Latest Updates
-
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க..
90% மக்கள் புறக்கணிக்கும் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறிகள்.. உங்களுக்கு இந்த அறிகுறி இருக்கா-ன்னு கவனிங்க..
Cancer Symptoms In Tamil: உலகளவில் இதய நோய்க்கு அடுத்தபடியாக பெரும்பாலான மக்களின் இறப்புக்கு காரணமாக இருப்பது புற்றுநோய் தான். 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 10 மில்லியன் மக்கள் இந்த கொடிய புற்றுநோயால் இறந்துள்ளனர். இப்படி புற்றுநோயால் மக்கள் அதிகமாக இறப்பதற்கு முக்கிய காரணம், இன்னும் நிறைய பேருக்கு புற்றுநோயின் அறிகுறிகள் தெரியாமல் இருப்பது தான்.
அதுவும் பெரும்பாலான புற்றுநோயின் அறிகுறிகள் நாம் தினசரி சந்திக்கும் ஒருசில ஆரோக்கிய பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். இதன் காரணமாக பலரும் அந்த புற்றுநோயின் அறிகுறிகளை சாதாரணமாக நினைத்து புறக்கணித்துவிடுகிறார்கள். பின் முற்றிய நிலையில் மருத்துவரை அணுகி, சிகிச்சை அளிக்க முடியாமல் மரணத்தை பரிசாக பெறுகிறார்கள்.

உலகில் மார்பகம், நுரையீரல், குடல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயால் தான் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த கொடிய நோளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை மேற்கொண்டால், குணமாக்கிவிட முடியும். சில சமயங்களில் புற்றுநோய்களின் சில அறிகுறிகள் கவனிக்கக்கூடிய வகையில் இருக்காது.
ஆனால் தற்போதைய மோசமான காலகட்டத்தில் சிறு ஆரோக்கிய பிரச்சனைகளையும் ஆரம்பத்திலேயே கவனித்து, மருத்துவரை அணுகி பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. அதுவும் ஒரே வேளையில் திடீரென்று காரணமின்றி ஒன்றிற்கு மேற்பட்ட தெரியத் தொடங்கினால், உடனே மருத்துவரை அணுக வேண்டும். இப்போது 90 சதவீத ஆண்கள் மற்றும் பெண்கள் சாதாரணம் என்று நினைத்து புறக்கணிக்கும் சில புற்றுநோயின் அறிகுறிகளைக் காண்போம். உங்களிடம் இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
எலும்பு வலி
அமெரிக்கன் புற்றுநோய் சொசைட்டியின் கூற்றுப்படி, ஒருவர் தங்கள் எலும்பு அல்லது மூட்டுக்களில் கடுமையான அல்லது மந்தமான வலியை அடிக்கடி திடீரென்று அனுபவித்தால், அந்நபருக்கு எலும்பு புற்றுநோய் இருக்க வாய்ப்புள்ளது.
அதுவும் இந்த மாதிரியான தொடர்ச்சியான எலும்பு வலி மோசமாகி இரவு நேரத்திலும் அவதிப்பட வைக்கும். அதுவும் இந்த எலும்பு வலியானது மூட்டுகளுக்கு அருகில் இருந்தால், பின் நகர்வதே கடினமாகிவிடும். எனவே எலும்புகளில் காரணமின்றி வலியை அனுபவித்தால், தாமதிக்காமல் உடனே மருத்துவரை அணுகுங்கள்.
விழுங்குவதில் சிரமம் மற்றும் வயிறு நிறைந்த உணர்வு
நீங்கள் உணவுகளையோ, நீரையோ விழுங்குவதில் சிரமத்தை சந்திக்கிறீர்களா? எப்போதும் வயிறு நிறைந்த உணர்வு உள்ளதா? அப்படியானால், நீங்கள் டிஸ்ஃபேஜியா, வலிமிகுந்த நிலையில் பாதிக்கப்பட்டிருக்கலாம். இப்பிரச்சனையைக் கொண்டவர்களுக்கு விழுங்க முடியாது. அதற்காக விழுங்க முடியாமல் அவதிப்பட்டால், உடனே பயப்படத் தேவையில்லை.
