Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
டைபாய்டு எப்படியெல்லாம் பரவுதுனு இத பார்த்து தெரிஞ்சிக்கோங்க... ஜாக்கிரதையா இருங்க...
டைபாய்டு காய்ச்சல் உண்டாவதற்கான காரணம், அறிகுறிகள், சிகிச்சைகள் மற்றும் தடுக்கும் முறைகள் பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.
டைஃபஸ் என்பது ஒருவகையான டைபாய்ட்டை குடும்பத்தை சேர்ந்த காய்ச்சல் வகை. இது பெரும்பாலும் பூனையால் பரவுகிறது. அது வேறு எப்பயெல்லாம் பரவுகிறது? என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதைப் பார்க்கலாம். டைபாய்டு என்ற நோய் தாக்குதல் முந்தைய காலத்தில் பரவி வந்த நோயாகும். இது பேரழிவு நோய் களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்பானிய இராணுவம் கிரேனாடா முற்றுகையின் போது, 1489 ஆம் ஆண்டில் டைபஸ் நோய் பரவியது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஒரு பிரெஞ்சு நுண்ணுயிரியலாளரான சார்ல்ஸ் நிக்கோலஸ், நீர் பரப்புகளில் வாழும் கிருமியால் இந்த டைபாய்டு பாதிக்கப்பட்ட மக்களை கண்டறிந்தார்.

தற்போது இந்த டைபாய்டு உலகின் சில குறிப்பிட்ட பகுதிகளான கிழக்கு ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள சில பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த டைபாய்டு நோயை தடுப்பதற்கான தடுப்பூசிகள் என எதுவுமே இன்று வரை இல்லை. ஆனால் இதைப் பற்றிய விழிப்புணர்வு இந்த நோய் தாக்கத்தை கொஞ்சம் குறைத்துள்ளது.

டைபாய்டு என்றால் என்ன?
இந்த டைபாய்டு ரிக்வெட்ஸியா என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா எலிகளின் மீதுள்ள உண்ணி, பேன் மற்றும் பூச்சிகள் மூலம் பரவுகிறது. இதன் காய்ச்சல் நிறைய வகைகளில் வருகின்றனர். கொள்ளை டைஃபஸ் (Epidemic typhus), எலி டைஃபஸ் அல்லது என்டமிக் டைஃபஸ் (endemic typhus), ஸ்கிரப் டைஃபஸ், குயீன்ஸ்லாண்ட் டைஃபஸ் என்ற பல வகைகளில் ஏற்படுகிறது.

பரவும் விதம்
தொற்று நோய்களாக இந்த காய்ச்சல் பரவி வருகிறது. பூச்சிகள், பேன், எலிகளின் மீதுள்ள உண்ணி கள், விலங்குகளின் மீதுள்ள உண்ணி கள் மூலம் இந்த பாக்டீரியா பரவுகிறது. இந்த பூச்சிகள் கடிக்கும் போது அந்த இடத்தில் அதாவது நமது உடலில் ஒருவித அடையாளத்தை விட்டுச் செல்கிறது. இந்த பூச்சிக் கடியால் உள்ளே நுழையும் பாக்டீரியா நமது சருமத்தில் ஊடுருவி அப்படியே நமது இரத்த ஓட்டத்தில் பரவ ஆரம்பித்து விடுகிறது.

டைபாய்டு பரவுவதை எப்படி தடுப்பது?
பூச்சிக்கடி மூலம் பரவும் இந்த டைபாய்டு காய்ச்சலை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம் இது மற்றவருக்கு பரவுவதை தடுக்கலாம். பூனைகள், எலிகள், அணில்களில் உள்ள பாதிக்கப்பட்ட ஒட்டுண்ணிகள் இவைகள் தான் இந்த பாக்டீரியா பரவ முக்கிய காரணமாகிறது. இப்பொழுது பாதிக்கப்பட்ட மனிதனின் இரத்தத்தை கொசுக்கள், பூச்சிகள் உறிஞ்சி மற்றவருக்கு பரப்பி விடுகிறது. பிராணிகளின் படுக்கை விரிப்புகளில் தங்கியிருக்கும் இந்த பாக்டீரியா அவற்றை தொடும் போது எளிதாக பரவுகிறது.
கணுக்காலிகள் வழியாக பரவும் இந்த நோய் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த எலிகள் அல்லது பூனைகளின் மீதுள்ள ஒட்டுண்ணிகள் கடிக்கும் இடத்தில் எதாவது கீறல்கள் இருந்தால் அதன் வழியாக பாக்டீரியா அதன் இரத்த ஓட்டத்தில் கலந்து விடுகிறது. இந்த டைபாய்டு நோய் அதிகமாக பரவக் கூடிய இடங்கள் பயணத்தின் பொழுது, விடுதிகள், புதிர்கள் நிறைந்த இடங்கள், சுத்தமில்லாத கழிப்பறைகள் இந்த மாதிரியான இடங்களில் இருந்து பரவுகிறது.

டைஃபஸின் வகைகள்
இதில் மூன்று வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
கொள்ளை டைஃபஸ் (Epidemic typhus)
இது ரிக்கெட்சியே புரோவாசகீ (Rickettsia prowazekii) என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இதில் மனிதப் பேன் கடத்தியாக செயல்படுகிறது. நமது தோலில் உள்ள நுண்சிராய்ப்புகள் மூலம் இந்த ஒட்டுண்ணிகள் நம்மளை கடிக்கும் போது இந்த பாக்டீரியா நமது இரத்தத்தில் கலந்து விடுகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இடங்கள், பேன் தொல்லை உள்ள இடங்களில் அதிகம் பரவுகிறது.
எலி டைஃபஸ் அல்லது என்டமிக் டைஃபஸ் (endemic typhus)
இது ரிக்கெட்சியே டைஃபி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது எலிகள் அல்லது பூனைகளின் மீதுள்ள உண்ணிகளால் ஏற்படுகிறது இந்த வகை டைபாய்டு பொதுவாக உலகம் முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாக வெப்ப மண்டல் மற்றும் மித வெப்ப மண்டல பகுதிகளில் காணப்படுகிறது. எலிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் இதில் பாதிப்படைகின்றனர்.
ஸ்கிரப் டைஃபஸ்
இது ஓரியன்சியா சுட்சுகாமுஷி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. இது டிராம்பிகுலலிட் பூச்சிகள் மூலம் பரவுகிறது. இது பொதுவாக ஆஸ்திரேலியா, ஆசியா, பப்புவா நியூ கினியா மற்றும் பசிபிக் தீவுகளில் காணப்படுகிறது. இந்த பூச்சிகளில் உள்ள பாக்டீரியா நமது தோலில் உள்ள சிறிய காயங்கள், சிராய்ப்புகள் மூலம் இரத்தத்தில் கலந்து இந்த வகை டைபாய்டு ஏற்படுத்துகிறது.

அறிகுறிகள்
மூன்று டைபாய்டு நோய்க்கும் காரணமான அறிகுறிகள்
காய்ச்சல்
குளிர்
சரும வடுக்கள்
வறண்ட இருமல்
மூட்டுகள் மற்றும் தசைகளில் வலி
முதுகுவலி
அடிவயிற்றில் வலி
கடுமையான காய்ச்சல் (150 டிகிரி - 1 06 டிகிரி F)
வறண்ட இருமல்
வாந்தி, குமட்டல்
தசைகள், மூட்டுகளில் வலி
தீவிர தலைவலி
சிவந்த சரும வடுக்கள் உடல் முழுவதும் தோன்றுதல்

ஸ்கிரப் டைபாய்டு அறிகுறிகள்
பூச்சி கடித்த முதல் 10 நாட்களில் அறிகுறிகள் தென்பட ஆரம்பித்து விடும். மற்ற இரண்டு வகைகளை காட்டிலும் இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தும். இரத்தக் கசிவு, உறுப்புகள் செயலிழப்பு போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சரும வடுக்கள்
நிணநீர் முடிச்சுகள் பெரிதாகுதல்
மனக்குழப்பம், சில சமயங்களில் கோமா கூட ஏற்படுதல்
தசைகள் மற்றும் உடம்பு வலி
காய்ச்சல் மற்றும் குளிர்
தீவிர கடுமையான தலைவலி
கடிபட்ட இடம் கருத்து போகுதல்

