Latest Updates
-
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
ஐயங்கார் ஸ்டைல் பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, செமையா இருக்கும் -
வெயிலால் கருமையாகியுள்ள சருமத்தை வெள்ளையாக்கணுமா? அப்ப இந்த முலாம் பழ ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
வெயிலின் தாக்கத்தை குறைக்க வாஸ்து செடிகளுக்கு மவுசு: மணி பிளாண்ட், அரேகா பாம் வாங்க மக்கள் ஆர்வம் -
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா?
காமாலைக்கு பயப்படறீங்களா? கரும்பு ஜூஸை இப்படி குடிங்க... காமாலை ஓடியே போயிடும்...
இயற்கையாக கரும்புச்சாறு, நெல்லிக்காய், பார்லி தண்ணீர், பூண்டு ஆகியவை சரிசெய்யும் ஆற்றல் கொண்டது பற்றி தான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.
நமது கல்லீரல் தான் உடலின் மிக முக்கியமான உறுப்பாகும். ஏனெனில் இந்த உறுப்பு தான் நமது உடலில் தேங்கியுள்ள தேவையற்ற நச்சுக்களை, இரத்த செல்களை உடலில் இருந்து நீக்குகிறது. மேலும் நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி அதை ஆற்றலாக மாற்றிக் கொடுக்கிறது.

கல்லீரலில் ஆரஞ்சு மஞ்சள் நிறம் கலந்த நிறமிகள் உருவாகும். இது பிலிரூபின் என்று அழைக்கப்படுகிறது. இதுவே கல்லீரல் அழற்சி ஆகும் போது பிலிரூபின் உற்பத்தி தடைபடுகிறது. இதனால் அந்த பிலிரூபின் நிறமிகள் இரத்தத்தில் கலந்து மற்ற உறுப்புகளுக்கும் சென்று மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.

அறிகுறிகள்
அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல்
சரும நிறம் மஞ்சளாக மாறுதல்
கண்கள் மஞ்சள் நிறத்தில் மாறுதல்
இரத்தக் கசிவு
காய்ச்சல்
வாந்தி
குமட்டல்
பசியின்மை
வீக்கம்
திடீரென உடல் எடை குறைதல்
காய்ச்சல்
போன்றவை ஏற்படும்.

கரும்பு ஜூஸ்
கரும்பு ஜூஸில் நிறைய ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள், ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது மஞ்சள் காமாலை போக்க பெரிதும் பயன்படுகிறது. எனவே நீங்கள் கரும்பு ஜூஸ் சாப்பிடுவது உங்கள் கல்லீரல் மறுபடியும் இயங்க உதவும். பிலிரூபின் அளவும் சரியாகும். எனவே தினமும் 1-2 டம்ளர் கரும்புச் சாறு குடித்து வாருங்கள்.

பூண்டு
பூண்டில் உள்ள அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்கள் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பயன்படுகிறது. மேலும் மஞ்சள் காமாலையில் இருந்து சீக்கிரம் மீள இது உதவி செய்யும்.
எனவே 3-4 பூண்டு பற்களை தினமும் எடுத்துக் கொண்டு வாருங்கள்.

சிட்ரஸ் பழங்கள்
ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சை போன்ற ஜூஸ் வகைகள் கல்லீரலின் செயல்பாட்டை பழைய நிலைக்கு கொண்டு வந்து பிலிரூபின் அளவை குறைக்கிறது. எனவே தினமும் 1டம்ளர் திராட்சை ஜூஸ் அல்லது ஆரஞ்சு ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள்.

ரோஸ்மேரி எண்ணெய்
ரோஸ்மேரி எண்ணெய்யில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஹெப்டோப்ரக்டிவ் தன்மை கல்லீரலை காக்கிறது.
12 சொட்டுகள் ரோஸ்மேரி எண்ணெய் மற்றும் 30 மில்லி லிட்டருடன் கலந்து கல்லீரல் இருக்கும் பகுதியான அடி வயிற்றில் அப்ளே செய்யுங்கள். லேசாக மசாஜ் செய்து விடுங்கள். இது நல்ல பலனை தரும்.

சூரிய ஒளி
குழந்தைகளுக்கு பிறக்கும் போது வரும் மஞ்சள் காமாலையை போக்க சூரிய ஒளி பெரிதும் பயன்படுகிறது. இந்த சூரிய ஒளி பிலிரூபின் மூலக்கூறுகளை ஐசோமரைசேசன் செய்து விடுகிறது.

விட்டமின் டி
சைனீஸ் மெடிக்கல் அசோசியேஷன் நாளிதழ் கருத்துப் படி பிறந்த குழந்தைகளுக்கு வரும் மஞ்சள் காமாலைக்கு விட்டமின் டி பற்றாக்குறை தான் என்கிறார்கள். எனவே உங்கள் உணவில் விட்டமின் டி அதிகமான உணவை எடுத்துக் கொண்டால் பிறக்கின்ற குழந்தைக்கு மஞ்சள் காமாலை வருவதை தடுக்கலாம். முட்டை, மீன்கள், சீஸ், பால், மஸ்ரூம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

பார்லி தண்ணி
க்ளினிக்கல் ஆன்ட் டைகனிஸ்ட் ரிசர்ஜ் படி பார்லி தண்ணீரில் மஞ்சள் காமாலையை போக்கும் மருத்துள குணம் இருப்பது தெரிய வந்துள்ளது.
பயன்படுத்தும் முறை
1 டீ ஸ்பூன் வறுத்த பார்லி பொடி யை ஒரு டம்ளர் நீரில் கலந்து கொள்ளுங்கள். இதை தினமும் குடித்து வாருங்கள். மஞ்சள் காமாலையில் இருந்து மீண்டு விடலாம்.

துளசி
துளிசியில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை மற்றும் ஹெப்போப்ரக்டிவ் தன்மை மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது. எனவே தினமும் இரண்டு துளசி இலைகளை மென்றோ அல்லது துளசி டீ போட்டு குடித்தோ வரலாம்.

நெல்லிக்காய்
நெல்லிக்காய் மரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் உடையது. அதிலும் நெல்லிக்காய் பழத்திற்கு மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு, அழற்சியை போக்கும் தன்மை உள்ளது.
பயன்படுத்தும் முறை
2-3 நெல்லிக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். நன்றாக குளிர்ந்த பிறகு அதனுடன் தேன் சேர்த்து குடித்து வாருங்கள்.

தக்காளி
தக்காளியில் லைக்கோபீன், ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் ஆன்டி ஜெனோடாக்ஸிக் போன்ற குணங்கள் உள்ளன. இதுவும் மஞ்சள் காமாலை குணப்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது.
பயன்படுத்தும் முறை
2-3 தக்காளியை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். பிறகு தண்ணீரை வடிகட்டி அதன் தோலை உரித்து கொள்ளுங்கள். பிறகு வேக வைத்த தக்காளியை பிசைந்து தண்ணீர் சேர்த்து அந்த ஜூஸை தினமும் குடித்து வாருங்கள். மஞ்சள் காமாலையை குணப்படுத்தி விடலாம்.

மஞ்சள் காமாலை வராமல் தடுக்க
மது அருந்துவதை தவிருங்கள்
உடல் எடையை பராமரியுங்கள்
பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்
நிறைய தண்ணீர் குடியுங்கள்.



Click it and Unblock the Notifications