Latest Updates
-
சிக்கன் வாங்குனா எப்பவும் குழம்பு செய்யாம, ஒருவாட்டி ரசம் செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி கார குழம்பு வைச்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்தியாவின் 'காபி தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? நம்ம பக்கத்துக்கு ஊர்தானா? -
அக்டோபர் 09-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
இரத்த சர்க்கரை அதிகரிக்காமல் பண்டிகை கால இனிப்புக்களை ரசிப்பதற்கான 7 சிறந்த வழிகள்! -
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த பிரச்சனைகளை அதிகம் சந்திக்குறீங்களா? அப்ப நரம்பியல் மருத்துவரை சந்திக்கும் நேரம் வந்துடுச்சுன்னு அர்த்தம்
Nerve Problem Symptoms: இன்றைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையினால் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளை தினசரி சந்தித்து வருகிறோம். இவற்றில் சில நமது உடலுக்கு மற்றும் மனதிற்கு கொடுக்கப்படும் அதிகப்படியான அழுத்தத்தினால் ஏற்பட்டாலும், சில தீவிரமான பிரச்சனைகளின் அறிகுறியாக இருக்கலாம்.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கும் சிகிச்சை அளிக்க ஒவ்வொரு மருத்துவர்கள் உள்ளனர். நிறைய பேருக்கு எந்த பிரச்சனைக்கு எந்த மருத்துவரை அணுக வேண்டும் என்பது தெரியவில்லை.

நமது மூளை மற்றும் நரம்பு மண்டலம் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பவர் தான் நரம்பியல் மருத்துவர்கள். இந்த மருத்துவர்கள் மூளை, தண்டுவடம், நரம்புகளின் நிலைகளை கண்டறிவதில் இருந்து, அவற்றிற்கு திறம்பட சிகிச்சை அளிப்பது வரை நன்கு அறிந்திருப்பார்கள்.
ஆனால் எந்த மாதிரியான அறிகுறிகள் அல்லது பிரச்சனைகளை சந்தித்தால், இந்த நரம்பியல் மருத்துவரை அணுகுவது என்று நிறைய பேருக்கு தெரியாது. எனவே கீழே ஒருசில அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த அறிகுறிகளை நீங்கள் அதிகமாக சந்தித்தால், நீங்கள் நரம்பியல் மருத்துவரை சந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
1. தொடர்ச்சியான அல்லது தாங்க முடியாத தலைவலி
தலைவலியில் பல வகைகள் உள்ளன. சிலருக்கு தலைவலி வந்ததும் சிறிது நேரம் சரியாகிவிடும். ஆனால் அந்த தலைவலி தொடர்ச்சியாகவோ அல்லது தாங்க முடியாத அளவில் இருந்தால், ஒற்றை தலைவலி, க்ளஸ்டர் தலைவலி அல்லது மூளை கட்டி போன்ற நரம்பியல் தொடர்பான பிரச்சனைகள் இருக்க வாய்ப்புள்ளது என்று அர்த்தம். அதுவும் தற்போது ஒற்றை தலைவலியானது மிகவும் பொதுவாகிவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் சுமார் 12 சதவீதம் மக்கள் ஒற்றை தலைவலியால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 17 சதவீதம் பெண்கள் மற்றும் 6 சதவீதம் ஆண்கள். மறுபுறம் மூளைக்கட்டி மிகவும் அரிதானவை. இருப்பினும், கடுமையான அல்லது தாங்க முடியாத தலைவலியை சந்தித்தால், தாமதிக்காமல் நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள்.
2. நாள்பட்ட வலி
நீங்கள் நீண்ட நாட்களாக கை, கால் நரம்புகளில் மிகுந்த வலியை அனுபவித்தால், அதை சற்றும் புறக்கணிக்காதீர்கள். ஏனெனில் அவை நரம்பு மண்டலத்தில் உள்ள பெரிய பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். இதைப் புறக்கணித்தால், பின் நரம்புகள் சேதமடைந்து சரிசெய்ய முடியாத அளவில் போய்விடும்.
3. தலைச்சுற்றல்
அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சனையை சந்திக்கிறீர்களா? தலைச்சுற்றல் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு அறிகுறியாக இருக்கலாம். அதுவும் ஒருவர் அடிக்கடி சந்தித்தால், வெஸ்டிபுலர் கோளாறுகள், மல்டிபிள் ஸ்களீரோசிஸ் அல்லது பக்கவாதம் போன்ற நரம்பியல் நிலைமைகள் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. இப்பிரச்சனைகள் அனைத்தும் ஒருவரை முடக்கிவிடலாம் அல்லது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தலாம். எனவே தலைச்சுற்றலை அடிக்கடி அனுபவித்தால், தாமதிக்காமல் நரம்பியல் மருத்துவரை அணுகுங்கள்.
4. மரத்து போவது அல்லது கூச்சஉணர்வு
சில சமயங்களில் கைகள் அல்லது கால்கள் மரத்துப் போகும் அல்லது கூச்ச உணர்வு அல்லது ஊசியால் குத்துவது போன்ற உணர்வை சந்திக்க நேரிடும். இப்படி ஏற்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமாக நரம்பியல் பிரச்சனைகள் இருக்க நிறைய வாய்ப்புள்ளது. எனவே வழக்கத்திற்கு மாறாக கால், கைகள் மரத்துப் போவதை உணர்ந்தாலோ அல்லது ஊசியால் குத்துவதை போன்று உணர்ந்தாலோ, நரம்பு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். அதுவும் கார்பல் டன்னல் சிண்ட்ரோம், பெரிஃபெரல் நியூரோபதி அல்லது முதுகுத் தண்டு பிரச்சினைகள் இருக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் உடனே நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும்.
5. நினைவாற்றல் பிரச்சனைகள்
பொதுவாக 60 வயதிற்கு மேல் நினைவாற்றல் பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். இப்படி நினைவில் எதையும் வைத்துக் கொள்ள முடியாமல் போவது அல்சைமர் அல்லது பிற வகையான டிமென்ஷியாவின் முதன்மையான அறிகுறியாகும். எனவே வழக்கத்திற்கு மாறாக உங்களுக்கு ஞாபக மறதி அதிகமாக இருந்தால், எதையும், யாரையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போனால், தாமதிக்காமல் நரம்பியல் நிபுணரை அணுகி பரிசோதனை செய்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுங்கள்.
6. வலிப்பு
திடீரென்று வலிப்பு வந்தால் அல்லது அடிக்கடி வலிப்பு வந்தால், தாமதிக்காமல் நரம்பியல் மருத்துவரை அணுக வேண்டும். ஒருவருக்கு வலிப்பானது மூளையில் ஏற்படும் அசாதாரண மின் செயல்பாட்டின் திடீர் விளைவாகும். வலிப்பு ஒருவரது சுயநினைவை இழக்கச் செய்யும். வலிப்பு தாக்கத்தை ஒருவர் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், பின் நிலைமை மோசமாகி இறுதியில் உயிரையே இழக்க நேரிடலாம். எனவே இம்மாதிரியான சூழ்நிலையில் நரம்பியல் மருத்துவரை அணுகி, காரணங்களை அறிந்து சரியான சிகிச்சையை மேற்கொள்ளத் தொடங்குங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
