Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
உங்க உடலில் 'இந்த' சத்து குறைபாடு இருந்தால்...அது ஆபத்தான நரம்பு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துமாம்!
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் பல வகையான கடுமையான நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். அதனால்தான், பச்சை இலைக் காய்கறிகள், கீரைகள் மற்றும் பருவகால பழங்கள் நிறைந்த உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பொதுவாக, ஊட்டச்சத்து என்று வரும்போது, வைட்டமின் சி மற்றும் டி உடன் புரதத்தின் தேவைகள் பற்றி நிறைய விவாதிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் இந்த ஊட்டச்சத்துகளைப் போலவே வைட்டமின் பியும் நம் உடலுக்கு முக்கியமானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். நரம்புகள், தசைகள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின் பி-1 முக்கிய பங்கு வகிக்கிறது.

வைட்டமின் பி1, தியாமின் என்றும் அழைக்கப்படுகிறது. இது நமது உடலில் குளுக்கோஸின் வளர்சிதை மாற்றத்திற்கும் நரம்பு மற்றும் தசைகளின் செயல்பாடுகளை எளிதாக்குவதற்கும் அவசியம். உடலில் அதன் குறைபாடு நினைவாற்றல் இழப்பு போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் வைட்டமின் பி1 ஏன் முக்கியமானது என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
வைட்டமின் பி1 குறைபாடு என்ன செய்யும்?
வைட்டமின் பி 1 அல்லது தியாமின் என்பது நீரில் கரையக்கூடிய வைட்டமின் ஆகும். இது உடல் கார்போஹைட்ரேட்டுகளை ஆற்றலாகப் பயன்படுத்த உதவுகிறது. அதன் குறைபாடு பொதுவாக பெரிபெரியை ஏற்படுத்துகிறது. இது புற நரம்பு தொடர்பான கோளாறுகளின் அபாயத்தை அதிகரிக்கும். இது தவிர, எடை இழப்பு மற்றும் பசியற்ற தன்மையையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
கடுமையான சந்தர்ப்பங்களில், குழப்பம் மற்றும் குறுகிய கால நினைவாற்றல் பிரச்சினைகள் ஏற்படலாம். வைட்டமின் பி1 நிறைந்த சில உணவுகள் உங்கள் தினசரி உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும்.
சூரியகாந்தி விதைகள்
சூரியகாந்தி விதையில் போதுமான அளவு வைட்டமின் பி1 உள்ளது. வெறும் 100 கிராம் சூரியகாந்தி விதையில், 0.106 மி.கி வைட்டமின் பி1 கிடைக்கும். சூரியகாந்தி விதைகளில் வைட்டமின்கள் பி2, பி3, பி6, சி, ஈ மற்றும் கே உள்ளிட்ட பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அவை பல தீவிர நோய்களின் அபாயத்தைக் குறைப்பதில் உங்களுக்கு நன்மை பயக்கும். வைட்டமின் பி-1 இன் தேவைகளை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பூர்த்தி செய்யலாம்.
பச்சை பட்டாணி
வெறும் 100 கிராம் பச்சை பட்டாணியில் 0.282 மில்லிகிராம் வைட்டமின் பி1 உள்ளது. இது தவிர, பச்சைப் பட்டாணி அத்தியாவசிய தாதுக்களான கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் மற்றும் செலினியம் ஆகியவற்றை வழங்குகிறது. பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் தியாமின் குறைபாட்டைப் போக்கலாம்.
வைட்டமின் பி1 நிறைந்த உணவுகள்
இவை இரண்டும் மட்டுமல்ல, இறைச்சி, மீன் மற்றும் முழு தானியங்களில் இயற்கையாகவே தியாமின் நிறைந்துள்ளது. இதற்கு மீன், பீன்ஸ், பருப்பு, தயிர் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
வைட்டமின் பி1 இன் பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளல் 19 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு 1.2 மில்லிகிராம்கள் (mg) மற்றும் பெண்களுக்கு 1.1 mg ஆகும். கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு 1.4 மி.கி தேவைப்படும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications
