Just In
- 1 hr ago
தொண்டை புண் அல்லது வலி இருக்கும்போது நீங்க இந்த உணவு & பானங்கள தொடவே கூடாதாம்...!
- 2 hrs ago
பெருங்குடல் புற்றுநோய் எதனால் வருகிறது? அதன் எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?
- 2 hrs ago
மோசமாக காதலிக்கும் 6 ராசிகள்... இவங்க காதலை கெடுக்க யாரும் வேணாம் இவங்களே கெடுத்துக்குவாங்க...!
- 4 hrs ago
நாம் அதிகம் விரும்பி சாப்பிடும் இந்த உணவுகளில் எவ்வளவு கலோரி இருக்குன்னு தெரியுமா?
Don't Miss
- News
"அவர்களுக்கு" சென்ற அழைப்பு.. என்ன காங். இப்படி ஒரு முடிவுக்கு வந்துடுச்சு.. திமுக இனி என்ன பண்ணுமோ?
- Education
ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.30 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை!!
- Movies
இந்த மாதம் அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கு ட்ரீட்...யுவன் வெளியிட்ட கலக்கல் வலிமை அப்டேட்
- Sports
அது சாதாரண ஒன்றல்ல..உலகக்கோப்பைக்கு சமமானது.டெஸ்ட் சாம்பியன்ஷிப் குறித்து நம்பிக்கை அளிக்கும் ரஹானே
- Automobiles
வெறும் 4 நாட்களில் 5 ஆயிரம் முன்பதிவுகள்!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு விற்று தீர்ந்தது!
- Finance
தங்கம் விலை தொடர் சரிவு.. நடுத்தர மக்கள் தங்கம் வாங்க சரியான நேரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பெண்களோட செக்ஸ் ஆர்வம் குறையறதுக்கும் மாதவலிக்கு காரணமா? செக்ஸ் டாக்டர் என்ன சொல்றார் தெரியுமா?
மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்வில் ஒரு அங்கம் என்றே கூறலாம். ஒவ்வொரு மாதமும் இந்த மாதவிலக்கு ஏற்படுகிறது. இதற்கு தகுந்த மாதிரி பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன.
பெண்ணின் உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிக்கின்றன. மாதவிடாய் ஏற்படும் காலங்களில் பெண்ணின் உடலிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.

கபம், பித்தம், வாதம்
மாதவிடாய் ஏற்படும் காலங்களில் பெண்ணின் உடலிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் உண்டாகும். ஆயுர்வேத முறைப்படி இதை மூன்று தோஷங்களை கொண்டு செல்கிறார்கள்.
கபம் - ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அதாவது குழந்தை பருவத்தில் செயல்படுகிறது
பித்தம் - பெரியவர்களாக ஆரம்பித்து 50 வயது வரை நீடிக்கிறது.
வாதம் - பெண்ணுக்கு மாதவிடாய் தொடங்கும் காலகட்டம்

தோஷ வாதம்
நம் உடலில் உள்ள வாத தோஷத்தில் ஏற்படும் மாற்றங்கள் மாதவிடாய் பிரச்சினைகளை உண்டு பண்ணி விடும். அதனால் தான் மாதவிடாய் காலங்களில் டென்ஷன், கோபம், எரிச்சல் போன்ற மனதளவில் கஷ்டங்கள் ஏற்படுகின்றன. சில பேருக்கு வாதத்தில் ஏற்படும் மாற்றத்தால் காய்ச்சல், குளிர், அதிக சூடு கூட தோன்றுமாம். ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சினைகளைக் கூட பெண்கள் சந்திக்கின்றனர் என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

வாத அறிகுறிகள்
வாதம் உடைய பெண்கள் கீழ்கண்ட அறிகுறிகளை சந்திக்கின்றனர்
பயம் மற்றும் அச்சங்கள்
பதட்டம்
மன அழுத்தம்
ஒழுங்கற்ற உணர்வு மனப்பான்மை
இன்ஸோமினியா
கடுமையான வெப்பம்
குளிராக உணர்தல்
படபடக்கும் இதயத் துடிப்பு
வறண்ட யோனி பகுதி
உலர்ந்த சருமம்
மலச்சிக்கல்
சருமத்தின் நீட்சித்தன்மை இழத்தல்
மூட்டுகளில் வலி
ஆஸ்டியோபோரோசிஸ்
தாம்பத்ய ஈடுபாடின்மை
தலைவலி
இந்த 4 ராசிக்காரங்க மட்டும் ஏன் பொண்ணுங்களோட ஒத்துப்போகவே மாட்றாங்க...

