Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
பெண்களே! பீரியட் டைம்-ல இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. ரொம்ப கஷ்டப்படுவீங்க..
Menstrual Hygiene Day 2025: பொதுவாக பெண்களுக்கு 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். இந்த மாதவிடாய் சுழற்சி காலமானது ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபடும். இந்த காலத்தில் பெண்கள் தங்கள் உடலில் பலவிதமான மாற்றங்களைக் காண்பார்கள். அதோடு மனநிலையிலும் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பார்கள். இதற்கு காரணம் மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் தான்.
இந்த ஹார்மோன் மாற்றங்களினால் மனநிலை மாற்றங்கள் ஏற்படுவது மட்டுமின்றி, உடலிலும் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். முக்கியமாக கடுமையான வயிற்றுப் பிடிப்புகள், வயிற்று வலியால் பெண்கள் அதிகம் சிரமப்படுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்கள் இந்த மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் சிரமத்தை தவிர்க்க உண்ணும் உணவுகளில் சற்று கவனத்தை செலுத்த வேண்டும். முக்கியமாக ஒருசில உணவுகளை உண்பதை பெண்கள் தவிர்க்க வேண்டும். ஏனெனில் உணவுகள் பெண்களின் மாதவிடாயில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 28 ஆம் நாளன்று உலகம் முழுவதும் மாதவிடாய் சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் மாதவிடாய் கால சுகாதாரத்தைப் பற்றி விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஆங்காங்கு நடத்தப்படும். இந்த தினத்தை முன்னிட்டு, மாதவிடாய் காலத்தில் பெண்கள் எந்த மாதிரியான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று உணவியல் நிபுணர் ஸ்வேதா ஷா பஞ்சால் தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளதை கொடுத்துள்ளோம். அது எந்த உணவுகள் என்பதை காண்போம் வாருங்கள்.
1. சிப்ஸ் மற்றும் வேபர்கள்
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். கண்டதை சாப்பிட தோன்றும். ஆனால் அப்படிப்பட்ட சூழ்நிலையில் பெண்கள் சிப்ஸ் மற்றும் வேபர்கள் போன்றவற்றை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த மாதிரியான உணவுகள் வயிற்று உப்புசத்தை அதிகரிக்கும் மற்றும் உடலில் நீர் தேக்கத்தை அதிகரிக்கும்.
2. பிஸ்கட் மற்றும் இனிப்புகள்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத மற்றொரு உணவுகள் தான் சர்க்கரை நிறைந்த பிஸ்கட் மற்றும் இனிப்பு பலகாரங்கள். ஏனெனில் இவற்றை உட்கொண்டால், அது இன்சுலினை அதிகரிக்கும் மற்றும் ஹார்மோன் சமநிலையை சீர்குலைக்கும். எனவே இவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
3. கோலா பானங்கள்
நிறைய பெண்கள் மாதவிடாய் காலத்தில் குடிக்கும் ஒரு பானம் தான் குளிர் பானங்கள் அல்லது கோலா பானங்கள். ஆனால் இந்த வகையான பானங்களை பெண்கள் குடித்தால், அது உடலில் நீர்ச்சத்தை இழக்கச் செய்து, வலுவான வயிற்று பிடிப்புக்களை தூண்டும். எனவே இப்படியான பானங்களைத் தவிர்க்க வேண்டும் என்று உணவியல் நிபுணர் கூறினார்.
4. பேஸ்ட்ரிஸ் மற்றும் பேக்கிங் உணவுகள்
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இனிப்புகளை சாப்பிட அதிகம் பிடிக்கும். அதுவும் பேஸ்ட்ரிக்கள் மற்றும் பேக்கிங் உணவுகள் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால் இந்த வகையான உணவுகளை சாப்பிடக்கூடாது என்று உணவியல் நிபுணர் கூறியுள்ளார். இந்த வகை உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கும் மற்றும் இவற்றில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் அதிகம் இருப்பதாகவும் கூறுகிறார்.
5. காரமான மற்றும் வறுத்த உணவுகள்
மாதவிடாய் காலத்தில் பெண்கள் சாப்பிடக்கூடாத மற்றொரு உணவுகள் தான் காரமான மற்றும் எண்ணெயில் பொரித்த உணவுகள். இந்த உணவுகளை உட்கொண்டால் அது குடலை எரிச்சலடையச் செய்து, அசௌகரியத்தை இன்னும் மோசமாக்கும்.
சிறிய உணவு மாற்றங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதுவும் இது மிகவும் சமநிலையானதாகவும், வயிற்று உப்புசத்தை அதிகம் ஏற்படுத்தாமல், உடலைக் கட்டுப்படுத்தவும் உதவும். என்று ஸ்வேதா கூறினார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications