Latest Updates
-
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது...
மூக்கில் ரத்தம் வந்தால் அதை எப்படி உடனடியாக நிறுத்தலாம்?
சில சமயங்களில் அதிக வெப்பத்தினால் மூக்கில் ரத்தம் வரும். அதை உடனே நிறுத்த சில வீட்டு வைத்தியங்கள் இங்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.
அடிக்கடி மூக்கில் இரத்தம் வருகிறதா? அடிக்கடி மூக்கில் இரத்தம் வருவது ஒரு சிலருக்கு சாதாரண பிரச்சினை என்றாலும் இது மிகவும் எரிச்சலடைய வைக்கும் தொந்தரவு தான். மூக்கிலிருந்து கொட கொடன்னு இரத்தம் கொட்டினால், எதிலிருக்கும் நபர் இரத்ததை பார்த்தவுடன் மிகவும் பயந்து விடுவதுண்டு. மருத்துவர்கள் அடிக்கடி மூக்கில் இரத்தம் வருவதை எபிஸ்டாக்சிஸ் என்கிறார்கள்.

இது எந்த சுழ்நிலை / இடத்திற்கு போகும் போது வருகிறது மற்றும் எத்தனை முறை வருகிறது என்பதை பொருத்தே பிரச்சனையின் தீவிரத்தை அறிய முடியும். இதில் இரண்டு வகை மூக்கு இரத்தப் போக்குகள் உள்ளன. அதாவது முன்புற மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் மற்றும் உள்புற மூக்ககிலிருந்து இரத்தம் வடிதல்.

ரத்தம் வடிதல்
முன்புறமூக்கில் உள்ள இரத்த நாளங்கள் வெடிப்பதால் முன்புற மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் ஏற்படுகிறது. அதே போல் உள்புற மூக்கிலிருந்து இரத்தம் வருவது தொண்டையில் இருக்கும் இரத்த நாளங்கள் வெடிப்பதால் ஏற்படுகிறது. உள்புற மூக்கிலிருந்து ஏற்படும் இரத்தப்போக்கு 20 நிமிடங்கள் வரை கூட தொடர்ந்து இருக்கலாம்.
முன்புற மூக்கு இரத்த வடிதல் மிகவும் சாதாரணமானது. இதை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்த முடியும்.இதை கட்டுபடுத்த, ஒருசில வீட்டு வைத்திய முறைகள் உள்ளன. ஆனால் உள்மூக்கு இரத்தப்போக்கிற்கு மருத்துவரை அணுகவும்.

காரணங்கள்
உள்மூக்கில் சிறிய இரத்த நாளங்கள் அதிகம் உள்ளன. இவை நாம் உயிர் வாழ்வதற்கான மூச்சு விடும் வேலையும், வாசம் நுகர்தலையும் செய்கிறது. இந்த இரத்த நாளங்கள் பாதிக்கப்படும் போது மூக்கிலிருந்து இரத்தம் வர தொடங்குகிறது. மூக்கு இரத்தப்போக்கு ஏற்படுத்தும் சில காரணங்கள் இங்கே.
• உலர்ந்த வெப்பமான காற்று
• உலர்ந்த, சூடான மற்றும் குறைந்த ஈரப்பதமான சூழலில் வாழ்தல்
• மேல் சுவாச தொற்றுகள்
• எப்போது பார்த்தாலும் மூக்கு நோண்டுதல் அல்லது மூக்கு சிந்துதல்
• மூக்கில் அல்லது முகத்தில் காயம்
• ஒவ்வாமை
• மூக்கில் ஸ்ப்ரேக்களை அதிகம் பயன்பாடுத்துதல்
• மூக்கில் கண்ட பொருட்களை விடுவது
• இரத்த இலக்கிகள்
• எரிச்சலூட்டும் இரசாயனங்கள்

வீட்டு வைத்தியம்
திடீரென்று மூக்கில் வடியும் இரத்ததை நிறுத்த இந்த எளிமையான வழிகள் நல்ல பலன் தரும். உடனடியாக நீங்கள் என்ன செய்ய வேண்டும் வாங்க பார்க்கலாம்.

