Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
எச்சரிக்கை! இந்த பிராண்ட் மௌத் வாஷை 3 மாதம் யூஸ் பண்ணுனா புற்றுநோய் வருமாம் - ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Listerine Cool Mint Causes Cancer: ஒருவருக்கு வாய் சுகாதாரமானது மிகவும் இன்றியமையாதது. வாய் நன்கு சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருந்தாலே பலவிதமான பிரச்சனைகளைத் தடுக்கலாம். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ள நீங்கள் தினமும் மௌத் வாஷ் பயன்படுத்துகிறீர்களா?
அப்படியானால் சமீபத்திய ஆய்வு குறித்த தகவல் உங்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தலாம். ஏனெனில் மிகவும் பிரபலமான மௌத் வாஷ் பிராண்ட்டான லிஸ்டரினில் உள்ள குறிபபிட்ட பொருட்கள் வாயில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரித்து புற்றுநோயை உண்டாக்குவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதுக்குறித்த ஆய்வானது மருத்துவ நுண்ணுயிரியல் இதழில் வெளியிடப்பட்டது. அதில் லிஸ்டரின் கூல் மிண்ட் மௌத் வாஷை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், அது உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிப்பதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஒருவர் தினமும் ஆல்கஹாலை பயன்படுத்தி வந்தால், அது வாயில் ஃபுசோபாக்டீரியம் நியூக்ளியேட்டம் மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் ஆஞ்சினோசஸ் போன்ற உயிரினங்களை வாயில் அதிகரிக்க வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுவும் இவ்விரு பாக்டீரியாக்களும் ஈறு நோய், உணவுக்குழாய் மற்றும் பெருங்குடல் புற்றுநோயின் அபாயங்களுடன் தொடர்புடையவை என்னும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
மேலும் இந்த லிஸ்டரின் கூல் மிண்ட மௌத் வாஷை தினமும் பயன்படுத்தி வருபவர்களின் வாயில் ஆக்டினோபாக்டீரியா என்னும் இரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க தேவையான பாக்டீரியாக்கள் குறைவதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளன.
லிஸ்டரின் எப்படி புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது?
லிஸ்டரின் கூல் மிண்ட் மௌத் வாஷை ஒருவர் தொடர்ந்து 3 மாதங்களுக்கும் அதிகமாக பயன்படுத்தி வந்தால், அந்நபருக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. வாயில் ஊற்றி கொப்பளிப்பததால், உணவுக்குழாய் மற்றும் பெருங்குடலில் எப்படி பாதிப்பு ஏற்படும் என்று கேட்கலாம்.
பொதுவாக லிஸ்டரின் மௌத் வாஷில் ஆல்கஹாலின் அளவு அதிகமாக உள்ளது. குறிப்பாக எத்தனால் என்னும் கெமிக்கல் அதிகளவில் உளளது. இந்த கெமிக்கலில் அடர்த்தி அதிகமாக இருந்து, அவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது, அது குறிப்பிட்ட வகையான புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும். குறிப்பாக இப்படிப்பட்ட மௌத் வாஷை தொடர்ந்து 3 மாதத்திற்கும் மேலாக பயன்படுத்தி வந்தால், அது உணவுக்குழாய் மற்றும் குடலில் உள்ள மென்மையான திசுக்களுக்கு தீங்கு விளைவிக்கும்.
நமது வாயானது உணவுக்குழாய் வழியாக வயிற்றுடன் தொடர்பு கொண்டுள்ளது. எனவே தான் நாம் உண்ணும் எதுவும் உணவுக்குழாய் வழியாக வயிற்றை அடைந்து ஜீரணமாகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஆல்கஹால் நிறைந்த லிஸ்டரினை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது, இந்த உணவுக் குழாயின் சுவர்கள் எரிச்சலடைவதுடன், காயமடைய நிறைய வாய்ப்புள்ளது. இது இப்படியே நீடிக்கும் போது, ஒரு கட்டத்தில் உணவுக்குழாய் சுவற்றில் வீரியம் மிக்க செல்கள் உருவாக வழிவகுத்து, உணவுக்குழாய் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.
இந்த ஆய்வில் லிஸ்டரின் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்றாலும், இதேப் போன்று ஆல்கஹால் அடிப்படையிலான பிற மௌத் வாஷ்களின் பயன்பாட்டினாலும் இப்படியான அபாயம் இருக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
உணவுக்குழாய் புற்றுநோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
உணவுக்குழாய் புற்றுநோய் என்பது தொண்டையில் இருந்து வயிற்றுடன் இணையும் உணவுகளைக் கொண்டு செல்லும் குழாயில் உருவாகும் ஒரு வகையான புற்றுநோயாகும். இந்த புற்றுநோய் இருந்தால் பின்வரும் அறிகுறிகள் தெரியக்கூடும். அவை:
* உணவுகளை விழுகுவதில் சிரமம்
* நெஞ்சு பகுதியில் அசௌகரியம்
* விவரிக்க முடியாத எடை இழப்பு
* தொடர்ச்சியான இருமல்
மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை ஒருவர் நீண்ட காலமாக அனுபவித்து வந்தால், அதை சற்றும் புறக்கணிக்காமல் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?
பெருங்குடல் புற்றுநோய் என்பது ஒரு வகையான புற்றுநோய். இது குடல் அல்லது மலக்குடல் பகுதிகளில் உருவாகலாம். தற்போது இந்த வகை புற்றுநோய் ஆண், பெண் என இருபாலரையும் அதிகம் பாதிக்கக்கூடிய மூன்றாவது பொதுவான புற்றுநோயாக உள்ளது. இந்த புற்றுநோய் இருந்தால், பின்வரும் அறிகுறிகளை அனுபவிக்கக்கூடும். அவை:
* குடலியக்கத்தில் மாற்றம்
* இரத்தம் கலந்த மலம்
* அடிவயிற்று பகுதியில் மிகுந்த அசௌகரியம்
* விவரிக்க முடியாத எடை இழப்பு
* மிகுதியான உடல் களைப்பு மற்றும் பலவீனம்
மேலே கூறப்பட்டுள்ள, இந்த ஆய்வானது குறிப்பிட்ட வகையான மக்களைக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவாகும். இதைக் கொண்டு இறுதி முடிவை எடுக்க முடியாது. எனவே இன்னும் இதுக்குறித்த ஆய்வுகள் தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











