For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்ம தோல் பிடிக்கலையா? வேற தோலைகூட இப்படி ஒட்டிக்கலாமாம்... எப்படினு பாருங்க

தோல் ஒட்டுதல் அல்லது தோல் மாற்று அறுவை சிகிச்சை என்பது பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தோலை நீக்கி புதிய தோலை பொருத்தும் சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சையில் நமது உடலில் மற்ற பகுதியில் உள்ள ஆரோக்கியமான தோலை

|

தோல் ஒட்டுதல் அல்லது தோல் மாற்று அறுவை சிகிச்சை என்பது பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தோலை நீக்கி புதிய தோலை பொருத்தும் சிகச்சை ஆகும். இந்த சிகச்சையில் நமது உடலில் மற்ற பகுதியில் உள்ள ஆரோக்கியமான தோலை எடுத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தி விடுகிறார்கள்.

Skin Grafting

இந்த ஒட்டும் முறை பெரும்பாலும் காயங்கள், எரிந்த சருமம், நோய்வாய்ப்பட்ட தோலை உடையவர்களுக்கு செய்யப்படுகிறது. அதே மாதிரி தோல் புற்றுநோய், தொற்று, நியூரோரோட்டிங் ஃபாசிசிடிஸ் அல்லது பர்புரா ஃபுல்மினின்ஸ் போன்ற பாதிப்புகளுக்கும் தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆரோக்கியமான தோலை எடுத்தல்

ஆரோக்கியமான தோலை எடுத்தல்

இப்படி மாற்றம் செய்வதற்கு ஆரோக்கியமான தோலை நம்முடைய தொடை மற்றும் பிட்டத்தில் இருந்து எடுக்கின்றனர். இந்த ஆரோக்கியமான தோலை பாதிக்கப்பட்ட இடத்தில் பொருத்தி காலப்போக்கில் பாதிப்பை ஆற்றி குணப்படுத்துகின்றனர். இந்த அறுவை சிகிச்சையை செய்ய நார்மலாக அனஸ்தீசியா கொடுக்கப்பட்டு எந்த வித வேதனையும் இல்லாமல் செய்யப்படுகிறது.

MOST READ: தொழுநோய் யாருக்கெல்லாம் வரும்... என்ன அறிகுறி? முழுசா தெரிஞ்சிக்க இத படிங்க

வகைகள்

வகைகள்

தோலின் தடிமன் மற்றும் இயற்கை தன்மையை பொருத்து மூன்று வகைகளாக பிரிக்கின்றனர். டோனர்கிட்டை இருந்து தோலை எடுக்கும் இடத்தை பொருத்து தோல் ஒட்டுதல் சிகச்சை வித்தியாசப்படுகிறது.

ஆட்டோகிராப்ட்

ஆட்டோகிராப்ட்

இதை ஆட்டோலாஜிக் கிராப்ட் என்றும் அழைக்கின்றனர். இதில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்தே ஆரோக்கியமான பகுதியின் தோல் எடுக்கப்படும். அதைக் கொண்டு தோலை மாற்றுகின்றனர்.

அலோஜெனிக் கிராப்ட்

அலோஜெனிக் கிராப்ட்

இந்த சிகிச்சையின் போது ஆரோக்கியமான தோல் மற்ற நபரிடம் இருந்து எடுத்து நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஐசோஜெனிக் கிராப்ட்

ஐசோஜெனிக் கிராப்ட்

ஏற்பவர் மற்றும் வழங்குபவர் இருவருமே ஜெனிடிக் (மரபணு) ஒத்துமை கொண்டு இருந்தால் இந்த ஒட்டுதல் முறை செய்யப்படுகிறது. (ஒத்த இரட்டையர்கள்)

MOST READ: தேனை இப்படி சாப்பிட்டிருக்கீங்களா? சாப்பிடுங்க இத்தனை நோயும் பறந்துடுமாம்...

ஜெனோகிராப்ட்

ஜெனோகிராப்ட்

இது ஜொனோஜெனிக் என்றும் அழைக்கப்படுகிறது. இதில் ஏற்பிகள் மற்றும் வழங்குபவர் வித்தியாசமான உயிரினங்கள். உதாரணத்திற்கு பன்றியின் தோலை எடுத்து தற்காலிகமாக பொருத்துதல்

ஆய்வக வளர்ப்பு

ஆய்வக வளர்ப்பு

நோயாளியிடம் இருந்தோ அல்லது வழங்குபவரிடம் இருந்தோ தோல் செல்களை எடுத்து ஆய்வுக் கூடத்தில் வைத்து வளர்த்து புதிய தோலை உருவாக்குவர்.

புரோஸ்தெட்டிக்

புரோஸ்தெட்டிக்

புரோஸ்தெட்டிக் இம்பிளாண்ட் பயன்படுத்துதல். அதாவது மெட்டல், பிளாஸ்டிக், செராபிக் போன்ற உலோகங்களை பயன்படுத்தி பொருத்துதல். தோலின் தடிமனை பொருத்து வகைப்படுத்துதல்

பிளவு தடிமன் ஒட்டுதல்

பிளவு தடிமன் ஒட்டுதல்

இந்த ஒட்டுதல் சிகச்சையில் தோலின் எபிடெர்மிஸ்(வெளிப்புற பகுதி) மற்றும் டெர்மிஸ் என்ற உட்புற பகுதியின் ஒரு பாதி அடங்கும். மேற்புற தோலை மட்டும் லேசாக நீக்கி பொருத்துவர்.அதுமட்டுமல்லாமல் தோலை 9 மடங்கு நீட்டி வலை போல வைத்து ஒட்டுபவர்.ஸ்கின் மெஸ்ஸர்(வலை) பயன்படுத்தி அதிகமான பகுதியை நம்மலால் கவர் செய்ய முடியும். இந்த வகை சிகிச்சை பெரிய பகுதிகளுக்கு பொருத்த சிறந்தது. மூட்டும் பகுதிகள் இந்த சிகச்சைக்கு ஏதுவானது கிடையாது. ஏனெனில் அந்த பகுதிகள் மடங்குவதால் பொருத்திய தோல் சுருங்க வாய்ப்புள்ளது.

முழு தடிமன்

முழு தடிமன்

இந்த சிகிச்சையில் டெர்மிஸின் முழு பாகமும் அடங்கும். அதே மாதிரி எபிடெர்மிஸ் பகுதியும் வழங்குபவரிடம் இருந்து எடுக்கப்படும். முழு தடினமான பயன்படுத்துவதால் பொருத்தும் போது அந்த அளவுக்கு வலி இருக்காது மேலும் பார்ப்பதற்கு இயற்கையான தோல் மாதிரியே இருக்கும். ஒட்டுப் போட்டதே தெரியாது. அழகுக்காக பாதிக்கப்பட்ட முகங்கள் அல்லது கைகளில் போன்ற சிறிய இடங்களில் இதைச் செய்கின்றனர். நல்ல ரிசல்ட் கொடுக்கும். ஆனால் ஆரோக்கியமான தோல் திசுக்கள் இழப்பு ஏற்படும்.

MOST READ: ஒயிட் ஒயின் - ரெட் ஒயின் ரெண்டுல எது ஆரோக்கியம்? தெரிஞ்சிக்கங்க...

கலப்பு

கலப்பு

வழங்குபவரிடம் இருந்து கார்டிலேஜ் என்ற அடித்தோலை எடுக்கின்றனர். உதாரணமாக மூக்கை சரி செய்ய காதுகளில் இருந்து தோல் எடுக்கப்படும். அதைப் பயன்படுத்தி சிகிச்சை மேற்கொள்வர்.

காரணங்கள்

காரணங்கள்

பாதிக்கப்பட்ட, எரிந்து போன தோலை மாற்ற இது பயன்படுகிறது. 100% இயற்கையான பார்வையை தோல் ஒட்டுதல் கொடுக்காவிட்டாலும் கோரமான நிலைமை மாறுகிறது. தோல் ஒட்டுதல் சிகிச்சை கீழ்கண்ட காரணங்களுக்காக பரிந்துரைக்கப்படுகிறது

அழகுக்காக அல்லது தோலை புதுப்பிக்க பரிந்துரைக்கப்படுகிறது

பாதிக்கப்பட்ட தோலை குணப்படுத்த

தோல் புற்றுநோய் சிகிச்சை

காயங்களை அறுவை சிகிச்சை மூலம் முழுவதும் மறைக்க முடியவில்லை என்றால் அப்பொழுது தோல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம்

இரத்த குழாய் அல்சர், அழுத்தத்தால் அல்சர், டயாபெட்டிக் அல்சர்

பெரிய காயங்கள்

சிகிச்சை செய்யும் முறை

சிகிச்சை செய்யும் முறை

முதலில் எந்த மாதிரியான தோல் ஒட்டுதல் மேற்கொள்ள வேண்டும் என்று வழங்குபவரிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அதற்கு பிறகு நோயாளிக்கு வலி இருக்காமல் இருக்க அனஸ்தீசியா கொடுக்கப்படுகிறது. அப்புறம் பாதிக்கப்பட்ட சருமத்தில் உள்ள தோலை நன்றாக நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு டெப்பிரிமெண்ட் என்று பெயர். பாக்டீரியா எதுவும் இல்லாமல் க்ளீன் செய்து விட வேண்டும். பிறகு வழங்குபவரிடம் இருந்து தோலை எடுத்து அந்த இடத்தில் பொருத்த ஆரம்பிக்கின்றனர். ஆன்டிபாயாடிக் மருந்துகள் கொண்டு வழியும் இரத்தம், சீழ் கள் போன்றவற்றை க்ளீன் செய்கின்றனர்.

லேசான தடிமன் கொண்ட தோலை பொருத்த டெர்ம்ட்டோம் என்ற கருவி பயன்படுகிறது. அதுவே சிறிய பகுதிக்கு பொருத்த ட்ரம் டெர்ம்ட்டோம் பயன்படுகிறது. பிறகு பிளவு தடிமன் முறையா அல்லது முழு தடிமன் முறையா என்று மருத்துவர்கள் வழங்குபவரிடம் இருந்து எடுக்கப்படும் ஆரோக்கியமான தோலை க் கொண்டு முடிவு செய்கின்றனர். பிளவு தடிமன் என்றால் ஸ்கின் மெஸ்ஸர் கொண்டு தோலை நீட்சியாக்கி பொருத்து கின்றனர். இந்த மாதிரியான வலை அமைப்பு தோல் நீர்மங்கள் ஈஸியாக ஊடுருவவும் ஹெமட்டோமா பிரச்சினை தோலில் ஏற்படாமல் தடுக்கவும் பயன்படுகிறது.

தோலை பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்திய பிறகு அழுத்தம் கொடுத்து அதை சரி செய்கின்றனர். இதற்கு ட்ரஸ்ஸிங் என்று பெயர். இதன் மூலம் சீக்கிரம் குணமாகி விடும். சில வாரங்களுக்கு முன்னாடியே அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர்கள் நோயாளியிடம் பேசி தயார்நிலையில் இருக்க சொல்வார்கள்.

கவனத்தில் வைக்க வேண்டியவை

கவனத்தில் வைக்க வேண்டியவை

உங்களுடைய குடிப்பழக்கம், மருந்துகள் இது குறித்து அறுவை சிகிச்சை முன் மருத்துவரிடம் பேசி விட வேண்டும். அஸ்பிரின், இபுப்ரோபென், வார்வெரைன் போன்ற மருந்துகளை தவிருங்கள் ஏனெனில் இதனால் இரத்தம் கட்டுதல் தடுக்கப்படும். புகைப் பிடிப்பதை தவிருங்கள். இது காயங்கள் சீக்கிரம் குணமாக உதவும். அதே மாதிரி அறுவை சிகிச்சையின் போது என்ன சாப்பிட வேண்டும், பரிந்துரைக்கும் மருந்துகள் என்னென்ன என்பதை மருத்துவரிடம் கேட்டு கொள்ளுங்கள்.

அறுவை சிகிச்சைக்கு பிறகு 3-7 நாட்களுக்கு ட்ரஸ்ஸிங் செய்ய வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக ஆற ஆரம்பிக்கும். ஃபைப்ரின் ஒட்டுதல், பிளாஸ்மாடிக் பிரமிப்பு மற்றும் தசைநார் வளர்ச்சி மற்றும் ஊசி ஆகியவை குணப்படுத்த செய்யப்படுகிறது. ஒரு வாரம் கழித்து ட்ரஸ்ஸிங் முறை மாற்றமடையும். 2-3 மாதங்களில் சருமம் பழைய நிலைக்கு வந்து விடும்.

பராமரிப்பு

பராமரிப்பு

சிகிச்சைக்கு பிறகு மருத்துவமனையில் 1-2 வாரங்கள் இருக்க வேண்டும். சிகிச்சையை பொருத்து இந்த நாட்கள் மாறுபடலாம்.

MOST READ: உயிர எடுக்கிற குழி முதல்தடவ ஒரு உயிரை காப்பாத்திருக்கு... என்ன நடந்தது தெரியுமா?

ஒய்வெடுங்கள்

ஒய்வெடுங்கள்

சிகிச்சைக்கு பிறகு அதிகமாக அசைவதை தவிருங்கள். குறிப்பாக அறுவை சிகிச்சை செய்த பகுதியை கொண்டு வேலை செய்ய வேண்டாம். உடற்பயிற்சி செய்ய நினைத்தால் கூட மருத்துவரை அணுகி விடுங்கள்.

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள்

மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்து கொள்ளுங்கள். ஆன்டிபாயாடிக், வலி நிவாரணிகள் காயங்கள் சீக்கிரம் ஆற உதவும்.

சூரிய ஒளி வேண்டாம்

சூரிய ஒளி வேண்டாம்

6 மாதத்திற்கு சூரிய ஒளி படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் அந்த சருமம் கருத்துப் போக மற்றும் பாதிப்படைய வாய்ப்புள்ளது.

உலர்ந்த பிறகு ட்ரஸ்ஸிங் செய்தல்

உலர்ந்த பிறகு ட்ரஸ்ஸிங் செய்தல்

அந்த பகுதியை லேசாக சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கழுவி விட்டு நன்றாக உலர வைத்து துடைத்து பிறகு ட்ரஸ்ஸிங் செய்யுங்கள்

மருத்துவரை தவறாமல் காணுங்கள்

காயங்கள் ஆறும் வரை மருத்துவரிடம் சரியாக செக்கப் செய்து வாருங்கள்.

MOST READ: பார்க்கதான் சின்ன பழம்... இதுக்குள்ள இருக்கிற விஷயம் தெரிஞ்சா தினம் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க...

விளைவுகள்

விளைவுகள்

அறுவை சிகிச்சைக்கு பிறகு அரிதாக சில விளைவுகள் ஏற்படலாம். தொற்று, பாதிப்பு இதைத் தவிர்த்து கீழ்க்கண்ட விளைவுகள் உண்டாகலாம்

பொருத்திய தோலை நீக்கும் நிலைமை

வெளிப்புற நோய்த்தொற்று

சிகச்சை தோல்வியடைதல்

ஹெமட்டோமா

பொருத்திய தோலில் உணர்ச்சியற்ற திறன் அல்லது அதீத உணர்வு

இரத்தம் கசிதல்

நாள்பட்ட வலி

சரியாக தோல் பொருந்தாமல் போதல்

சருமத்தின் நிறம் மாறுதல்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: treatment
English summary

Skin Grafting: Types, Procedure And Complications

A skin graft is done when an individual has lost the protective covering of skin due to an injury, burns or illness. It is commonly used to treat extensive skin loss due to skin cancers or infections such as necrotizing fasciitis or purpura fulminans. Here we discuss about skin crafting types, treatment, complications and so on.
Story first published: Friday, May 3, 2019, 15:51 [IST]
Desktop Bottom Promotion