Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
Joe Biden: அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து ஜோ பைடன் விலக இதுதான் காரணமா இருக்குமோ?
Joe Biden: தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மிகவும் தீவிரமாக பிரச்சாரங்கள் செய்து வருகின்றனர். இந்நிலையில்திடீரென்று இந்த அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 81 வயதான ஜோ பைடன் மூத்த அமெரிக்க ஜனாதிபதி ஆவார்.
சமீபத்தில் நடந்த பிரச்சாரத்தின் போது ஜோ பைடன் தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அடுத்த 4 ஆண்டு காலம் அதிபராக பதவி வகிக்கும் அளவுக்கு தகுதியுடன் இருப்பதாகவும் வலியுறுத்தி வந்தார். மேலும் டொனால்ட் ட்ரம்ப்பை தோற்கடிக்கும் திறன் தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த வாரம் ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டது. இத்தொற்று இவருக்கு மூன்றாவது முறையாக ஏற்பட்டுள்ளது. இத்தொற்றுநோயின் காரணமாக ஜோ பைடன் டெலாவேரில் உள்ள தனது கடற்கரை வீட்டில் ஓய்வெடுத்து வருவதாக செய்திகள் வெளிவருகின்றன.
ஒருமுறை கோவிட்-19 தாக்கினாலே அது ஒருவரது உடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் இவர் 3 ஆவது முறையாக கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அடுத்த 4 ஆண்டுகள் இவரால் அதிபராகி திறமையாக செயல்பட முடியாது என்று பலரும் கூறுகின்றனர்.
அதுமட்டுமின்றி 80 வயதிற்கு மேலாகிவிட்டதால் அவரது பேச்சில் தடுமாற்றம், ஒருவித குழப்பம் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவற்றை சந்திப்பதோடு, கடந்த வாரம் நடந்த விவாதத்தின் போது சொல்ல வருவதை முழுமையாக சொல்லாமல் மறந்து விடுவதாகவும் பல வதந்திகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் இவரை பரிசோதனை செய்ததில் இவருக்கு நரம்பியல் பிரச்சனைக்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் வெள்ளை மாளிகைக்கு அடிக்கடி ஒரு பர்கின்சன் நோய் நிபுணர் தவறாமல வருவதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலக அவரது ஆரோக்கியம் தான் காரணம் என கூறப்படுகிறது.
வயதான காலத்தில் ஒருவர் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்?
பொதுவாக 50 வயதை கடந்து விட்டாலே, உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பலவிதமான சவால்களை சந்திக்க நேரிடும். அதுவும் 80 வயதுகளில் கட்டாயம் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் பல சவால்களை சந்திக்கக்கூடும். அப்படிப்பட்ட சவால்களையே ஜோ பைடனும் சந்திப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அறிவாற்றல் சிக்கல்களைத் தவிர, நினைவாற்றல் பிரச்சனைகள் மற்றும் தகவல்களை விரைவாக செயலாக்குவதில் சிரமம் ஆகியவற்றால் பைடன் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்றும் மருத்துவர்கள் யூகிக்கின்றனர். சரி, 80 வயதை கடந்துவிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதைக் காண்போம்.
* குறைவான உடல் ஆற்றல்
* குறைவான உடலியக்கம்
* கீழ்வாதம்
* இதயம் தொடர்பான பிரச்சனைகள்
* ஞாபக மறதி
* பேசுவதில் சிரமம், சிந்திக்கும் திறனை இழப்பது மற்றும் மனக்குழப்பம்
* டிமென்ஷியா மற்றும் அல்சைமர்
* நினைவை மீட்டெடுப்பதில் சிரமம்
வயதான காலத்திலும் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாக இருக்க சில டிப்ஸ்...
* உடற்பயிற்சி அவசியம்
இளமையான காலத்தில் மட்டும் தான் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. வயதான காலத்திலும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதுவும் தீவிரமான உடற்பயிற்சியில் ஈடுபடாமல் மிதமான உடற்பயிற்சிகளான வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றை தினமும் காலையில் குறைந்தது 1 மணிநேரம் மேற்கொள்ள வேண்டும். இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பது மட்டுமின்றி, அறிவாற்றல் ஆரோக்கியமும் மேம்படும்.
* புலன்களைப் பாதுகாக்கவும்
நிபுணர்களின் கூற்றுப்படி, பார்வை, வாசனை, செவிப்புலன் போன்ற உணர்ச்சி இழப்புகளுக்கும், டிமென்ஷியாவிற்கும் இடையே வலுவான தொடர்பு உள்ளது. எனவே ஒருவரது பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு ஏற்படுவது, அறிவாற்றல் சிக்கல்களின் அபாயத்துடன் தொடர்புடையதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இவற்றில் பிரச்சனைகளை சந்தித்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுங்கள்.
* நினைவாற்றலை அதிகரிக்கும் விளையாட்டுக்களை விளையாடவும்
வயதாக காலத்தில் எப்போதும் படுத்துக் கொண்டு டிவியை பார்க்காமல், மூளையை கூர்மையாக்க உதவும் விளையாட்டுக்களான சுடோகு விளையாட்டை விளையாடலாம், புதிய மொழியை கற்றுக் கொள்ளலாம் அல்லது இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக் கொள்ளலாம். இப்படி ஏதாவது புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வத்தைக் காட்டினால் புத்திக்கூர்மையாக இருக்கும்.
* மீன் எண்ணெயை சாப்பிடவும்
மீன் எண்ணெய் மாத்திரைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த பெரிதும் உதவுகின்றன. இது தவிர மூளை ஆரோக்கியமாகவும், நல்ல நினைவாற்றல் திறனுடனும் இருக்க வேண்டுமானால், உடலில் DHA அளவு போதுமான அளவு இருக்க வேண்டும். ஆனால் வயதான காலத்தில் இதன் அளவு குறைவதால், இந்த DHA அளவை அதிகரிக்க மத்தி, கானாங்கெளுத்தி, ஹெர்ரிங் போன்ற மீன்கள் மற்றும் மீன் எண்ணெயை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
* தரமான தூக்கம்
வயது அதிகரிக்கும் போது மூளைக்கு ஓய்வு அதிகம் தேவைப்படும். எனவே தினமும் தவறாமல் குறைந்தது 8-9 மணிநேர தூக்கத்தைப் பெற முயல வேண்டும். தூக்கமின்மையானது ஒருவரது மூளையின் செயல்திறனை குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. எனவே மூளை ஆரோக்கியமாகவும், திறம்படவும் செயல்பட வேண்டுமானால் நல்ல தூக்கத்தை தவறாமல் பெற வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications











