For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்னு ஒரு நோயா?... இது யாருக்கெல்லாம் வரும்னு தெரியுமா?

|

சமீபத்தில், புளோரிடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி, 'நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ்' எனப்படும் கொடிய சதை உண்ணும் நோயால் பாதிக்கப்பட்டு, உயிருக்கு போராடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து முன்னதாகவே இந்தியாவில் உள்ள ஜார்க்கண்ட் மாநிலத்தில் பிறந்து 25 நாட்களே ஆன ஒரு குழந்தையை பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது. இப்படி பெரும் அபாயத்தை ஏற்படுத்தும் இந்த நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகளை பற்றி கீழ்க்கண்டவாறு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் என்றால் என்ன?

நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் என்றால் என்ன?

நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் (என்.எஃப்) என்பது கடுமையான தோல் நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட பகுதி அழுக ஆரம்பித்து விடும். இதை சதை உண்ணும் நோய் என்ற பெயரிலும் அழைக்கின்றனர். இதை நாம் சரியாக கண்டு கொள்ளா விட்டால் அது அப்படியே படர்ந்து பரவி உங்கள் உயிருக்கே உலை வைத்து விடும். ஆன்டி பயாடிக் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே இதை தடுத்து நிறுத்த முடியும்.

என்.எஃப் பரவுவதற்கு பல பாக்டீரியாக்கள் காரணமாகின்றன. ஆனால் மருத்துவ வல்லுநர்கள் 'குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகாக்கஸ்' பாக்டீரியாக்கள் இந்த நிலைக்கு மிகவும் முக்கிய காரணமாக இருப்பதாக கூறுகின்றனர். இந்த ஆபத்தான தொற்று கிமு ஐந்தாம் நூற்றாண்டு முதல் ஹிப்போகிரட்டீஸின் காலத்தில் மக்களை பாதித்த ஒன்று என்று நம்பப்படுகிறது.

18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் தான், இது சுற்றியுள்ள திசுக்களை அழிப்பதால் இது 'பாகெடெனிக் அல்சர்' என்றும் அழைக்கப்பட்டது. பின்னர் 1952 ஆம் ஆண்டில், இந்த அழுகும் நோய் நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸ் என உருவாக்கப்பட்டது. மேலும், அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும், சுமார் 500 என்.எஃப் வழக்குகள் பதிவாகின்றன என்ற அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது.

MOST READ: இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த இந்து - முஸ்லீம் ஓரினச்சேர்க்கை தம்பதி...

நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸின் வகைகள்

நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸின் வகைகள்

நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸை ஏற்படுத்த பல பாக்டீரியாக்கள் உள்ளன, அவற்றில் சில முக்கியமானவை பின்வருமாறு:

குரூப் A ஸ்ட்ரெப்டோகாக்கி

இந்த கிராம்-பாசிட்டிவ் பாக்டீரியாக்கள் நோயை உண்டாக்குவதற்கு மிகவும் காரணமாகின்றன. இவை பொதுவாக ஒரு நபரின் மூக்கு, தொண்டை மற்றும் சருமத்தில் உள்ளன. குரூப் ஏ ஸ்ட்ரெப்டோகோகி பாக்டீரியா தான் தொண்டையில் இருக்கிறது. இது நமது உடலில் உள்ள எதாவது காயங்கள் வழியாக உள்ளே நுழைந்து சருமத்தை அழுகச் செய்யும் வேலையை செய்கிறது.

விப்ரியோ வுல்னிஃபிகஸ்

இந்த வகை எதிர்மறை பாக்டீரியாக்கள் கடல், உப்பு குளங்கள் மற்றும் கரையோரங்கள் போன்ற கடல் சூழல்களில் காணப்படுகின்றன.பாதிக்கப்பட்ட தண்ணீரில் குளிக்கும் போதோ அல்லது நீச்சலடிக்கும் போதோ இந்த பாக்டீரியாக்கள் நமது உடலினுள் உள்ள காயங்கள் வழியாக நுழைந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

எஸ்கெரிச்சியா கோலி

இந்த வகை பாக்டீரியாக்கள் நமது குடல் மற்றும் பெருங்குடலில் வாழ்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் என்ன செய்யும் என்றால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை உதவியாக இருப்பதை தடுத்து உணவை விஷமாக்கி விடும். குடலிருந்து இவை வெளியே வரும் போது மற்ற பாகங்களுக்கு பரவி என் எஃப்பை உருவாக்கி விடும்.

பாக்டீராய்டுகள்

இந்த வகை எதிர்மறை பாக்டீரியாக்கள் முக்கியமாக ஒரு நபரின் குடல் வாய் மற்றும் பிறப்புறுப்புகளில் காணப்படுகின்றன. குடலில் இருக்கும் காயங்கள் அல்லது துளை வழியாக வெளியே வந்து நமது உடலில் உள்ள மற்ற பாகங்களுக்கு நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸினை பரப்புகிறது.

ப்ரீவோடெல்லா

இந்த எதிர்மறை பாக்டீரியாக்கள் உடல் முழுவதும் உள்ளன. இது மற்ற என் எஃப் பாக்டீரியாக்களுடன் சேர்ந்து கடுமையான தொற்று நோயை உண்டாக்குகிறது. ப்ரெவோடெல்லா பொதுவாக கழுத்து, தாடை, வாய் மற்றும் முகத்தை தாக்குகிறது.

காரணங்கள்

காரணங்கள்

இந்த தொற்று ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாக்டீரியாக்களால் ஏற்படலாம். இது நமது சருமத்தில் உள்ள இணைப்புத் திசுக்களை பாதித்து கொஞ்சம் கொஞ்சமாக பரவத் தொடங்குகிறது. உடம்பில் உள்ள காயங்கள் மற்றும் வெட்டுக்கள் இந்த பாக்டீரியாக்கள் எளிதாக உட் செல்ல வழிவகை செய்யப்படுகிறது.

உடலுக்குள் நுழைந்த பின்னர், அவை திசுக்கள் வழியாக பரவி, ​​அவை இரண்டு நச்சுகளை (எண்டோடாக்சின் மற்றும் எக்சோடாக்சின்) உற்பத்தி செய்கின்றன. இவை திசுக்களுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. இதனால் அந்த திசுக்களுக்கு ஆன்டி பாடிகள் கூட செல்லாது. எனவே அப்பகுதியில் உள்ள திசுக்களில் அழுகல் அல்லது சிதைவு உண்டாகிறது. இந்த தொற்று 4 விதமாக பரவுகிறது

வகைகள்

வகைகள்

வகை 1

நேர்மறை பாக்டீரியா குரூப் A ஸ்ட்ரெப்டோகோகி எதிர்மறை பாக்டீரியா எஸ்கெரிச்சியா கோலி மற்றும் பாக்டீரியாய்டுகள் போன்றவற்றால் ஏற்படுகிறது.

வகை 2

இது தனியாக குரூப் A ஸ்ட்ரெப்டோகோகி பாக்டீரியாவால் மட்டும் ஏற்படுகிறது.

வகை 3

விப்ரியோ வுல்னிஃபிகஸ் நோய் பரவ காரணமாக அமைகிறது.

வகை 4

பூஞ்சை மற்றும் கேண்டிடாவால் இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது.

அறிகுறிகள்

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட நபருக்கு தோல் சிவத்தல், தசை இழுத்தல் அல்லது பொதுவான காய்ச்சல் வரக் கூடும். பாதிக்கப்பட்ட சருமத்தில் வலி மற்றும் வீக்கங்கள் ஏற்படும்.

குளிர் காய்ச்சல்

இரத்த அழுத்தம் குறைவு

வாந்தி எடுத்தல்

குமட்டல்

கொப்புளங்கள் அல்லது கருப்பு புள்ளி தோன்றுதல்

பாதிக்கப்பட்ட இடத்தில் அதிக வலி

தூக்கமின்மை

சோர்வு

பலவீனம்

நீர் பற்றாக்குறை

வயிற்று போக்கு

MOST READ: சுமாரான கலரா இருக்கோம்னு கவலைப்படறீங்களா? இந்த மேக்கப் போடுங்க... பளிச்னு தெரிவீங்க...

அபாயமான காரணிகள்

அபாயமான காரணிகள்

மது அருந்துபவர்கள், போதை மருந்து சாப்பிடுபவர்கள் இதனால் அதிகம் பாதிப்படைகின்றனர்.

வயதானவர்கள்

நோயெதிப்பு சக்தி இல்லாமை

டயாபெட்டீஸ்

சரும தொற்றுகள்

நாள்பட்ட நோய்கள்

அறுவை சிகிச்சை செய்தவர்கள்

பெண்கள் பிரசவிக்கும் போது

உடல் பருமனான மக்கள்.

விளைவுகள்

விளைவுகள்

இது கீழ்க்கண்ட பாதிப்புகளை ஏற்படுத்துகின்றனர்.

உடலுறுப்பு செயலிழப்பு

செப்சிஸ், ஒரு வகையான இரத்த தொற்று

தீவிரமான பரவல் மூலம் கால்களை இழக்க நேரிடுதல்

மரணம்

கண்டறிதல்

கண்டறிதல்

நெக்ரோடைசிங் ஃபாஸ்சிடிஸின் நோயைக் கண்டறிவதன் மூலம் ஒரு நபரின் வாழ்நாளை நீட்டிக்க முடியும்.

இரத்த பரிசோதனை மூலம் நோய்த் தொற்றை கண்டறியலாம். சருமத்தில் ஏற்பட்ட பாதுப்பை சி. டி ஸ்கேன் மூலம் கண்டறிய முடியும்.

எம்ஆர்ஐ ஸ்கேன் சசைகளின் அடர்த்தியை கண்டறிந்து அதன் மூலம் நோயை கண்டறிகிறது.

இன்ட்ரா-ஆபரேட்டிவ் பயாப்ஸி, மேலும் பாக்டீரியாவால் மாவு வாசனை, துர்நாற்றம் வீசுதல், இரத்த இழப்பு போன்றவை இவற்றின் மூலம் கண்டறியலாம்.

பாதிக்கப்பட்ட திசுக்களை எடுத்து திசு கல்ச்சர் மேற்கொள்ளுதல்

ஆன்டி பயாடிக் சிகிச்சைகள்

ஆன்டி பயாடிக் சிகிச்சைகள்

செப்சிஸை கட்டுப்படுத்தவும் அதன் பரவுதலை தடுக்க ஆன்டி பயாடிக் மருந்துகள் பயன்படுகிறது. வான்கோமைசின் மற்றும் டப்டோமைசின் போன்ற மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

அறுவை சிகிச்சைகள்

இதில் பாதிக்கப்பட்ட அழுகிய திசுக்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கி விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் ஆரோக்கியமான திசுக்கள் வளரத் தொடங்கி விடுகிறது. இதனால் நோய்த் தொற்றை மற்ற பாகங்களுக்கு பரவாமல் தடுக்க முடியும்.

இம்யூன் குளோபுலின் (IVIG) சிகிச்சை

விலங்குகளிடமிருந்து பெறப்பட்ட இம்புனோகுளோபின் என்ற ஆன்டி பாடிகள் பாக்டீரியா மற்றும் வைரஸ்களிடமிருந்து காக்கிறது. இம்புனோகுளோபின்லுள்ள ஆன்டிபாடிகளின் மூலம் சசைகளை உண்ணும் பாக்டீரியாக்களை அழிக்க முடியும்.

ஹைபர்பெரிக் ஆக்ஸிஜன் தெரபி (HBO)

பாதிக்கப்பட்ட சருமத்திற்கு 100 % ஆக்ஸிஜன் சப்ளை வழங்குவதன் மூலம் அந்த அழுகிய தோல்களை சீக்கிரமாக சரி செய்ய முடியும். ஆனால் இந்த சிகச்சை இன்னும் முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளக் படவில்லை. இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

MOST READ: சொந்த வீடு வேணும் கடன் வாங்க கூடாது... - செவ்வாய்கிழமையில் இதை பண்ணுங்க

தடுக்கும் வழிகள்

தடுக்கும் வழிகள்

உங்கள் காயங்கள் அல்லது வெட்டுக்களை உடனடியாக கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

காயங்கள் அல்லது சரும தொற்றுகள் இருக்கும் போது நீச்சல் குளத்தில் நீந்த வேண்டாம்.

காயங்கள் இருந்தால் உடனே பேண்டேஜ் போட்டு விடுங்கள்.

சருமத்தில் பல காயங்கள் மற்றும் பாதிப்புகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுங்கள்.

ஸ்டிரிங்கிரே போன்ற கடல் வாழ் உயிரினங்களை தொடும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அத்ளட்ஸ் ஃபுட் போன்ற பூஞ்சை தொற்றுகள் கால்களில் ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ளுங்கள்.

கடற்கரையில் ஏராளமான நோய்கள் காத்துக் கொண்டு இருக்கின்றன. எனவே அங்கு அதிகமாக விளையாடும் போது கவனமாக இருப்பது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Necrotizing Fasciitis: Causes, Symptoms, Diagnosis, Treatment And Prevention

Recently, a 12-year-old girl from Florida, was found fighting for her life after she had contracted a deadly flesh-eating disease known as 'necrotizing fasciitis'. Previously in Jharkhand (India), the disease had affected a 25-day-old born.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more