Latest Updates
-
இன்றைய ராசிபலன் 13 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு கவலைகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்தியாவில் கிடுகிடுவென அதிகரிக்கும் புதிய வகை கொரோனா - அதன் எச்சரிக்கை அறிகுறிகள் இதான்.. உஷார்..
JN.1 New COVID Variant: கொரோனா பெருந்தொற்றிற்கு பிறகு தற்போது தான் உலகம் பழைய நிலைமைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கொரோனா உருமாற்றமடைந்து பரவி வருகிறது. அதற்கு JN.1 கோவிட் மாறுபாடு என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா மாறுபாடு சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் பரவிக் கொண்டிருக்கிறது. உலகளவில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த புதிய மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தியாவிலும் இந்த புதிய வகை கொரோனா மாறுபாட்டினால் கேரளாவைச் சேர்ந்த ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாறுபாட்டின் சிறப்பு என்னவென்றால், அது கூடுதலாக ஒரு ஸ்பைக் புரதத்தைக் கொண்டிருப்பது தான். இப்படியான உருமாற்றம், இந்த வைரஸை வேகமாக தொற்றச் செய்வதோடு, நோயெதிர்ப்பு சக்தியில் இருந்தும் தப்பிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
பொதுவாக அனைத்து வகை கொரோனாவின் பொதுவான அறிகுறிகளாக இருமல் மற்றும் காய்ச்சல் உள்ளது. அந்த அறிகுறிகளும் இந்த JN.1 வகை வைரஸ் தொற்றின் போது தெரிந்தாலும், இன்னும் ஒருசில தனித்துவமான அறிகுறிகள் தெரிவதாக கூறப்படுகிறது. எனவே சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இப்போது JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் என்னவென்பதைக் காண்போம்.
கோவிட் JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள்
உலகம் முழுவதும் JN.1 மாறுபாடு வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த மாறுபாட்டுடன் தொடர்புடைய ஒருசில அறிகுறிகள் குறித்து உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதில் புதிய JN.1 மாறுபாட்டின் அறிகுறிகள் பெரும்பாலும் லேசானது முதல் மிதமானது வரையில் இருக்கும். அதில் காய்ச்சல், மூக்கு ஒழுகல், தொண்டைப் புண், தலைவலி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இது தவிர சில நோயாளிகள் சுவாச பிரச்சனைகளையும் சந்திக்கலாம். பொதுவாக இந்த அறிகுறிகளானது 4-5 நாட்களில் அதிகரிக்கத் தொடங்கும்.
மிகவும் அரிதாக சிலர் செரிமான பிரச்சனைகளையும் சந்திக்கலாம். இந்த செரிமான பிரச்சனையால் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். இது தவிர வேறுசில புதிய மாறுபாட்டின் அறிகுறிகளையும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அவை பின்வருமாறு:
பசியின்மை மற்றும் குமட்டல்
உங்களுக்கு திடீரென்று காரணமின்றி பசி எடுக்காமல் இருப்பதை உணர்கிறீர்களா? நிபுணர்களின் கூற்றுப்படி, காரணமின்றி ஒருவருக்கு தொடர்ச்சியான குமட்டல் ஏற்பட்டால், அதற்கு JN.1 வைரஸ் தொற்று காரணமாக இருக்கலாம். ஏனெனில் இதுவரை பாதிக்கப்பட்ட JN.1 வழக்குகளில் இந்த குமட்டல் மற்றும் பசியின்மை போன்ற அறிகுறிகளுடன் கொரோனாவின் பிற அறிகுறிகளும் இருந்துள்ளன. எனவே இம்மாதிரியான அறிகுறிகளை சந்தித்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.
அதிகப்படியான களைப்பு மற்றும் தசை பலவீனம்
புதிய வகை JN.1 மாறுபாட்டின் மற்றொரு அறிகுறி தான் அதிகப்படியான உடல் களைப்பு. இந்த வைரஸ் ஒருவரைத் தாக்கினால், அது மிகுந்த உடல் சோர்வையும் மற்றும் தசைகளை பலவீனமடையவும் செய்யும். தினசரி வேலைகளை கூட செய்ய முடியாத அளவில் ஒருவரை பலவீனமாக்கிவிடும். இந்த உடல் சோர்வு வழக்கமான கோவிட் சோர்விலிருந்து வேறுபட்டது. எனவே இப்படியான அறிகுறி தெரிந்தால், உடனே தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவரை அணுக வேண்டும்.
இந்தியாவில் JN.1 மாறுபாட்டின் எத்தனை வழக்குகள் உள்ளன?
JN.1 மாறுபாட்டின் முதல் வழக்கு கேரளாவில் கண்டறியப்பட்டது. கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, இந்தியாவில் மட்டும் JN.1 மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1,828 ஆகும். இப்படி புதிய மாறுபாட்டினால் குறுகிய நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பது கவலையை அதிகரித்துள்ளது. முக்கியமாக இதுவரை கேரளாவில் 4 பேர் இந்த மாறுபாட்டினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications