Latest Updates
-
நாளை உருவாகும் விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. அவசரப்படக்கூடாது.. -
சூரியன் தனுசு ராசிக்குள் செல்வதால் கோடிகளில் புரளப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
புடலங்காயும், தயிரும் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
Hair Care: ஈரமான தலைமுடியுடன் தூக்குவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
லன்ச்பாக்ஸிற்கு ஒருடைம் மசாலா தேங்காய் சாதம் செஞ்சு குடுங்க.. பசங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
உங்க ராசியை சொல்லுங்க.. உங்களோட ரகசிய குணத்தை சொல்றோம்.. -
வாழைப்பழம் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாதா? பால் குடித்தால் சளி பிடிக்குமா? நம்பிக்கைகளும்.. உண்மையும்.. -
இந்த 4 ராசி சிங்கப் பெண்களை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாதாம் - மகாராணியாக வாழ பிறந்தவர்களாம் இவங்க -
கேஸ் அடுப்பு ஆரஞ்சு நிறத்தில் எரிவதற்கு காரணம் என்ன தெரியுமா? அப்படி எரிஞ்சா என்ன பண்ணனும் தெரியுமா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சியால் டிசம்பரில் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. உங்க ராசி இதுல இருக்கா?
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்கள பணப் பிரச்சனை பாடாய் படுத்தப்போகுது!
Sun Transit In Libra 2026: ஜோதிடத்தின் படி, கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன். சிம்ம ராசியின் அதிபதியான சூரியன் தலைமைத்துவம், அதிகாரம், ஆன்மா, தந்தை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். மாதம் ஒருமுறை ராசியை மாற்றும் சூரியன், தற்போது கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சூரியன் அக்டோபர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த ராசியில் நவம்பர் 16 ஆம் தேதி வரை இருந்து, பின் விருச்சிக ராசிக்குள் நுழையவுள்ளார்.

சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படும். அதில் சிலருக்கு சிறப்பாக இருந்தாலும், சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கலாம். அதுவும் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சூரிய பெயர்ச்சியால் பணப் பிரச்சனைகளை சந்திக்கப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியக் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைப்பது சற்று கடினமாக இருக்கும். மாணவர்கள் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையில் சிக்கி அவதிப்படக்கூடும். பண பரிவர்த்தனைகளை செய்யும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயத்தில் எந்த ஒரு முடிவை எடுக்கும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மோசமாக இருக்கும். பணியிடத்தில் யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு வேலையையும் கவனமாக செய்ய வேண்டும். இலக்குகளை அடைய வழக்கத்தை விட கடினமாக உழைக்க வேண்டும். முக்கியமாக இக்காலத்தில் பண விஷயத்தில், அதுவும் பண பரிவர்த்தனை செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சியானது பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும். முக்கியமாக பண பிரச்சனைகளால் அவதிப்படக்கூடும். ஆரோக்கிய பிரச்சனைகளால் சிரமப்பட நேரிடும். திட்டமிடப்பட்ட வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். தொழில் மற்றும் வேலையில் நிறைய சவால்கள் எழும். பண விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே மனக்கசப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும். பேச்சை கட்டுப்படுத்தி, எந்த வேலையையும் அவசரமாக செய்யாமல் பொறுமையாக செய்ய வேண்டும். தொழிலதிபர்கள் நஷ்டத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்காமல் போகலாம். சொத்து தொடர்பான ஆவணங்களை படிக்காமல் கையெழுத்திடுவதைத் தவிர்க்க வேண்டும். எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், கவனமாக யோசித்த பின் எடுங்கள். முக்கியமாக இக்காலத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