சில சமயங்களில் ஒருவர் வேகமாக சாப்பிட்டாலோ அல்லது உணவை நன்கு மென்று விழுங்காமல் இருந்தாலோ, இப்படியான நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இருப்பினும், இதே மாதிரி அடிக்கடி சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள். நிபுணர்கள் கூற்றுப்படி, உணவுக்குழாய் புற்றுநோய் இருந்தால், அது டிஸ்ஃபேஜியாவை ஏற்படுத்தும். எனவே கவனமாக இருங்கள்.
உடல் அரிப்பு
ஒருவருக்கு சரும அரிப்புக்களானது சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் அல்லது அழற்சிகளால் ஏற்படலாம். ஆனால் இம்மாதிரியான அறிகுறிகள் இரத்த புற்றுநோய் அல்லது லுகேமியாவின் அறிகுறியும் கூட. இந்நிலையில் அசாதாரண இரத்த செல்கள் பிளெட்டுலெட்டுகளின் உற்பத்தியில் இடையூறை ஏற்படுத்தி, சருமத்தில் அரிப்பையும், இரத்தக் கசிவையும் ஏற்படுத்தும்.
அதுவும் இரத்த புற்றுநோயாக இருந்தால், சருமத்தில் சிவப்பு, ஊதா அல்லது ப்ரௌன் நிறத்தில் சிறிய அளவிலான புள்ளிகளைக் காணக்கூடும். எனவே இந்த அறிகுறிகள் தெரிந்தாலும், அசால்ட்டாக இருக்காதீர்கள்.
கண் வலி
கண் புற்றுநோய்கள், கண் இமைகள் மற்றும் கண்ணீர் குழாய்கள் போன்ற கண் பந்துகளின் அருகில் உள்ள செல்களில் வளரத் தொடங்கும். ஆனால் கண் புற்றுநோய்கள் மிகவும் அரிதானவை என்றலும், கண்களில் சிறு பிரச்சனைகள் வந்தாலும், உடனே மருத்துரை அணுகுங்கள்.
நெஞ்செரிச்சல்
அமெரிக்கன் புற்றுநோய் சொசைட்டியின் கூற்றுப்படி, நெஞ்செரிச்சல் அல்லது தொடர்ச்சியான மற்றும் நிலையான வலியை நெஞ்சு பகுதியில் அனுபவித்தால், அது, உணவுக்குழாய் அல்லது வயிற்று புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஆகவே நெஞ்செரிச்சல் பிரச்சனையை அதிகம் சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
விரைகளில் வீக்கம்
ஆண்கள் தங்களின் விரைகளில் வலி, வீக்கம் அல்லது கட்டிகளை உணர்ந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவதே நல்லது. ஏனெனில் இம்மாதிரயான நிலை டெஸ்டிகுலர் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, டெஸ்டிகுலார் புற்றுநோய் இருந்தால், விரைப்பை பாரமாக இருப்பது, டெஸ்டிகல் சுருங்கியிருக்கும், மந்தமான வலி மற்றும் மிகுந்த அசௌகரியத்தை சந்திக்க நேரிடும். இந்த அறிகுறிகளை அனுபவித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
மூச்சுத்திணறல்
நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் முதலில் மூச்சுத் திணறல் அல்லது சுவாசிப்பதில் சிரமத்தை சந்திக்க நேரிடும். நிபுணர்களின் கூற்றுப்படி, நுரையீரல் மற்றும் தைராய் புற்றுநோயைக் கொண்டவர்கள் இந்த அறிகுறிகளை சந்திக்கக்கூடும். அதுவும் மூச்சுதிணறல் பிரச்சனையை அடிக்கடி சந்தித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டியது முக்கியம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications