ஐஸ்கட்டியை இப்படி 2 நிமிடம் தொடர்ந்து வைத்திருந்தால் என்ன நடக்கும்னு தெரியுமா?... ஆமாங்க அதே தான்...

Written By:
Subscribe to Boldsky

இன்றைய காலப் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்தால், பலரும் ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாதாரண தலைவலிக்கும் மைக்ரேனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. இது மிகவும் கொடுமையான வலியைத் தரக்கூடியது.

Quick Cure For Migraine Headache

இதிலிருந்து விடுபட வெறும் மருந்துகள் மட்டும் போதாது. நம்முடைய அன்றாடப் பழக்க வழக்கங்கள், உணவு முறைகள், வேலைகள் ஆகியவற்றிலும் போதுமான அளவு மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். ஆனால் நாமோ சாதாரண தலைவலிக்கு எடுத்துக் கொள்ளும் அதே மருந்தையே ஒற்றைத் தலைவலிக்கும் எடுத்துக் கொள்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 ஒற்றைத்தலைவலி

ஒற்றைத்தலைவலி

சாதாரண தலைவலிக்கும் ஒற்றைத் தலைவலிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒற்றைத் தலைவலி எந்தெந்த சமயங்களில் வருகிறது என்பதை முதலில் உற்று கவனியுங்கள். அதற்கான பின்னணியைக் கண்டுபிடித்து, அந்த கடினமான சூழலைத் தவிர்த்தாலே உங்களுக்குப் பாதி பிரச்னைகள் தீர்ந்துவிடும்.

ஆஸ்பிரின் மருந்துகள்

ஆஸ்பிரின் மருந்துகள்

சாதாரணமாக தலைவலி வரும்போது நாம் சில மருந்துகளைப் பயன்படுத்துவோம். அத்தகைய ஆஸ்பிரின் மருந்துகள் உங்களுடைய ஒற்றைத் தலைவலியை நிச்சயம் சரிசெய்யாது. அதனால் முதலில் தேவையில்லாமல் அவசியமில்லாத மருந்துகளை எடுத்துக் கொள்வதை முதலில் நிறுத்துங்கள். அதுவே உங்களுடைய பாதி பிரச்னைக்கு காரணமாக அமையும்.

இயற்கை வழிகள்

இயற்கை வழிகள்

எந்த உடல் பிரச்னையாக இருந்தாலும் முடிந்தவரை வரும்முன் காக்க முயற்சி செய்யுங்கள். அப்படியே வந்துவிட்டாலும் இயற்கை வழிகளில் எப்படி தீர்க்க முடியும் என்று பாருங்கள். அதில் முடியாவிட்டால் மாற்று மருத்துவத்தை நோக்கிச் செல்லலாம். அப்படி இந்த ஒற்றைத் தலைவலிக்கு என்ன மாதிரியான இயற்கை வழிகளில் தீர்வு காணமுடியும் என்று பார்க்கலாம்.

இஞ்சி

இஞ்சி

இஞ்சியைத் துருவி ஒரு கப் தண்ணீரில் பத்து நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அதை வடிகட்டி தேன் சேர்த்து டீயாக குடிக்கலாம். அது தலைவலி, ஜலதோஷம், தும்மல் ஆகியவற்றுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.

ஐஸ் ஒத்தடம்

ஐஸ் ஒத்தடம்

எப்போதெல்லாம் தலைவலி இருப்பது போல் உணர்கிறீர்களோ அப்போது ஐஸ் கட்டிகளை எடுத்து, கழுத்து மற்றும் நெற்றிப் பகுதிகளில் சில நிமிடங்கள் வரை வைத்து அழுத்திப் பிடித்திருங்கள். அதேபோல் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை எடுத்து ஒரு மெல்லிய காட்டன் துணியில் கட்டி நெற்றியின் மேல் வைத்திருங்கள். தலைவலி கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிப்பதை நீங்களே உணர்வீர்கள்.

லாவண்டர் ஆயில்

லாவண்டர் ஆயில்

5 கப் அளவுக்கு தண்ணீரை எடுத்து நன்கு கொதிக்க விடுங்கள். அதில் 6 துளிகள் அளவுக்கு லாவெண்டர் ஆயிலை விட்டு, தலையை கொஞ்சம் தூரமாக வைத்து, அதிலிருந்து வருகிற ஆவியை நன்கு உள்ளிழுத்து சுவாசியுங்கள். அதன்பின், சில துளி ஆயிலை மீண்டும் எடுத்து நெற்றியில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். தலைவலி பறந்துவிடும்.

பேசில் ஆயில்

பேசில் ஆயில்

பேசில் இலைகளையோ அல்லது ஆயிலையோ இதற்குப் பயன்படுத்தலாம். பேசில் ஆயில் இதமளிக்கக்கூடியது. தசைகளுக்கு நல்ல அதமளிக்கும். தலைவலியால் உண்டாகும் வலியைக் குறைக்கும்.

காபி

காபி

காபி ஒற்றைத் தலைவலியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது என கண்டறியப்பட்டுள்ளது. தலைவலி வந்துவிட்டால் மாத்திரை மருந்துகளைத் தேடுவதை நிறுத்திவிட்டு முதலில் ஒரு கப் ஸ்டிராங் காபி குடிங்க. பிறகு பாருங்கள். தலைவலி மாயமாய் மறைந்து போயிருக்கும்.

ஆளி விதை

ஆளி விதை

தொடர்ச்சியாக அடிக்கடி ஒற்றைத் தலைவலி ஏற்பட்டால் நோய்த்தொற்றாகக் கூட இருக்கலாம். அதேபோல், உங்கள் உடலில் ஒமேகா3 ஃபுட்டி ஆசிட் குறைவாக இருபு்பதைக்கூட அது உணர்த்தலாம். அதனால் உங்களுடைய சூப் ஆகியவற்றோடு ஆளி விதை அல்லது அதிலிருந்து எடுக்கப்பட்ட எண்ணெயை சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தோல்

வாழைப்பழத்தோல்

நம்மில் பெரும்பாலானோருக்கு தினசரி ஒரு வாழைப்பழமாவது சாப்பிடும் பழக்கம் இருக்கும். அப்படி நாம் சாப்பிட்டு விட்டு கீழை தூக்கி வீசுகிற வாழைப் பழத்தின் தோலில் கூட ஏராளமான மருத்துவப் பயன்கள் இருக்கின்றன என்பது நமக்குத் தெரிவதில்லை. ஆம். குறிப்பாக, வாழைப்பழத் தோல் அழகு மற்றும் ஆரோக்கிய விஷயத்தில் பெரிதும் பயன்படுகிறது. அதிலும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுபவராக இருந்தால், இனி வாழைப் பழத்தை சாப்பிட்டு விட்டு தோலை தூக்கி எறியாதீர்கள். அந்த தோலை நெற்றியின் மீது வைத்து படுத்திருங்கள். தூங்கும்போது வைப்பதென்றால் வாழைப்பழத் தோலின் உள்புறத்தை நெற்றிப் பகுதியில் இருக்குமாறு வைத்து, செல்லோ டேப் அல்லது மெல்லிய காட்டன் துணி கொண்டு கட்டிக் கொண்டு படுத்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து சில நாட்கள் செய்துவர உங்களுக்கு இருக்கும் ஒற்றைத் தலைவலி மாயமாக மறைந்து போவதை நீங்களே உணர்வீர்கள். அதன்பின் வாழைப்பழத்தை வேண்டுமானால் கீழே போடுவீர்களே தவிர, அதன் தோலை தூக்கி எறிய உங்களுக்கு மனசு வராது.

முட்டைகோஸ் ஒத்தடம்

முட்டைகோஸ் ஒத்தடம்

இது கேட்கவே உங்களுக்கு வேடிக்கையாக இருக்கும். ஆனால் மிக விரைவில் நல்ல பலனைத் தரும். சிலருக்கு ஒற்றைத் தலைவலியை ஆரம்ப காலத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அடிக்கடி தலைவலி ஏற்படுவது, வாந்தி, உடல் வலி ஆகிய பிரச்னைகளும் சேர்ந்து கொள்ளும். எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். எந்த வேலையையும் செய்ய உங்களுடைய மனமும் உடலும் ஒத்துழைக்ககாது. இதுபோன்ற பிரச்னைகளுக்கு முட்டைகோஸ் மிகச் சிறந்த தீர்வாக அமையும். முட்டைகோஸின் இதழ்கள் சிலவற்றை எடுத்து நன்கு நசுக்கியோ அல்லது லேசாக இடித்தோ ஒரு மெல்லிய காட்டன் துணியில் கட்டி, அதை வைத்து தலையில் ஒத்தடம் கொடுத்து வந்தால், ஒற்றைத் தலைவலி குணமடையும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Quick Cure For Migraine Headache

Today, the number of people suffering from migraines is increasing. When an intense headache accompanies throbbing pain, nausea and tension in the neck, it could be very tough to endure