Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
இந்த ஒரே ஒரு கருப்பு பொருளை மட்டும் வீட்டுல வச்சிருந்தா, சர்க்கரை நோயிக்கு முடிவு கட்டிடலாம்!
இப்போதெல்லாம் பிறந்த குழந்தை முதலே பல்வேறு நோய்கள் உருவாகின்றன. ஒவ்வொரு நோய்களும் அதிக வீரியம் நிறைந்தவையாக தான் உள்ளன. காலத்தின் மாற்றம் தான் இவை அனைத்திற்கும் மூல காரணம். நாம் நினைப்பதை விட தற்போது உள்ள நோய்களின் பாதிப்பு அதிகமாக உள்ளன.

இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் சர்க்கரை நோயை கூறலாம். மற்ற நோய்களை விட இதன் வீரியம் உண்மையிலே அதிக அளவில் இருக்கிறது. மேலும், இதனால் ஆண்டுக்கு பல கோடி பேர் பாதிக்கப்பட்டும், உயிரை பறிகொடுத்தும் வருகின்றனர்.
ஆனால், இந்த நோயை கட்டுப்படுத்தும் தன்மை நம் வீட்டில் உள்ள இந்த கருப்பு உணவு பொருளுக்கு உள்ளது என ஆய்வுகள் கண்டறிந்து உள்ளது. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும், இதனால் உண்டாகும் பயன்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பெயர் என்ன?
ஒவ்வொரு வீட்டின் சமையல் அறையிலும் பல்வேறு உணவு பொருட்கள் இருக்கும். ஆனால், அவற்றில் ஒரு சில மட்டுமே முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.
அப்படிப்பட்ட தன்மை நிறைந்தது தான் கருஞ்சீரகம். பலருக்கு இதன் மகிமை தெரிவதில்லை. இதை நம் முன்னோர்கள் மருத்துவதிற்காக பெரிதும் பயன்படுத்தி வந்தனர்.

தாதுக்களும், சத்துக்களும்
ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இந்த கருஞ்சீரகத்தில் உள்ளது. இதை நாம் சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியம், புரதசத்து, நார்சத்து, ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் போன்ற பல தாதுக்கள் கிடைக்கும்.
அத்துடன் இதனால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே, எந்த வித நோய்களாக இருந்தாலும் உங்களால் அதில் இருந்து தப்பிக்க இயலும்.

ஆராய்ச்சி
கருஞ்சீரகத்தை பற்றிய ஆய்வில் சில தகவல்கள் வெளிவந்தன. அதாவது, கருஞ்சீரகத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் மேலும் பல தாதுக்கள் சர்க்கரை நோயிக்கு மருந்தாக அமையும் என கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் டைப் 2 வகை சர்க்கரை நோயிற்கு சிறந்த மருந்தாக இது செயல்படுமாம்.

எவ்வாறு?
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீரான அளவில் வைத்து கொள்ள கருஞ்சீரகம் உதவும். சாப்பிட கூடிய உணவில் சிறிதளவு கருஞ்சீரகத்தை சேர்த்து கொண்டாலே இதன் பலன் அதிகரிக்கும். அத்துடன் இன்சுலின் உற்பத்தியையும் இது ஊக்குவிக்கும்.

கொலஸ்ட்ரால்
தற்போதைய நிலையில் ஒரு நோய் வந்து விட்டால் அதை பின் தொடர்ந்து மேலும் சில நோய்கள் வந்து விடுகின்றன. அதே போன்று சர்க்கரை நோய் வந்தால் அதன் காரணமாக இதய நோய்களும் வருவதுண்டு.
அவ்வாறு இருக்க கருஞ்சீரகத்தை கொண்டு உடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க இயலும். மேலும் டைப் 2 வகை சர்க்கரை நோயின் பாதிப்பும் குறைவாக இருக்கும்.

சிறந்தது எது?
நாம் வெறும் கருஞ்சீரகத்தை பயன்படுத்துவதை விட அதை எண்ணெய்யாக தயாரித்து பயன்படுத்தினால் சிறந்தது. இது சர்க்கரை வியாதி கொண்டோருக்கு அருமருந்தாக இருக்கும். அத்துடன் கொலஸ்ட்ராலின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளும்.

வீக்கங்கள்
சர்க்கரை நோய் ஏற்பட்டால் உடலில் வீக்கங்கள், வலிகள் காரணமே இல்லாமல் நமக்கு ஏற்படுவதுண்டு. இதை மிக சுலபமாக சரி செய்ய கருஞ்சீரக எண்ணெய் உள்ளது.
சாப்பிடும் உணவில் இந்த எண்ணெய்யை சிறிதளவு பயன்படுத்தி வந்தாலே வீக்கங்கள் மறைந்து போகும்.

பசியின்மை
உடலில் எல்லா இயக்கங்களையும் சீராக வைக்க கருஞ்சீரக எண்ணெய் உதவுகிறது. ஆகவே இதனால் பசியின்மை போன்ற தொல்லைகள் குறையும். மேலும், எதிர்ப்பு சக்தி திறனை உயர்த்தி நோய்களை கட்டுப்படுத்தும். ஏற்கனவே உடலில் சேர்ந்துள்ள நுண் கிருமிகளை அழிக்கவும் இந்த எண்ணெய் உதவும்.

இரத்த அழுத்தம்
கருஞ்சீரகத்தில் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இதனால் இரத்த அழுத்தம் சமமான அளவில் இருக்கும். கூடவே இதிலுள்ள இரும்புசத்து மற்றும் வைட்டமின் சி உடலின் வலிவை அதிகரிக்க பயன்படும்.
எனவே, சர்க்கரை நோயாளிகள் உங்களின் மருத்துவருடைய ஆலோசனையுடன் போதுமான அளவு இதனை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications