Latest Updates
-
அஸ்தமன நிலையில் புதன்! அடுத்த 3 வாரங்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
ராகு-கேது பெயர்ச்சியால் டிசம்பர் மாதம் வரை நரகத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வரகரிசியும், வாழைப்பழமும் இருந்தா இந்த ஆரோக்கியமான பணியாரத்தை செய்யுங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
பார்லர் போகாமலேயே முகத்தில் வளரும் முடியை நீக்கணுமா? இந்த 5 ஃபேஸ் பேக்கை போடுங்க போதும்.. -
ஆகஸ்ட் கடைசியில் நடக்கும் சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களின் வேலையில் உள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும்! -
செப்டம்பரில் இரண்டு முறை ராசி மாறும் புதன்: சகல சௌபாக்கியத்தை பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
1 கப் ரவையும், 1 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. அள்ளும்.. -
கழிப்பறையில் ஐஸ் கட்டிகளை கொட்டுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப கொழுப்பு கல்லீரல் நோய் இருக்குன்னு அர்த்தமாம்.. எச்சரிக்கும் எய்ம்ஸ் டாக்டர்! -
இட்லி அரிசியும், அப்பளமும் இருந்தா இந்த கேரளா ஸ்டைல் அப்பள வடையை செய்யுங்க - வேற லெவலில் இருக்கும்
எச்சரிக்கை! இந்த மாத்திரையை அதிகம் போடாதீங்க.. இல்லன்னா மாரடைப்பு சீக்கிரம் வந்துடும்...
Ibuprofen Side Effects In Tamil: தற்போதைய மன அழுத்தம் நிறைந்த மற்றும் அவசரமான உலகில் தினந்தோறும் உடலில் ஏராளமான வலிகளை சந்திக்கிறோம். இப்படி சந்திக்கும் வலிகளுக்கு மருத்துவரின் பரிந்துரையில்லாமல் ஒருசில வலி நிவாரண மாத்திரைகளை நிறைய பேர் எடுத்து வருகிறோம்.
ஆனால் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்தால், அதன் விளைவாக கடுமையான பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அதில் ஒரு வலி நிவாரண மாத்திரை தான் இப்யூபுரூஃபன் (Ibuprofen). இந்த இப்யூபுரூஃபன் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் அல்லது NSAID-கள் என அறியப்படும் மருந்துகளின் குழுவைச் சேர்ந்தது.

இப்யூபுரூஃபன் மாத்திரைகளானது தலைவலி, பல் வலி, மாதவிடாய் கால வலிகள், முதுகு வலி, தசை வலி மற்றும் காய்ச்சல் போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. இந்த மாத்திரை எப்படி வேலை செய்கிறது என்றால், இது உடலில் வலியை உண்டாக்கும் ப்ரோஸ்டாக்லாண்டின்களின் அளவை தற்காலிகமாக குறைக்கிறது. ப்ரோஸ்டாக்லாண்டின்கள் என்பவை ஒரு ஹார்மோன் போன்ற பொருள். இது உடலில் வீக்கம், காய்ச்சல் மற்றும் வலி போன்றவற்றை உண்டாக்கும்.
இந்த இப்யூபுரூஃபன் இந்தியாவில் மருந்துச் சீட்டு இல்லாமலேயே எளிதில் கிடைக்கிறது. இதனால் நிறைய பேர் இந்த மாத்திரையை தங்கள் வீடுகளில் ஸ்டாக் வைத்துள்ளார்கள். உடலில் வலி ஏற்படும் போது உடனே எடுக்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வுகளின் படி, இந்த இப்யூபுரூஃபன் வலி நிவாரண மாத்திரையை தொடர்ந்து எடுத்தால், அது தீவிரமான மற்றும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் அளவில் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
மேலும் ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகள் வயிற்று அல்சர், மலட்டுத்தன்மை, காதுகளில் பிரச்சனை மற்றும் இதய பிரச்சனைகள் போன்வற்றை ஏற்படுத்துவதுடன் தொடர்புடையதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இப்போது இப்யூபுரூஃபன் மாத்திரையை அடிக்கடி எடுத்தால், எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதைக் காண்போம்.
