்து நிபுணரான குஷி சாப்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் "மலச்சிக்கலைப் போக்க ஒரு கிவி பழத்தை துண்டுகளாக்கி, அவற்றுடன் ஒரு ஸ்பூன் நீரில் ஊற வைத்த சியா விதைகள் மற்றும் 1 சிட்டிகை பட்டை தூளை சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்றும், அதுவும் தொடர்ந்து 3 நாட்கள் தினமும் உட்கொண்டு வந்தால், மலச்சிக்கலுக்கு குட்-பை சொல்லலாம்" என்றும் கூறியிருந்தார்.
இது எப்படி வேலை செய்கிறது?
தோலுடனான கிவி
குஷி சாப்ராவின் கூற்றுப்படி, "கிவி பழத்தில் ஆக்டினிடின் என்ற இயற்கை நொதி நிறைந்துள்ளது. இது புரோட்டீனை உடைக்கவும், குடலியக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதுவும் இந்த பழத்தின் தோலில் உள்ள கரையாத நார்ச்சத்து மலத்தின் அளவை சேர்க்கிறது. அதே வேளையில் அதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து மலத்தை மென்மையாக்கி எளிதில் வெளியேறச் செய்கிறது. இதனால் மலச்சிக்கல் குணமாகிறது."
சியா விதைகள்
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சியா விதைகள் மிகவும் சிறந்தவை. ஏனெனில் அவற்றில் உள்ள நார்ச்சத்து குடல் நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை மேம்படுத்தி, குடலியக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகின்றன. அதுவும் சியா விதைகளை நீரில் ஊற வைக்கும் போது, அவற்றின் எடையை விட 10 மடங்கு வரை உறிஞ்சி, குடலை உயவூட்டுவதோடு மலம் கழிப்பதை எளிதாக்கும் ஜெல் போன்ற அமைப்பை உருவாக்குகின்றன. இவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ப்ரீபயோடிக் நார்ச்சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை மேம்படுத்த உதவுகின்றன என்று ஊட்டச்சத்து நிபுணர் கூறினார்.
பட்டை
ஊட்டச்சத்து நிபுணர் குஷி சாப்ராவின் கூற்றுப்படி, பட்டையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவை செரிமானத்தை அதிகரிப்பது மட்டுமின்றி, குடலியக்கத்தையும் ஆதரிக்கிறது. அதுவும் இது வீக்கம், அசௌகரியம் போன்ற பொதுவான செரிமான பிரச்சனைகளைத் தணிக்கிறது.
இந்த மூன்றையும் ஒன்றாக எடுக்கும் போது அவை பெருங்குடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்கிறது மற்றும் குடல் பாக்டீரியாக்களுக்கு ஊட்டமளிகிறது. அதோடு, இது மலமிளக்கிகள் எதுவும் எடுக்காமல் செரிமானத்தை இயற்கையான முறையில் சீராக்குகிறது.
குறிப்பாக இந்த கலவையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்யும் போது ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஆனால் இந்த முயற்சியை மேற்கொள்ளும் போது, போதுமான அளவு உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். அதாவது நாள் முழுவதும் அதிக நீரை அருந்த வேண்டும் என்றும் ஊட்டச்சத்து நிபுணர் குறிப்பிட்டிருந்தார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications