For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மரு வலிக்காம உதிரணுமா? அன்னாசி சாறை இப்படி அப்ளை பண்ணுங்க உதிர்ந்திடும்...

சருமத்தில் உண்டாகும் மருக்களை வலியில்லாமல் நீக்குவதற்கு கிச்சனில் இருக்கும் சில பொருள்களை இங்கே பட்டியலிட்டுக் காட்டுகிறோம். படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

By Mahibala
|

Recommended Video

How to remove warts on face : மருவை அகற்ற இதை செய்யுங்கள்-வீடியோ

சிலருக்கு சருமத்தில் ஆங்காங்கு மருக்கள் இருக்கும். இந்த மருக்கள் பார்ப்பதற்கு மச்சம் போல் இருக்கும். இதனால் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இவை அழகை கெடுப்பது போல் இருக்கும்

இந்த மருக்கள் உருவாவதற்கு காரணம், கொலாஜன் மற்றும் இரத்த நாளங்கள் ஒன்று சேர்ந்து, சருமத்தின் மேல் புறத்தில் மருக்களாக உருவாகும்.

Kitchen Ingrediants For Removing Skin Wart

கீழே நம்முடைய வீட்டுக் கிச்சனில் இருக்கும் சில பொருள்களை உங்களுக்குப் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறோம். அதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி உங்களுடைய உடலில் உள்ள மருக்களை வலியில்லாமல் நீக்கிக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இஞ்சி

இஞ்சி

எல்லா வீடுகளிலுமே இஞ்சி எப்போதுமே வைத்திருப்போம். இந்த இஞ்சியைத் துருவியோ இடித்தோ அதிலிருநு்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அந்த சாறை அவ்வப்போது மருக்கள் உள்ள இடத்தில் வைத்து வாருங்கள். மரு தானாக உதிரும். பெரிய மருவாக இருந்தால் அதை பற்றாகக் கூடாக போடலாம்.

MOST READ: கோடீஸ்வர யோகம் தரும் சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன் சனி - யாருக்கு யோகம் வரும்

அன்னாசி

அன்னாசி

அன்னாசி என்றதும் ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆம். அன்னாசி பழத்தின் சாறினை எடுத்து மருக்கள் மீது வைத்திருந்தாலும் மருக்கள் உதிர ஆரம்பிக்கும்.

வெங்காயச்சாறு

வெங்காயச்சாறு

சின்ன வெங்காயத்தினை அரைத்தோ அல்லது இடித்தோ சாறெடுத்து அந்த சாறினை மருக்கள் மீது வையுங்கள். முதல் முறை சந்று எரிச்சலாக இருப்பது போல இருக்கும். ஆனால் விரைவிலேயே மரு உதிர்ந்து விடும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் கொழுப்பைக் கரைக்க மட்டுமல்ல, மருவைக் கரைக்கவும் பயன்படும். தினமும் காலையும் மாலையும் ஆப்பிள் சீடர் வினிகர் சில துளிகள் மருக்கள் மேல் வைத்து வந்தால் மரு உதிர்ந்து இருந்த இடம் தெரியாமல் ஆகிவிடும்.

MOST READ: மரணத்தை தரும் செப்சிஸ் நோயை நம் முன்னோர்கள் இத சாப்பிட்டுதான் ஓடஓட விரட்டிருக்காங்க...

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில்

மற்ற மேற்கண்ட பொருள்களால் லேசான எரிச்சல் இருப்பதாக உணர்ந்தால் நீங்கள் தாராளமாக டீ ட்ரீஎசன்ஷியல் ஆயிலைப் பயன்படுத்தலாம். குளிர்ச்சியாகத் தான் இருக்கும். மரு இருந்த தழும்பு கூட தெரியாமல் உதிர்ந்து விடும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

சருமப் பிரச்சினைகளுக்கு எலுமிச்சை சிறந்த தீர்வைத் தரும் என்பமு நன்கு தெரியும். இது மருவுக்கும் பொருந்தும். மரு உள்ள இடத்தில் அடிக்கடி எலுமிச்சை சாறினை அப்ளை செய்து வந்தால் மிக வேகமாக மரு உதிர்ந்து விடும்.

பூண்டு

பூண்டு

பூண்டும் வெங்காயத்தைப் போலத் தான். முதல்முறை பயன்படுத்தும்போது கொஞ்சம் எரிச்சல் இருக்கத்தான் செய்யும். ஆனால் மேலே சொல்லப்பட்ட எல்லா பொருள்களையும் விட பூண்டு மிக வேகமாக மருவை உதிரச் செய்துவிடும்.

MOST READ: செல்வந்தர்களாக்கும் சோடசக்கலை நேரம்: நினைத்தது நிறைவேறும்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை உடலுக்குக் குளிர்ச்சி தரக்கூடிய ஒரு பொருள். அதனால் குழந்தைகளுக்குக் கூடு மரு உள்ள இடத்தில் இந்த ஜெல்லை அப்ளை செய்யலாம். வலியோ எரிச்சலோ இல்லாமல் மரு உதிரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kitchen Ingrediants For Removing Skin Wart

Common wartsusually grow on your fingers and toes, but can appear elsewhere. They have a rough, grainy appearance and a rounded top. Common warts are grayer than the surrounding skin.
Story first published: Monday, September 16, 2019, 10:22 [IST]
Desktop Bottom Promotion