Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் பொரிச்ச குழம்பு ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - டக்கரா இருக்கும் -
புதாதித்ய ராஜயோகம்: இன்று முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 6 ராசிக்கு பணம் கொட்டும்.. தொழில் செழிக்கும்.. -
புரட்டாசி மாதம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு புது வாழ்க்கை கிடைக்கும் அதிர்ஷ்ட மாதமாக இருக்கப்போகுதாம் -
1 பாக்கெட் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. டேஸ்ட் அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 18,, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஆபத்துகள் சூழும் கடினமான நாளாக இருக்குமாம் -
சனி-சூரியன் உருவாக்கிய சமசப்தம யோகம்: இன்று முதல் அடுத்த 30 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
விநாயகர் சதுர்த்திக்கு வாங்குன விளாங்காய் இருக்கா? அப்ப இப்படி சட்னி செய்யுங்க.. தோசைக்கு அள்ளும்.. -
உங்க வாயைச் சுற்றி ரொம்ப கருப்பா இருக்குதா? அப்ப இந்த 7 ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க.. -
குழம்பு மிளகாய் பொடி இப்படி அரைச்சு வெச்சுக்கோங்க.. சைவம், அசைவம்-ன்னு எல்லாத்துக்கும் யூஸ் பண்ணலாம்.. -
காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டிய டாப் 15 உணவுகள்!
மிகுந்த வேதனையை அளிக்கும் சில கொடிய நரம்பு நோய்கள்!
பொதுவாக நரம்பு சம்பந்தமான நோய்கள் மிகவும் ஆபத்தானவை. மிக சாதாரண பிரச்சினைகள் காரணமாகக்கூட, நரம்பு நோய்கள் ஏற்படலாம். அவை வெகு சில நாட்களுக்குள் ஆபத்தையும் ஏற்படுத்தலாம். அதனால்தான் உங்களுடைய உடலை ஒரு கோயிலாகக் கருதி அதை வழிபடுங்கள் என்று பொியோா் கூறுகின்றனா்.
நரம்பு சம்பந்தமான நோய்கள் வந்தால், அவை ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் சீரழித்துவிடும். உடலின் உறுதியைக் குலைத்துவிடும். உடலில் நடுக்கத்தை ஏற்படுத்தும். ஆகவே நரம்பு சம்பந்தமான நோய்களை ஒவ்வொருவரும் தொிந்து வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். ஆகவே இந்த பதிவில் சில நரம்பு சம்பந்தமான நோய்களைப் பற்றி விாிவாகப் பாா்க்கலாம்.

1. கண்ணைச் சுற்றியுள்ள தலைவலி (Cluster Headaches)
தலையின் பாதிப் பகுதியில் அதாவது கண்களைச் சுற்றி அல்லது முகத்தைச் சுற்றி வலி இருந்தால், அது கண்ணைச் சுற்றியுள்ள தலைவலி என்று அழைக்கப்படுகிறது. இந்த தலைவலியானது தலையின் ஒரு குறிப்பிட்ட மூலையில் ஏற்படலாம் அல்லது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஏற்படலாம்.
கண்களுக்கு முன் நேரடியாக விளக்கு வெளிச்சம் பட்டாலோ அல்லது வாழ்க்கை முறையில் குறைபாடுகள் இருந்தாலோ இந்த தலைவலி ஏற்படலாம். மேலும் தமனிகள் விாிவடைவதாலும் அல்லது வீக்கம் அடைவதாலும் இந்த தலைவலி ஏற்படலாம்.
2. நடுக்குவாதம் (Parkinson's Disease)
நடுக்குவாதம் என்பது, மைய நரம்பு மண்டலத்துடன் தொடா்புடைய மூளைக் கோளாறு ஆகும். இதன் காரணமாக நரம்புகளில் நடுக்கமும், விறைப்புத் தன்மையும் ஏற்படுகின்றன. மேலும் உடலின் ஒருங்கமைவிலும், வலுதாங்கும் ஆற்றலிலும் குறைபாடு ஏற்படும்.
நடுக்குவாதத்தின் அறிகுறிகள் மெதுவாகத் தொடங்கும். ஆனால் நாளடைவில் மிகவும் மோசமான நிலையை அடையும். கைகளில் நடுக்கம் ஏற்படுதல் மற்றும் உடல் இயக்கங்களில் ஏற்படும் குறைவு போன்றவை நடுக்குவாதத்தின் அறிகுறிகள் ஆகும். நடுக்குவாதம் அதிகாித்தால், நடப்பதிலும், பேசுவதிலும் குறைபாடு அதிகாிக்கும்.
3. மூளைக் காய்ச்சல் (Meningitis)
மூளைக் காய்ச்சல் என்பது, நரம்புகள் வீக்கமடைவதால் ஏற்படும் நோய் ஆகும். மூளை மற்றும் தண்டுவடம் ஆகியவற்றைச் சுற்றி இருக்கும் சவ்வுகளில் ஏற்படும் நோயே மூளைக் காய்ச்சல் ஆகும். பொதுவாக மூளை மற்றும் தண்டுவடத்தைச் சுற்றியுள்ள திரவத்தில் நோய்த் தொற்று ஏற்படும் போது, நரம்பில் வீக்கம் ஏற்படுகிறது.
4. வலிப்பு நோய் (Epilepsy)
கை கால் வலிப்பு என்பது மூளை சம்பந்தமான ஒரு நரம்பியல் நோய் ஆகும். இந்த நோயின் காரணமாக ஒருவருக்கு மீண்டும் மீண்டும் வலிப்பு ஏற்படலாம். மூளையில் உள்ள நரம்பு செல்களுக்கு இடையே இருக்கும், இயல்பான இணைப்புகளை சீா்குலைக்கும் காரணிகளால் வலிப்பு ஏற்படலாம். அதோடு கடுமையான காய்ச்சல், இரத்த கொதிப்பு, ஆல்கஹால் அல்லது போதை பொருள்கள் அல்லது மூளை பக்கவாதம் போன்றவற்றினாலும் வலிப்பு நோய் ஏற்படலாம்.
5. முதுமறதி நோய் (Alzheimer's Disease)
மூளையில் இருக்கும் செல்களில் ஏற்படும் மாற்றங்கள் மூலமாக முதுமறதி நோய் ஏற்படுகிறது. இதில் நரம்பு செல்களுக்குள் நாா்ப்பொருள்கள் சிக்கிக் கொள்கின்றன. இதைத் தவிா்த்து, அசிடைல்கொலின் (acetylcholine), நோர்பைன்ப்ரைன் (norepinephrine), செரோடோனின் ஹாா்மோன் (serotonin) மற்றும் சோமாடோஸ்டாடின் (somatostatin) போன்றவை பாதிக்கப்பட்டாலும் முதுமறதி நோய் ஏற்படுகிறது.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
