Latest Updates
-
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக
உடம்புல ரத்தம் வேகமா ஏறணுமா? இத தினம் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்...
உங்களுடைய ரத்தத்தின் அளவை அதிகரிப்பதற்கு சாப்பிட வேண்டிய ஃபோலிக் அமில உணவுகள் பற்றி இந்த தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதுபற்றிய ஒரு தொகுப்பு தான் இது.
நம்முடைய உடலில் ரத்த அளவு மற்றும் ஹீமோகுளோபின் அளவை நாமே அதிகரித்துக் கொள்ளச் செய்யு வழிகள் பற்றித் தான் நாம் இங்கே பார்க்கிறோம்.

நம்முடைய உடலில் ரத்த அளவு குறைவாக இருக்கிற பொழுது தான், இதய பலவீனம், தலைவலி, தலை சுற்றல் போன்ற பிரச்சினைகள் வருவதுண்டு. நம்முடைய உடலில் ரத்தத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென்றால் அதற்கு நிச்சயம் நாம் செய்ய வேண்டியது நம்முடைய உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்வது தான்.

ரத்தம்
உங்களுடைய உடம்பில் ரத்தத்தின் அளவு குறைவாக இருக்கிறதா நினைக்கிறீர்களா? அப்படி உங்களுடைய உடலில் ரத்தத்தை சீக்கிரமா அதிகப்படுத்தணுமா அதற்கு மிகவும் இன்றிமையாதது என்ன தெரியுமா? இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம், வைட்டமின் சி ஆகியவை ஒன்றாக சீராகக் கலக்க வேண்டியது அவசியம். அப்படி சேர்வதற்கு நாம் தினமும் சாப்பிட வேண்டிய உணவுகள் முக்கியம். இதை குறிபிட்ட சீரான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிரசவ மற்றும் மாதவிலக்கு சமயங்கள்
பிரசவ காலங்களில் மற்றும் மாதவிலக்கு சமயங்களில் குறிப்பாக பெண்களுடைய உடலில் ரத்த சுழற்சி அதிக அளவில் நடக்கிறது. அந்த சமயங்களில் உடலின் ஊட்டச்சத்துக்கள் மிக சீரான அளவில் இருக்க வேண்டும். அதனால் தான் கர்ப்ப காலங்களில் பெண்களுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர்.

வெஜிடேரியன்களுக்கு
நீங்கள் ஒருவேளை வெஜிடேரியன் உணவுப் பழக்கம் மட்டும் கொண்டவர்களாக இருந்தால் காய்கறிகள் மற்றும் கீரைகள் மூலம் இந்த மூன்று சத்துக்களையும் பெற முடியும்.
மாதுளை
தர்பூசணி
பீட்ருட்
ஆப்பிள்
ஆரஞ்சு
பப்பாளி
திராட்சை
லிட்சி
வாழைப்பழம்
கொய்யாப்பழம்
ஆகிய பழங்கள் தினசரி உணவில் நிறைய எடுத்துக் கொள்வது நல்லது.

நான் வெஜிடேரின்கள்
மேலே சொல்லப்பட்ட பழங்கள் எல்லாவற்றையும் சேர்த்து சாப்பிடலாம். அதுதவிர
முட்டை (மஞ்சள் கருவும் சேர்த்து)
சிக்கன்
மீன்
நண்டு
இறால்
சிப்பிகள்

பொதுவான உணவுகள்
காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகள், பழங்கள் தவிர்த்து வேறு எந்ததெந்த உணவுகளில் அதிக இளவில் இருக்கிறது என்றால்
பேரிச்சம் பழம்
பருப்பு வகைகள்
பீன்ஸ், சோயா பீன்ஸ்
வேர்க்கடலை
சுண்டல்
போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது.

எப்படி உடம்பில் சேரும்?
பொதுவாக நாம் சாப்பிடும் இரும்புச் சத்துடைய உணவுகள் நம்முடைய உடலில் சரியாகச் சேர வேண்டுமென்றால் அதற்கு சரியான வகைகளில் வைட்டமின் சி உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை, ஜ்ட்ராபெர்ரி, தக்காளி போன்ற புளிப்பான பழங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் கீரைகள், சுண்டல், பிரக்கோலி போன்ற ஃபோலிக் அமிலங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

சாப்பிடக் கூடாத உணவுகள்
நம்முடைய உடலில் இரும்புச் சத்து உடலில் சேர்வதைத் தடுக்கும் சில உணவுகளை நாம் சாப்பிடுகிறோம். அதை நாம் நிச்சயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அவை என்னென்ன என்று இங்கே பார்க்கலாம்.
காபி
டீ
கோலா
பீர்
ஒயின்
ஆல்கஹால்
இவை எல்லாமே நம்முடைய உடலில் இரும்புச் சத்து சேர்வதைத் தடுக்கிறது.

ஹீமோகுளோபின்னா என்ன?
நம்முடைய ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுப்பதே இந்த ஹீமோகுளோபின் தான். ரத்தத்தில் உள்ள இரும்புச்சத்து நிறைந்திருக்கிற புரதம் ஒன்று ரத்த சிவப்பு அணுக்களில் இருப்பது தான் அது.

எவ்வளவு இருக்கணும்?
ஆண்களுக்கு இதன் அளவு 14 முதல் 18 கிராம் / டெசி லிட்டர் அளவிலும் அதுவே பெண்களுக்கு 14 முதல் 16 கிராம் / டெசி லிட்டர் அளவிலும் இருக்க வேண்டியது அவசியம். இதைவிடக் குறைந்தால் ரத்த சோகை நோய் தாக்கும் அபாயம் இருப்பதாக அர்த்தம்.



Click it and Unblock the Notifications