கண்டறிதல்
இந்த டைபாய்டு தொற்றை கண்டறிவது சற்று சிரமமானது. இதன் அறிகுறிகள் டெங்கு, மலேரியா போன்று இருப்பதால் மருத்துவர்கள் இதைக் கண்டறிய சற்று சிரமபப்படுகின்றனர். உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகளைக் கொண்டு மருத்துவர் இதைக் கண்டறிவார். இது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கவும் மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

பரிசோதனைகள்
நோய்த்தடுப்பு ஊசி மூலம் பரிசோதனை செய்தல். உங்கள் இரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் கொண்டு பாக்டீரியா தொற்று இருப்பது கண்டறியப்படுகிறது.
வெஸ்டர்ன் ப்ளாட் பரிசோதனை மூலம் டைபாய்டு நோய் தாக்கத்தை ஆராய்தல்
ஸ்கின் பயோப்ஸி மூலம் சரும மாதிரிகள் எடுக்கப்பட்டு எங்கே சரும வடுக்கள் ஏற்பட்டுள்ளது, பரவியுள்ளது என்பதை கண்டறிதல், இரத்த பரிசோதனை மூலம் இரத்தத்தில் உள்ள பாக்டீரியாவை கண்டறிதல்.

சிகிச்சைகள்
டைபாய்டை குணப்படுத்த சிறப்பான மருந்துகள் எதுவும் இன்றளவும் இல்லை. ஆன்டிபாயாடிக் மருந்துகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.
டாக்ஸிளைன்
இது ஸ்க்ரப் டைபாய்டுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது எந்த வயதானவர்களுக்கும் மருந்தாக கொடுக்கலாம். சீக்கிரமாக குணப்படுத்த இது சிறந்த மருந்தாகும்.
குளோரோம்பெனிகால்
இந்த மருந்து கருவுற்ற பெண்களுக்கும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கும் பரிந்துரைப்பதில்லை.இது கொள்ளை டைபாய்டுக்கு சிறந்தது.
சிப்ரோபிளாக்சசின்
டாக்ஸிளைன் ஆன்டி பயாடிக்ஸை பெற முடியாதவர்களுக்கு இது பரிந்துரைக்கப்படுகிறது.

எப்படி தடுப்பது?
டைபாய்டை தடுக்க பெரிய தடுப்பு முறைகள் என எதுவும் இல்லை. இருப்பினும் இரண்டாம் உலகப் போரின் போது இதை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடப்பட்டது. ஆனால் முழுமையாக இந்த பாக்டீரியாவை அழிக்க எந்த தடுப்பூசிகளும் இல்லை.
எளிதான தடுப்பு முறை என்றால் நோய் பரப்பும் பேன், பூச்சிகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
தனிமனித சுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். அதிக மக்கள் தொகை இடங்கள் மற்றும் சுத்தமில்லாத இடங்களுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்கலாம். பூச்சி விரட்டி மருந்துகளை பயன்படுத்தலாம்
அவசர நேரங்களில் கீமோப்ரோபைலஸிஸ், டாக்ஸிளைன் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம்.
பூச்சி விரட்டி மருந்துகளை குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது கவனம் தேவை
பயணத்தின் போது நெரிசலான பகுதிகளில் பாதுகாப்பு ஆடையை அணிந்து கொள்ளலாம்.
பெர்மெத்ரின் க்ரீம், பூச்சிகள் கடிக்காத காலணிகள் போன்றவற்றை அணிந்து செல்லலாம்.

இறப்பின் விகிதம்
20 ஆம் நூற்றாண்டில் கொள்ளை டைஃபஸால் நிறைய மக்கள் பாதிப்படைந்ததனர். சுத்தம் இல்லாமல் இருத்தல் இறப்பின் விகிதத்தை அதிகப்படுத்தியது.
எலி டைபாய்டு அல்லது என்டமிக் டைபாய்டு (endemic typhus) ஆல் பாதிக்கப்பட்ட இறப்பின் விகிதம் குறைவு தான்.
நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் போதிய ஊட்டச்சத்து இல்லாத நிறைய மக்கள் கொள்ளை டைபாய்டால் இறந்தனர். இதன் இறப்பு விகிதம் 10-60%, ஸ்க்ரப் டைபாய்டு 30% ம் பதிவாகியது. வெறும் 4% இறப்பு மட்டுமே எண்டமிக் டைபாய்டால் ஏற்பட்டது என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications











