Latest Updates
-
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..!
ஊளைச்சதையை குறைக்கணும்னு நெனச்சீங்கன்னா மல்லிகைப்பூ டீ குடிங்க... ரிசல்ட்ட சூப்பர்...
மல்லிகை என்பது நம்முடைய மனதை மணக்கக்கூடிய வாசனை கொண்டது. அழகுக்காக ஷாம்பு, க்ரீம்களில் பயன்படுத்தப்படுகிறது என்ற நமக்கு தெரியும். ஆனால் அதில் தயாரிக்கப்படும் டீயின் மூலம் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படு
மல்லிகைப்பூ என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் பெண்கள் மிகவும் விரும்பி தலையில் சூடிக் கொள்வார்கள். அதன் வெண்மையான நிறமும் காற்றில் பரவும் நறுமணமும் ஒரு நொடிப் பொழுதில் நம் மனதை அமைதிப்படுத்தி விடும்.

பூக்களில் மிகவும் அருமையான மணம் கொண்ட அழகான பூ மல்லிகைப் பூ தான். ஏன் நாம் உபயோகிக்கும் நிறைய பெர்மியூம்கள் மற்றும் நறுமண பொருட்கள் அனைத்திலும் இது பயன்படுகிறது. இந்த மல்லிகைப் பூவை வெறும் தலையில் மட்டுமல்ல நமது அழகுக்கும் ஆரோக்கியத்திற்கும் கூட பயன்படுத்தலாம்.

மல்லிகை
மல்லிகைப் பூவிலிருந்து நிறைய எண்ணெய்கள் பெறப்படுகின்றன. மல்லிகைப்பூ எஸன்ஷியல் எண்ணெய் மற்றும் எத்ரிக் ஆயில் போன்றவை கிடைக்கின்றன. இதைத் தவிர மல்லிகைப் பூவில் பென்சிலிக், மல்லிகை, இண்டோல், பென்சிலிக் அசிடேட், பென்சிலிக் ஆல்கஹால் மற்றும் லின்கல் போன்றவைகளும் அடங்கியுள்ளன.

ஆரோக்கிய நன்மைகள்
இரத்த சர்க்கரை
மல்லிகைப்பூ நீர் அல்லது தேநீர் டயாபெட்டீஸ் நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து டயாபெட்டீஸ் நோயை குணப்படுத்துகிறது.

குடலை சுத்தம் செய்தல்
மல்லிகைப்பூ டீ குடலை சுத்தப்படுத்த மிகச் சிறந்த மருந்தாகும். வயிறு சம்பந்தமான பிரச்சினைகளான சீரணமின்மை, மலச்சிக்கல், மலம் எரிச்சல், வயிறு வீக்கம் போன்றவற்றை சரியாக்குகிறது. தினமும் ஒரு கப் மல்லிகைப்பூ குடித்து வந்தால் வயிற்றில் உள்ள நச்சுக்கள் மலம் வழியாக வெளியேறி குடல் சுத்தம் அடைந்து விடும்.

எடை குறைக்க
எடையை குறைக்க நீங்கள் நீர் ஆதாரங்களை அதிகமாக எடுக்க நினைத்தால் அதற்கு மல்லிகைப்பூ டீ சிறந்தது. எனவே இதை உங்கள் டயட்டில் இதை தாராளமாக சேர்க்கலாம். கொழுப்புகளை எரித்து எடையை குறைக்க இது பெரிதும் உதவுகிறது. இதில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் இஜிசிஜி என்ற காஃபைன் போன்றவை எடை இழப்பிற்கு உதவுகிறது.

மன அழுத்தம்
மல்லிகைப்பூ டீ நமது மூளையில் உள்ள நரம்புகளை ரிலாக்ஸ் செய்து மன அழுத்தத்தை குறைக்கிறது. எனவே மன அமைதியை நிலை நிறுத்துகிறது.

மசாஜ் ஆயில்
கொஞ்சம் மல்லிகைப்பூ எண்ணெய்யை எடுத்து உங்கள் உடம்பு முழுவதும் பூசி மசாஜ் செய்ய வேண்டும். இதன் ஊடுருவும் தன்மை சருமத்தினுள் ஊடுருவி நல்ல பலனை கொடுக்கும். பாதங்களில் ஏற்படும் வறட்சி மற்றும் வெடிப்பை போக்கவும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.

பாடி பட்டர்
1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மல்லிகைப்பூ எண்ணெய் சேர்த்து பாடி பட்டராக பயன்படுத்தலாம். பாடி பட்டர் நிறைய சரும பிரச்சினைகளை போக்குகிறது. சரும வெடிப்பு, சுருக்கங்கள் போன்றவற்றை சரி செய்கிறது. இதை தினசரி சன்ஸ் க்ரின் லோசன் மாதிரி அல்லது நைட் க்ரிம் மாதிரி கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

சரும பராமரிப்பு
மல்லிகைப்பூ தண்ணியை உங்கள் சரும பராமரிப்பு ரெசிபிகளில் சேர்த்து பலனை பெறலாம். மேலும் பேக்கிங் சோடா உடன் கலந்து ஸ்க்ரப் மாதிரி பயன்படுத்தலாம். இது சருமத்தை சுத்தம் செய்ய பயன்படுகிறது.

ஷாம்பு மற்றும் கண்டிஷனர்
பேக்கிங் சோடா மற்றும் மல்லிகைப்பூ தண்ணீர் சேர்த்த கலவையை ஷாம்பு மாதிரி பயன்படுத்தலாம். மல்லிகைப்பூ தண்ணீரை கூந்தலில் ஊற்றி தேய்த்து குளிக்கும் போது நல்ல நறுமணத்தையும் ஈரப்பதத்தையும் கூந்தலுக்கு கொடுக்கிறது. இதே மாதிரி இதை கண்டிஷனராக கூட பயன்படுத்தி பலன் அடையலாம்.



Click it and Unblock the Notifications