Latest Updates
-
சிம்ம ராசியில் கேது: அடுத்து வரும் 90 நாட்கள் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
புதன் துலாம் ராசிக்குள் செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உருளைக்கிழங்கு முந்திரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - செம சைடிஷா இருக்கும் -
இதுல உங்க கையில் உள்ள இதய ரேகை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. நீங்க காதலில் எப்படி-ன்னு சொல்றோம்.. -
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும்
வெறும் காபி பொடியை மட்டும் வெச்சு எப்படி தீராத தலைவலியையும் சரி பண்ணலாம்? ட்ரை பண்ணுங்க
தலைவலிக்கு மருந்துகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலும் அடிக்கடி தலைவலி ஏற்படுவதுண்டு. அதை வீட்டு வைத்தியங்களின் மூலம் சரிசெய்தால் தான் நிரந்தரப் பலனை அடைய முடியும்.
அதிகமான வேலைப்பளு, டென்ஷன், தீராத மன அழுத்தம், தலைக்குக் குளித்துவிட்டு சரியாகத் துவட்டாமல் அப்படியே ஈரத்தோடு போவது, அதனால் தலையில் நீர் கோர்ப்பது போன்ற காரணங்களால் தான் பெரும்பாலும் தலைவலி உண்டாகின்றது. இதுபோன்ற பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால் அது நாளடைவில் அடிக்கடி தலைவலி உண்டாக்கும். மைக்ரேன் ஒன்னும் ஒற்றை் தலைவலியாகக் கூட மாறும்.

என்ன செய்யலாம்?
பொதுவாக தலைவலி என்றாலே எல்லோரும் செய்வது சூடாக ஒரு காபி குடித்துவிட்டு நன்கு ஓய்வு எடுப்பது தான். அதையும் தாண்டி தலைவலி ஏற்படுகிற போது வலி நிவாரணியையோ மாத்திரைகளையோ நாடுவோம்.
ஆனால் அவை தற்காலிகத் தீர்வைத் தான் கொடுக்குமே ஒழிய நிரந்தரமாகப் போகாது. ஆனால் இதுவே நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையில் முன்னோர்கள் சொன்னபடி வீட்டில் உள்ள பொருள்களைப் பயன்படுத்தினால் நிரந்தரமான தீர்வு காணலாம். அப்படி தலைவலிக்கு என்னென்ன தீர்வு நம் வீட்டு அடுப்பங்கரையிலே இருக்கிறது என்று பார்க்கலாம்.
தலைவலிக்கு மருந்து எடுத்துக் கொள்வதென்றால், அலோபதியை விட நம்முடைய முன்னோர்கள் இயற்கையாகக் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி தலைவலியை குணப்படுத்தியிருக்கின்றனர்.

முள்ளங்கி
முள்ளங்கி நீர்ச்சத்து மிகுந்த பொட்டாசியம் நிறைந்த காய்கறிகளில் ஒன்று. ஒரு முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து அந்த ஜூஸைத் தொடர்ந்து குடித்து வாருங்கள். தீராத தலைவலியும் தீர்ந்து போகும்.

காபி தூள்
ஒரு லிட்டர் அளவுக்கு நன்கு தண்ணீரை கொதிக்க வையுங்கள். தண்ணீர் நன்கு கொதித்தவுடன் இறக்கி ஒரு மூடி போட்டு ஆவி வெளியே வராமல் மூடி வையுங்கள். அதற்கிடையில் காபி பொடி டப்பா, பெட்ஷீட் ஆகியவற்றைக் கொண்டு வந்து அருகில் வைத்துக் கொண்டு அமர்ந்து மெதுவாக அந்த மூடியைத் திறந்து மூன்று ஸ்பூன் காபி பொடியைப் போடுங்கள். பெட்ஷீட் போட்டு மூடி 20 நிமிடங்கள் வரையிலும் ஆவி பிடியுங்கள். வேறு எதுவும் அதற்குள் போட வேண்டிய தேவையே இல்லை. தலைவலி இருக்கிற இடம் தெரியாமல் பறந்து போய்விடும்.

வெற்றிலை
4 வெற்றிலையை எடுத்து நன்கு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கற்பூரத்தையும் சேர்த்து நன்கு குழைத்து நெற்றியில் பற்று போடலாம். கற்பூரம் சேர்ப்பதால் நெற்றியில் சிறிது நேரத்துக்கு சுறுசுறுவென்று லேசான எரிச்சலுடன் பிடிக்கும். சிறிது நேரம் கழித்து சரியாகிவிடும். இதை பற்றுப் போட போட தலைவலி குறைய ஆரம்பிக்கும்.

முருங்கை இலை
முருங்கை இலை அபார சத்துக்களையும் இருக்கிற காய்கறிகளிலேயே அதிக சத்துக்கள் கொண்டதாகவும் இருக்கிறது. அதில் தலைவலிக்கு தீர்வு இருக்காதா என்ன? நிச்சயம் இருக்கும். முருங்கை இலைகளைக் கொஞ்சம் கொழுந்து இலைகளாகப் பறித்துக் கொள்ளுங்கள். அதில் பக்கத்தில் யாரேனும் புதிதாக குழந்தை பிறந்தவர்கள் இருந்தால் கொஞ்சம் தாய்ப்பால் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். அதை இரண்டையும் சேர்த்துநன்கு விழுதாக அரைத்து நெற்றியில் பற்று போடுங்கள். தலைவலி, தலைசுற்றல் ஆகியவை நின்று போகும்.

இஞ்சி
இஞ்சி நம்முடைய வீட்டுக் கிச்சனில் இருக்கின்ற அருமருந்து என்பது நம் எல்லோருக்குமே தெரிந்தது தான். பொதுவாக ஜலதோஷம் பிடித்தால் தான் இஞ்சி நம்முடைய நினைவுக்கு வரும். ஆனுால் தலைவலிக்கும் இஞ்சி மிகச் சிறந்த தீர்வாக அமையும். ஆம். ஒரு சிறு துண்டு இஞ்சியை எடுத்து, நன்கு தட்டி அதிலிருந்து வெளிவரும் சாறினை வலியுள்ள இடத்தில் தேய்த்தால் தலைவலி குறைய ஆரம்பிக்கும்.

கடுகு
கடுகை இரண்டு ஸ்பூன் எடுத்து அதை வெறும் வாணலியில் போட்டு கருகி விடாமல் வறுத்து, அந்த கடுகைத் தூள் செய்து, அதே சம அளவு அரிசி மாவையும் எடுத்து இரண்டையும் வெந்நீரில் போட்டு களி போல கிளறி, அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும்.

மிளகும் தேங்காய் எண்ணெயும்
ஒரு ஸ்பூன் குருமிளகு எடுத்து அதில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து மை போல அரைத்துக் கொள்ளுங்கள். அந்த பேஸ்ட்டை எடுத்து நெற்றியில் பற்று போடுங்கள். தலைவலி அதிகமாக இருந்தால் இரவு முழுக்க வைத்திருந்து காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுங்கள்.

முட்டையின் மஞ்சள் கரு
ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலை எடுத்து அதில் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை போட்டு நன்கு கலக்கி மேலும் சிறிது நேரம் சூடுபடுத்துங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போது எடுத்துக் குடியுங்கள். தலைவலி தீர்ந்து போகும்.

எலுமிச்சை
நீங்கள் தினசரி குடிக்கும் டீ அல்லது காபியில் சிறிதளவு சில துளிகள் எலுமிச்சை பழச்சாறு கலந்து, குடித்து வாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக தலைவலி குறைந்து போய்விடும்.

கிராம்பு
இரண்டு ஸ்பூன் கிராம்பை எடுத்துக் கொண்டு அதில் சிறிதளவு கிராம்பை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அதை நெற்றியில் பற்று போட்டு வந்தால் தீராத தலைவலியும் கட்டுக்குள் வந்துவிடும்.



Click it and Unblock the Notifications
