For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படி அங்கங்க கட்டி இருக்கா? அது என்ன கட்டினு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க... கவனமா இருங்க...

டெர்கம் நோய் (கொழுப்புத் திசு கட்டி) என்ற இந்த நோய் அடிடோசி டோலோரோசா என்றும் அழைக்கப்படுகிறது. கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும். லிப்போமாஸ் என்ற திசுக்களால் உருவாக்கக்கூடிய இந்த

|

டெர்கம் நோய் (கொழுப்புத் திசு கட்டி) என்ற இந்த நோய் அடிடோசி டோலோரோசா என்றும் அழைக்கப்படுகிறது. கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும். லிப்போமாஸ் என்ற திசுக்களால் உருவாக்கக்கூடிய இந்த கட்டிகள் நகரக் கூடியதாகவும், மென்மையாகவும் இருக்கும். இந்த லிப்போமாஸ் (கொழுப்புத் திசு கட்டி) உடம்பில் டார்ஸோ, மேல் கைகள் அல்லது மேல் கால்கள் போன்ற பகுதிகளை பாதிக்கக் கூடியது.

இந்த கொழுப்பு திசுக் கட்டிகள் உடற்பருமன் 5-30 மடங்கு அதிகமானவர்களுக்கு ஏற்படக் கூடியது. இந்த திசுக்கட்டிகள் ஒரே அளவுடையதாகவும், இல்லை அளவில் வேறுபட்டும் காணப்படும். இந்த அரிதான நோயை 1892 ஆம் ஆண்டில் ஜெபர்சன் மருத்துவக் கல்லூரியில் பிரான்சிஸ் சேவியர் டெக்ராம் என்பவர் முதலில் அறிமுகப்படுத்தினார். இந்த கட்டிகள் வலி நிறைந்ததாகவும், ஒவ்வொருவருக்கும் மாறுபடுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அறிகுறிகள்

அறிகுறிகள்

சிறிய வலியுள்ள கட்டிகள் வளர்ந்து கொண்டே வரும்

உடல் பருமன்

மூச்சு விட சிரமம்

சோர்வு

பலவீனம்

காலையில் எழுந்ததும் கீழே விழுதல் (உடம்பு விறைப்பு இருக்காது)

மன அழுத்தம்

யோசித்தல், கவனம் மற்றும் நினைவாற்றல் பாதிப்பு

சிராய்ப்பு

மற்ற பாகங்களிலும் வீக்கம் ஏற்படுதல்

எரிச்சல்

தூங்குவதில் சிரமம்

அதிகமான இதயத் துடிப்பு

தலைவலி

மனநிலை பாதிப்புகளான மன அழுத்தம், எபிலப்ஸி, டிமென்ஷியா, மனக் குழப்பம்.

MOST READ: நீங்களே நினைச்சு பார்க்காத அளவு டக்குனு வெயிட் குறையணுமா? அதுவும் ஆரோக்கியமா? இதோ

காரணங்கள்

காரணங்கள்

தற்போதைய ஆராய்ச்சி படி இதன் ஆரம்ப நிலையை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. இந்த டெர்கம் நோய் ஒரு ஆட்டோ இம்பினியூ டிஸ்ஆர்டர் ஆகும். உங்கள் நோயெதிர்ப்பு மண்டலமே ஆரோக்கியமான திசுக்களை பாதிக்க கூடியது. மேலும் நமது மெட்டா பாலிக் பாதிப்பு கொழுப்பு திசுக்களை உடைப்பதில் பிரச்சினையை உண்டு பண்ணுகிறது.

கண்டறியும் முறை

கண்டறியும் முறை

இதை கண்டறிய எந்தவொரு சிறப்பான முறையும் இல்லை. ஃபைப்ரோமியால்ஜியா அல்லது லிப்பிடெமா பரிசோதனைகள் உதவுகின்றன. இந்த பரிசோதனையில் மருத்துவர்கள் ஒரு கொழுப்பு திசுக் கட்டியிலிருந்து கொஞ்சம் திசுக்களை எடுத்து மைக்ரோஸ்கோப் வழியாக ஆய்வு செய்கின்றனர். மேலும் சிடி ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்படுகிறது.

இது கொழுப்புத் திசு கட்டி தான் என்று உறுதியான பிறகு மருத்துவர்கள் அதன் கட்டியின் அளவு, இருக்கும் இடத்தை பொருத்து வகைப்படுத்துகின்றனர்.

1. நோடுலர் லிப்போமாஸ் (கைகள், அடிவயிற்று பகுதி, தொடை, பிட்டம் பகுதிகளில் பெரிய கட்டிகள் இருப்பது)

2.டிவியூஸ் (சிறிய லிப்போமாஸ் பரந்து காணப்படுதல்) மற்றும் பெரிய மற்றும் சிறிய கட்டிகள் கலந்து காணப்படுதல்.

சிகிச்சைகள்

சிகிச்சைகள்

இதற்கு முழுவதுமாக சிகிச்சை அளிக்க முடியாது. ஆனால் வலியையும் வீரியத்தையும் குறைக்கலாம்.

MOST READ: இந்த மூனு ராசிக்காரர்கள் எப்பவும் ஓவராதான் பண்ணுவாங்க... பொறுமையே இருக்காது...

மருந்துகள்

மருந்துகள்

வலிகள் மற்றும் வீக்கத்திற்கு வலி நிவாரணிகள் கொடுக்கப்படுகின்றன. தண்ணீர்ச்சத்து மாத்திரைகள் அல்லது டையூரிக் மாத்திரைகள் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. கார்டிகோஸ்டீராய்டுகள், லிடோகைன் போன்ற மாத்திரைகள் வலியை குறைக்க உதவுகிறது.

அறுவை சிகிச்சைகள்

அறுவை சிகிச்சைகள்

சில நேரங்களில் மருத்துவர்கள் இந்த கட்டிகளை அறுவை சிகிச்சை மூலம் நீக்க முற்படுகின்றனர். இது வலியை நீண்ட நாட்களுக்கு நீக்கப் பயன்படுகிறது. ஆனால் சொல்ல முடியாது இந்த கட்டிகள் மறுபடியும் வளர வாய்ப்புள்ளது.

லிப்போஷக்ஷன்

லிப்போஷக்ஷன்

இந்த முறையில் உடம்பில் தேங்கியுள்ள கொழுப்புகளை எடுக்கின்றனர். இதுவு‌ம் வலியை குறைக்க உதவும்.

MOST READ: பென்சாயில் பெராக்சைடுனா என்ன? ஏன் இத கட்டாயம் வீட்ல வாங்கி வைக்கணும்?

இதர தெரபிகள்

இதர தெரபிகள்

அக்குபஞ்சர், ஹைப்போனிஸ் மற்றும் பயோபீடுபேக் போன்றவைகளும் நல்ல பலனை தரும்.

மற்ற சிகிச்சைகள் நன்றாக ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொண்டு மனநிலையை சீராக வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Dercum's Disease: Symptoms, Causes And Treatment

Dercum's disease also called as adiposis dolorosa or Anders disease is an extremely rare condition which causes the growth of painful fatty tissues called lipomas We discuss about detail of this disease. Dercum's disease also called as adiposis dolorosa or Anders disease is an extremely rare condition which causes the growth of painful fatty tissues called lipomas
Story first published: Thursday, May 9, 2019, 14:42 [IST]
Desktop Bottom Promotion