Latest Updates
-
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா?
இரட்டை குழந்தைகளை காவு வாங்கிய டெங்கு... டெங்கு பரவாமல் எப்படி தப்பிக்கலாம்?
வைரஸால் பரவும் டெங்கு பற்றிய காரணிகள், அறிகுறிகள் மற்றும் விழிப்புணர்வு சம்பந்தப்பட்ட குறிப்புகள் இங்கே விளக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த கொடிய டெங்கு காய்ச்சலுக்கு நேற்று காலையில் சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மையத்தில் ஐந்து வயதுடைய இரட்டைக் குழந்தைகள் இருவரும் கொடூரமாக பலியாகியிருக்கிறார்.
இது மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் வியப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. இதிலிருந்து தப்பிப்பது எப்படி, எதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

காரணம்
இந்த இரட்டை குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி இறந்து போயினர். இந்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்ததற்கு என்ன காரணம் என்று கேட்டதற்கு, காய்ச்சல் வந்த ஐந்து நாட்களுக்குப் பிறகு, தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து வந்ததே மரணத்திற்குக் காரணம் என்று தலைமை மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

நோயின் போக்குகள்
டெங்கு நோய்கள் குறித்த போக்குகளை உணர்நு்து கொண்டால் மட்டுமே அதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். டெங்கு காய்ச்சல் மற்ற சாதாரண காய்ச்சலைப் போன்று அல்லாமல், இது மிகக் கொடிய வைரஸ் காய்ச்சல் என்பதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். அதனுடைய நோக்கு போக்குகளைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

அறிகுறிகள்
முதல் மூன்று நாட்கள் நன்றாக உடம்பு சுட ஆரம்பிக்கும். (102 -104) டிகிரி.
கண்களுக்குள் வலி ஏற்படும்.
உடம்பு முழுக்க அடித்து போட்டபடி வலி உண்டாகும்.
மூட்டுக்கு மூட்டு வலி ஏற்படும்.
இவை தான் டெங்கு வைரஸ் காய்ச்சலின் முதன்மையான அறிகுறிகள் ஆகும்.

அடுத்த மூன்று நாட்கள்
முதல் மூன்று நாட்கள் நெருப்பு போல் கொதித்தது அப்படியே மாறி, உடல் ஜில்லென்று குளிர்ந்து போய்விட்டது. ஆனால் அதற்குப் பிறகுதான் பிரச்சினையே ஆரம்பிக்க இருக்கிறது. ஆறாவது நாள் மீண்டும் காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமாக கூட ஆரம்பிக்கும். அதையடுத்து ரத்தக்கசிவு உண்டாக ஆரம்பித்துவிடும். அதனால் காய்ச்சலோடு சரிசெய்ய முயற்சி செய்வது தான் நல்லது.

காய்ச்சல்
முதல் மூன்று நாட்கள் 102 முதல் 104 டிகிரி வரையில் காய்ச்சல் இருக்கும். நான்காவது நாள் கொஞ்சம் குறையும். இரண்டு நாட்கள் குறைய ஆரம்பிக்கும் காய்ச்சல் திரென்று ஆறாம் நாள் 100 டிகிரி அளவுக்கு காய்ச்சல் ஏறப்போகிறது. அதனா்ல நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய இந்த நான்கு முதல் ஆறாம் நாள் வரையில் தான்.

நீர்ச்சத்து
முதல் மூன்று நாட்களில் உங்களுடைய உடலின் அதிக அளவிலாக உஷ்ணத்தால் உடம்பில் இருக்கின்ற நீர்ச்சத்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைய ஆரம்பிக்கும்.
நாக்கு வறண்டு போதல், சிறுநீர் சரியாகப் போகாமல் இருப்பது, போன்ற சிக்கல்கள் முதல் மூன்று நாட்கள் இருக்கச் செய்யும். ஏனென்றால் அடுத்த மூன்று நாட்கள் தான் காய்ச்சலை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும்.

ரத்தக் கசிவு
நான்காம் நாளுக்குப் பிறகு ரத்தக்கசிவு ஏற்படும் வாய்பபு உண்டு. பல் ஈறுகளில் இருந்து கூட இந்த ரத்தக்கசிவு ஏற்படும். மலத்தின் வழியும் வெளியேறும். மேலும் சிலருக்கு மலம் கருபு்பாக வெளியேறும்.

ரத்தப் பரிசோதனை
முதல் மூன்று நாட்களில் ரத்தப் பரிசோதனை எடுத்துபு் பார்த்தால் எந்தவித மாற்றத்தையும் அறிந்து கொள்ள முடியாது. இதுவே நான்காம் நாளுக்குப் பிறகு என்றால், பெரிய மாற்றங்க்ள உடலில் உண்டாகியிருப்பதை அறிந்து கொள்ள முடியும்.

எச்சரிக்கை
மூன்று நாள் காய்ச்சல் அடித்து நான்காம் குறைந்தால் அது டெங்கு அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது.

தண்ணீர்
உடலில் உள்ள நீர்சு்சத்தை முற்றிலு் காலி செய்வது தான் டெங்கு வைரஸின் முக்கிய நோக்கம். அதனா்ல அதற்கு இடம் தராமல், தண்ணீர், இளநீர், மோர்னு குடிச்சிக்கிட்டே இருக்கணும்.

ஈறுகளில் கசிவு
ஈறுகளில் ரத்தக்கசிவு வர ஆரம்பித்ததும் அலர்ட்டாகி உடனே மருத்துவமனையில் சேர்நு்தால் ஒழிய காப்பாற்ற வழியில்லை.



Click it and Unblock the Notifications