பித்த அறிகுறிகள்
பித்த தோஷம் உள்ளவர்கள் வியர்த்தல் மற்றும் அதிக சூட்ை உணர்வார்கள். சில சமயங்களில் ரெம்ப நேரம் வியர்க்க ஆரம்பித்து விடும். ஏன் இரவு நேரத்தில் கூட அதிகமாக வியர்க்கும். உடம்பு சூடாக இருக்கும்.
பித்தம் இருந்தால்
வியர்வையுடன் ஹார்ட் அட்டாக்
உடம்பினுள் அதிக சூட்டை உணர்தல்
இரவில் வியர்த்தல்
கோபம் வருதல்
திடீரென வயிற்று போக்கு
மூல நோய்
சந்தேகம்
அதிக இரத்த போக்குடன் மாதவிடாய்
சரும வடுக்கள்
பருக்கள்
ஹெர்பஸ்
சூரிய ஒளியை தாங்க முடியாது
உயர் இரத்த அழுத்தம்
மன அழுத்தம், தலைவலி

கபம்
கபம் பிரச்சினை உள்ள பெண்கள் அதிகமாக எடை போட ஆரம்பிப்பார்கள். இதனால் தினமும் சோர்வாக இருப்பார்கள். உடம்பில் நீர்தேக்கம், எடிமா, கால்களில் வீக்கம், அதிகமாக வியர்த்தல் போன்றவை ஏற்படும். செரிமான பிரச்சினைகள், மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்படும். தனிமையை நாடுவார்கள்.

அறிகுறிகள்
எடை அதிகரிப்பு
சோம்பல், மனதில் அக்கறையின்மை, நிலையின்மை ஏற்படும்
நிலையான சோர்வு ஏற்படுதல்
உடம்பில் நீர்தேக்கம்
பூஞ்சை தொற்று
சீரணமின்மை பிரச்சினை
மன அழுத்தம், கவலை
மேற்கண்ட மாற்றங்களை நீங்கள் சந்திக்கும் போது உங்கள் தோஷங்களில் பிரச்சினை உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். இதற்கு உடனடியாக ஆயுர்வேத முறைப்படி சிகச்சை எடுக்க வேண்டும் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள்.
நீங்க பிறந்த கிழமையை சொல்லுங்க... உங்க வாழ்க்கையில நடந்த, நடக்கப்போற ரகசியத்தை நாங்க சொல்றோம்...

உணவுப் பழக்கம்
பித்தத்திற்கான உணவுகள்
வாதம் மற்றும் பித்தத்தை சமநிலையில் வைக்கும் படியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். பித்தம் தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் புளிப்பு, காரம் மற்றும் உப்பு உணவுகளை தவிர்க்க வேண்டும். வினிகர் சேர்க்கப்பட்ட உணவுகளும் வேண்டாம். உங்களுக்கு கசப்பு, இனிப்பு உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

வாதத்திற்கான உணவுகள்
இதுவே உங்களுக்கு வாத பிரச்சினை இருந்தால் வெதுவெதுப்பாக உணவை சாப்பிடுங்கள். நல்ல கொழுப்பு உணவுகளை சேர்த்துக் கொள்ளுங்கள். இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உணவுகள் உங்களுக்கு ஏற்றது. அதே நேரத்தில் சரியான அளவில் எடுத்துக் கொண்டால் உங்கள் தோஷங்கள் சமநிலையில் இருக்கும். வெதுவெதுப்பான நீரை பருகுதல், பச்சை காய்கறிகள் போன்றவை உங்கள் வாத பிரச்சினையை சமநிலை படுத்தும்.

தவிர்க்க வேண்டியவை
காஃபைன், ஆல்கஹால் மற்றும் நெய் போன்றவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மாதவிடாய் பிரச்சினை சரியாகி விடும்.
பாட்டாளி படத்துல மாதிரி மழை வர குலுக்கு சீட்டுமூலம் நிலாப்பெண் தேர்ந்தெடுக்கும் திண்டுக்கல் கிராமம்

வாழ்க்கை முறை
தொடர்ச்சியான உடற்பயிற்சி உங்கள் எலும்புகளின் உறுதிக்கும், உடல் எடை அதிகரிப்பையும் தடுக்கும். மன அழுத்தம், அனிஸ்சிட்டி இல்லாமல் இருக்கலாம். எலும்பு உறுதியாக இருக்கும் போது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகள் வராது. ஏரோபிக் போன்ற உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்திற்கும், ஆரோக்கியமான உடல் எடையை பேணவும் உதவுகிறது.

மூலிகைகள்
மூலிகைகள் உங்கள் ஹார்மோன் அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஒழுங்கற்ற ஹார்மோன் அளவை சரி செய்ய சத்ரவர்தி, விதார்தி மூலிகைகள் உதவுகிறது. இதிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நம் உடலில் ஹார்மோன் அளவை சமநிலையாக்கி மாதவிடாய் ஒழுங்காக வர உதவுகிறது.
மேலும் பிரம்மி மற்றும் ஷங்கபாஷ்பி நரம்பு மண்டலத்தை அமைதிபடுத்தி தேவையற்ற டென்ஷனை குறைக்கிறது.
இந்த மூலிகைகளை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை ஆயுர்வேத மருத்துவரிடம் சென்று அறிந்து கொள்ளலாம். அவர் உங்களுக்கு தேவையான மூலிகைகளின் அளவை பரிந்துரைப்பார்.

யோகா
பெண்களுக்கு வயதாக வயதாக அவர்களின் உடல் நிலையும் மனநிலையும் அமைதியாக இருக்காது. இந்த இரண்டையும் ஆரோக்கியமாக வைக்க யோகா உதவுகிறது.யோகா நமது ஹார்மோன் அளவை சீராக்ி மாதவிடாய் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது.
பசும்பாலை விட சத்து மிகுந்த அரிசி பால்... குடித்தால் கொலஸ்ட்ரால் வருமா? வீட்ல எப்படி தயாரிக்கலாம்?

சுக்ராசனம்
ஹார்மோனில் ஏற்படும் மாற்றத்தை சரி செய்ய இது சிறந்த யோகா.
செய்யும் முறை
படுக்கை விரிப்பில் கால்களை குறுக்கு நெடுக்காக போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடி 3 தடவை ஆழ்ந்து மூச்சு இழுத்து கொள்ளுங்கள். மனதை ஒருநிலைப்படுத்தி மூச்சை உள்ளே வெளியே என்று மெதுவாக இழுத்து விடுங்கள்.

குனிந்த ஆசனம்
இந்த யோகாசனம் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க பயன்படுகிறது. நாய் மாதிரி குனிந்து கொள்ளுங்கள். இந்த ஆசனம் தலைக்கும், இதயத்திற்கும் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது நமது அடிவயிற்று பகுதியை வலுமையாக்கவும், கர்ப்ப பை, இடுப்பு பகுதி போன்றவற்றிற்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் செய்கிறது. இதனால் மாதவிடாய் பிரச்சினை வருவதில்லை.

பிராணாயாமம்
இந்த ஆசனம் மன அழுத்தம், அனிஸ்சிட்டி போன்றவற்றை போக்கி மனதிற்கு அமைதியை தரவல்லது. பிராணம் என்றால் மூச்சுப் பயிற்சி. இது உடம்பிற்கு அதிக ஆற்றலையும் தருகிறது.
செய்யும் முறை
முதலில் செளகரியமாக நேராக நிமிர்ந்து அமர்ந்து கொள்ளுங்கள்.
இப்பொழுது வாய் மற்றும் மூக்கை திறந்து காற்றை உள்ளே சுவாசியுங்கள்
இதை திரும்பத் திரும்ப செய்யுங்கள்
இந்த மாதிரி இரவு நேரமும் செய்து வந்தால் உடம்பு சூடு தணிந்து விடும்.

தியானம்
மாதவிடாய் சுழற்சியின் போது பெண்களுக்கு அதிக மன அழுத்தம் இருக்கும். இதை போக்க ஒரு எளிய வழி தியானம். உங்கள் மன நிலையை அமைதிப்படுத்த நீங்கள் தியானத்தில் ஈடுபடலாம். எரிச்சல், மன அழுத்தம், மூட் ஸ்விங் போன்றவற்றை இது மூலம் போக்கிடலாம்.
எனவே ஒழுங்கற்ற மாதவிடாய் என்பது ஒரு நோய் அல்ல. அது ஒரு மாற்றம் மட்டுமே. அதற்கு முறையான ஆயுர்வேத சிகிச்சை உங்களுக்கு கை கொடுக்கிறது.
மனைவி கண்முன்னே தாய்க்கும் மாமியாருக்கும் செக்ஸ் டார்ச்சர் - மாமியார் என்ன செஞ்சார் தெரியுமா?