Latest Updates
-
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும்
உங்க காது நம நமனு அரிக்குதா? ஏன் தெரியுமா? என்ன செஞ்சா அரிப்பு நிக்கும்?
சில சமயங்களில் நம்முடைய காதுகளில் ஏற்படுகின்ற அரிப்பை வீட்டு வைத்தியம் மூலம் எப்படி சரிசெய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
காது மிகவும் சென்ஸ்டிவ் ஆன பகுதி. ஏனெனில் இது ஏராளமான நரம்புகளால் ஆனது. காதுகளின் உள்ளே இருக்கும் இந்த சிறிய நார்கள் நமக்கு பல நேரங்களில் அரிப்பு உணர்வை ஏற்படுத்துகிறது. இந்த அரிப்பு அப்படியே காது தொற்றாக மாறி விடும். பல பேர்கள் இப்படி அரிக்கும் போது சும்மா இருப்பதில்லை.

சாவி, பென்சில், பேப்பர், பின் என்று எதையாவது கொண்டு காதை குடைய ஆரம்பித்து விடுவார்கள். இதனால் காதின் உள்ளே பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வறண்ட காது சருமமும் அரிப்பு ஏற்பட காரணமாகிறது. எனவே இப்படி கண்டதையும் வைத்து காதை குடைவதை தவிர்த்து கீழ்க்கண்ட இயற்கை முறைகளை நாம் பின்பற்றலாம்.

கற்றாழை ஜெல்
காதுகளில் ஏற்படும் அரிப்பை போக்க கற்றாழை பெரிதும் பயன்படுகிறது. உங்கள் தலையை ஒரு பக்கமாக சரித்து கொண்டு 3-4 சொட்டுகள் கற்றாழை ஜெல் சாற்றை காதில் விடலாம். இது காதின் pH அளவை சமநிலைக்கு கொண்டு வருகிறது. இதனால் அரிப்புற, வறட்சி மற்றும் தொற்று குணமாகி விடும்.

இஞ்சி
இஞ்சியில் இயற்கையாகவே அழற்சி எதிர்ப்பு தன்மை உள்ளது. வெதுவெதுப்பான இஞ்சி ஜூஸை எண்ணெய்யுடன் சிறிது கலந்து காதின் ஓட்டை பகுதியில் தடவி விடுங்கள். காதுக்குள் நேரடியாக ஊற்ற வேண்டாம்.

எண்ணெய்
காதில் உள்ள அரிப்பை போக்க நிறைய எண்ணெய்கள் பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய், வெஜிடபிள் எண்ணெய், ஆலிவ் ஆயில், டீ ட்ரி ஆயில் போன்றவற்றை ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து லேசாக சூடாக்கி வெதுவெதுப்பாக காதில் ஊற்ற வேண்டும். வெளியே வரும் எண்ணெய்யை ஒரு பஞ்சை கொண்டு துடைத்து விடுங்கள்.

பூண்டு
பூண்டில் ஆன்டி பயாடிக் மற்றும் புண்ஆற்றும் பண்பு உள்ளது. நசுக்கிய பூண்டு துண்டுகளை ஆலிவ் ஆயில் அல்லது நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி வடிகட்டி கொள்ளவும். எண்ணெய்யை வெதபவெதுப்பாக காதில் இட வேண்டும். இதுவும் அரிப்பு நீக்க உதவுகிறது.
மேற்கண்ட எளிய முறைகள் உங்கள் காது அரிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கும்.



Click it and Unblock the Notifications