Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: செப்டம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்! -
சிம்ம ராசியில் உருவாகும் புதாதித்ய யோகம் இந்த 3 ராசிக்காரர்களின் கஷ்டங்களை தீர்க்கப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
கர்நாடகா தக்காளி தம்பிலி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் எங்கு சென்றாலும் மகாராணியாக ஆட்சி செய்வார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஹோட்டல் ஸ்டைல் மக்கானா கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி செஞ்சு பாருங்க.. -
தலைமுடி அடர்த்தியா வளரணுமா? அப்ப கறிவேப்பிலையை இந்த எண்ணெய்களுடன் சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
குடிமக்கள் அனைவரும் சொந்த வீடு வைத்துள்ள உலகின் அதிசய நாடு - இதற்கு காரணம் என்ன தெரியுமா? -
ராகுவின் நட்சத்திரத்துக்கு செல்லும் செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
சூரிய கிரகணத்திற்குப் பிறகு மோசமான காலகட்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஆடி அமாவாசை ஸ்பெஷல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
நாம தினமும் சாப்பிடுற பருப்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான பருப்பு எது தெரியுமா?
இந்திய உணவு வகைகளில் எப்போதும் பருப்பு வகைகள் தனி இடத்தை பெறுகின்றன. ஒவ்வொரு உணவு வகைக்கும் ஒவ்வொரு வகையான பருப்புகள் பயன்படுத்தப்படுகின்றன, பருப்புகள் இல்லாமல் எந்த உணவும் முழுமை பெறாது.
இது வித்தியாசமான மற்றும் கூடுதலான சுவையை உணவிற்கு கொடுக்கின்றன. இது உணவிற்கு சுவையைக் கொடுப்பது மட்டுமின்றி இவற்றில் அதிகளவு புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்களும் நிரம்பி இருக்கிறது. இந்த பதிவில் நாம் தினமும் உபயோகிக்கும் சில பருப்புகளையும், அதில் இருக்கும் புரத்தின் அளவையும் தெரிந்து கொள்ளலாம்.

வெள்ளை சுண்டல்
வெள்ளை சுண்டல் என்று அழைக்கப்படும் கொண்டைக்கடலை, உணவில் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. 100 கிராம் வேகவைத்த கொண்டைக்கடலையில் சுமார் 19 கிராம் புரதம் உள்ளது. மேலும், கொண்டைக்கடலையில் நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. இது விதவிதமான உணவு வகைகள் மற்றும் சிற்றுண்டிகளான பருப்பு வகைகள், குழம்புகள், மற்றும் சாலட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ராஜ்மா
ராஜ்மா அல்லது கிட்னி பீன்ஸ் பெரும்பாலும் இந்திய சமையலில் பல விதமாக பயன்படுகின்றது. 100 கிராம் வேகவைத்த ராஜ்மாவில் சுமார் 9 கிராம் புரதம் உள்ளது. ராஜ்மா நார்ச்சத்து, ஃபோலேட் மற்றும் மாங்கனீஸின் நல்ல ஆதாரமாக விளங்குகிறது, இது ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கிறது.
உளுந்து பருப்பு
உளுந்து, கருப்பு உளுந்து என்று அழைக்கப்படும் உளுத்தம் பருப்பு, இந்த உணவில் முக்கிய இடத்தை பெறுகிறது. பெரும்பாலும், இந்திய உணவுகளான தால் மக்கானி மற்றும் இட்லி போன்ற பிரபலமான உணவு தயாரிப்பில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. 100 கிராம் வேகவைத்த பருப்பில் தோராயமாக 25 கிராம் புரதம் உள்ளது. உளுந்து பருப்பில் நார்ச்சத்து, இரும்பு மற்றும் மெக்னீசியம் அதிகமாக உள்ளதால், இது உணவில் கூடுதல் சத்தை கொடுக்கிறது.
கடலை பருப்பு
கடலை பருப்பு, உடைத்த கொண்டைக்கடலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இது சிறிதளவு நட்ஸ் சுவையுடன் உறுதியான அமைப்பை கொண்டுள்ளது. 100 கிராம் வேகவைத்த பருப்பில் தோராயமாக 22 கிராம் புரதம் உள்ளது. கடலை பருப்பில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் பி வைட்டமின்கள் நிறைந்திருக்கின்றன. இது சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு சிறந்த சத்தான சைவ தேர்வாக அமைகிறது.
துவரம் பருப்பு
அர்ஹர் பருப்பு அல்லது ஸ்பிலிட் பிஜியன் பட்டாணி என்று அழைக்கப்படும் துவரம் பருப்பு, இந்திய சமையலில் பிரதானமான ஒன்றாக திகழ்கிறது. இது சற்று இனிப்பு சுவையுடன் பல சத்துக்களை கொண்டுள்ளது. 100 கிராம் சமைத்த பருப்பில் தோராயமாக 22 கிராம் புரதம் உள்ளது. துவரம் பருப்பு கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாக இருக்கிறது.
பாசி பருப்பு
பாசி பருப்பு மிகவும் விரும்பப்படும் பருப்பு வகைகளில் ஒன்று. இதில் 100 கிராமமில் சுமார் 24 கிராம் புரதம் இருக்கிறது. பாசிப்பருப்பு சேர்த்த உணவு நார்ச்சத்து, இரும்பு மற்றும் ஃபோலேட் ஆகிய சிறந்த சத்துக்களால் நிறைந்திருக்கிறது, இது எடை குறைக்க விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரவல்லது.
மசூர் பருப்பு
மசூர் பருப்பு அல்லது சிவப்பு பருப்பு விரைவான சமையல் நேரம் மற்றும் மண்ணின் சுவையால் நினைவு கூறப்படும் மற்றொரு பிரபலமான பருப்பு வகை. 100 கிராம் வேகவைத்த பருப்பில் தோராயமாக 26 கிராம் புரதம் உள்ளது. மசூர் பருப்பில் நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன. இது எந்த உணவிலும் ஒரு சத்தான துணை உணவாகும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