காது கேளாமை
மருத்துவர் பரிந்துரைக்காமல் இப்யூபுரூஃபன் மாத்திரையை நீண்ட காலம் எடுத்து வந்தால், அதன் விளைவாக கேட்கும் திறனில் பிரச்சனையை சந்திக்க நேரிடும். அதுவும் பின்வரும் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
* மற்றவர்கள் சொல்வதை தெளிவாகக் கேட்பதில் சிரமம் மற்றும் அவர்கள் சொல்வதை தவறாகப் புரிந்துகொள்வது.
* அதிக சப்தத்துடன் டிவி பார்ப்பது அல்லது இசையைக் கேட்பது
* போனில் பேசும் போது கேட்பதில் சிரமம்
* கேட்கும் போது கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் சோர்வாக அல்லது மன அழுத்தத்தை உணர்வது.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் எபிடெமியாலஜியில் வெளியிடப்பட்ட ஹார்வர்ட் நடத்திய ஆய்வின்படி, அடிக்கடி இப்யூபுரூஃபனை உட்கொள்வது கேட்கும் திறனில் சந்திக்கும் பிரச்சனையில் முக்கிய வங்கை வகிக்கக்கூடும். இந்த ஆய்வில், வாரத்திற்கு 2 முறை இப்யூபுரூஃபன் வலி நிவாரண மாத்திரையை எடுத்துக் கொண்ட பெண்களுக்கு காது கேளாமை ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் இருப்பது தெரிய வந்தது. எனவே இந்த மாத்திரையை தேவையின்றி அதிகம் எடுக்காதீர்கள்.
வயிற்றுப்புண்
மருத்துவர்களின் கூற்றுப்படி, இப்யூபுரூஃபன் ப்ரோஸ்டாக்லாண்டின் உற்பத்தியைக் குறைக்கிறது. இதை அதிகம் எடுக்கும் போது, அது வயிற்றை சேதப்படுத்தி, வயிற்றில் இரத்தக்கசிவு, அல்சர் போன்ற பக்கவிளைவுகளை உண்டாக்குகிறது. என்ன தான் இது ஒரு அரிய பக்க விளைவாக இருந்தாலும், இந்த மாத்திரையை நிறைய பேர் அடிக்கடி போடுவதால், வயிறு இன்னும் மோசமாக பாதிக்கப்படும்.
மலட்டுத்தன்மை அல்லது கருவுறாமை
ஆண்கள் அதிக அளவில் இப்யூபுரூஃபன் மாத்திரையை நீண்ட காலம் எடுத்தால், அது ஆண்களுக்கு கருவுறுதல் பிரச்சனையை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அதுவும் இந்த மாத்திரையானது விறைப்புத்தன்மை கோளாறு, மன இறுக்கம், தசைகள் சுருங்குவது, உடல் சோர்வு போன்றவற்றை அதிகம் ஏற்படுத்தும். எனவே ஆண்கள் இந்த மாத்திரையை அடிக்கடி எடுப்பதை அறவே தவிர்க்க வேண்டும்.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம்
தற்போது மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இப்யூபுரூஃபன் மாத்திரையை அடிக்கடி எடுத்தால் இப்படிப்பட்ட மோசமான மற்றும் ஆபத்தான பிரச்சனையின் அபாயம் அதிகரிக்கும். பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் ஆய்வின்படி, இந்த மாத்திரை ஒருவருக்கு மாரடைப்பு அபாயத்தை 31 சதவீதம் அதிகரிக்கும். எனவே நீங்கள் இந்த வகையான வலி நிவாரண மாத்திரையை எடுப்பவரானால், உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால் இளம் வயதிலேயே உயிரை இழக்க நேரிடும்.
குறிப்பு: இப்யூபுரூஃபன் மாத்திரை மிகுந்த வலிமிக்க காலத்தில், அந்த வலியைக் கட்டுப்படுத்த பயன்பட்டாலும், எந்த ஒரு மருந்தையும் அளவுக்கு அதிகமாக அல்லது நீண்ட காலமாக எடுத்து வந்தால், அதன் விளைவாக பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும். அளவாக, தேவையான போது மட்டும் எடுத்தால், வலியையும் குறைக்கலாம், பக்கவிளைவுகளையும் தடுக்கலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றா பகிரப்படவில்லை. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால் உங்கள் மருத்துவர் அல்லது தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறவும்.



Click it and Unblock the Notifications