ஐஸ்கட்டி வைத்தியம்
மூக்கில் இரத்தம் வரும் போது, ஒரு துணியில் ஐஸ்கட்டிகளை வைத்து கட்டி மூக்கின் மேல் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இதனால் மூக்கில் உள்ள இரத்த மென்மையான நாளங்கள் சுருங்கி இரத்தம் வடிவது நிற்கும்.

மூக்கை அழுத்தி பிடித்தல்
திடீரென்று மூக்கில் வடியும் இரத்ததை நிறுத்த இன்னொரு வழி இருக்கிறது. முதலில் நேராக உட்கார்ந்து கொள்ளவும். கழுத்தை சற்று முன்பக்கமாக நீட்டி கொள்ளவும். பிராணயாமம் செய்வது போல் கை கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரலால் 5 நிமிடம் முதல் 10 நிமிடம் வரை மூக்கை கொஞ்சம் அழுத்தி பிடிக்கவும். அப்போது வாயை திறந்து கொண்டு வாயால் சுவாசிக்கவும். இரத்தம் வடிவது கண்டிப்பாக நிற்கும். தேவையென்றால் இதையே திரும்ப செய்யவும்.

வைட்டமின் கே
கால்சியம், கீரை, கடுகு கீரைகள், ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்றவை வைட்டமின் கே நிறைந்த உணவுகள். இவை கொலாஜன் உருவாவதற்கு உதவுகின்றன. இது உங்கள் மூக்கின் ஈரத்தன்மையை பாதுகாக்க உதவுகிறது. இந்த வைட்டமின்கள் இரத்த நாளங்களை நல்ல நிலையில் வைக்க உதவுகிறது. ஒரு நீண்ட கால சிகிச்சையாக, வைட்டமின் கே-நிறைந்த உணவை உட்கொள்வது மிகவும் நல்லது. பச்சை இலை காய்கறிகள் இரத்தம் வேகமாக உறைதலுக்கு உதவுகிறது.

வைட்டமின் சி
நாளொன்றுக்கு போதுமான வைட்டமின் சி உணவுகளை உட்கொள்வது இரத்த நாளங்களை வலுவானதாக்க உதவுகிறது. அதனால் மூக்கில் இரத்தம் வடிவதை தடுக்க நிரந்தர தீர்வாகிறது.
குறிப்பு: வைட்டமின்கள் சி மற்றும் கே உடனடி நிவாரணம் கிடைக்காது என்றாலும், நிரந்தர தீர்வுகிடைக்கும்.

ஆப்பிள் வினிகர்
ஒரு சிறந்த வீட்டு வைத்தியம் இது. வினிகரில் உள்ள அமிலம் இரத்த நாளங்களைக் சுருங்க செய்வதில் உதவுகிறது, இதனால் இரத்தப்போக்கு ஏற்படுவது கட்டுப்படுத்தப்படும். வினிகரை பஞ்சில் நனைத்து, ஐந்து முதல் 10 நிமிடங்கள் பாதிக்கப்பட்ட மூக்கில் அழுத்தி வைக்கவும். அதிசயம் என்னெவென்றால், இந்த வைத்திய முறை முதல் தடவையிலேயே நன்றாக வேலை செய்யும்.

சலைன் நீர்
மூக்கு சவ்வுகளில் வறட்சி, குறிப்பாக குளிர்காலத்தில் இரத்தம் வர பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சலைன் நீர் மூக்கு சவ்வுகளை சுத்தப்படுத்தி ஈரப்பதத்தை பாதுகாக்க உதவுகிறது. ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீரை எடுத்து கொண்டு அதில் சலைன் நீர் சேர்த்து, நன்றாக கலக்கவும். இதை மூக்கில் ஒரு சில சொட்டுகளை விடவும். இது மூக்கின் உட்புற பகுதிகளில் ஈரப்பததை மேம்படுத்த உதவும்.

கெய்ன் மிளகு
கெய்ன் ஒரு செல் தூண்டுகோலாகவும் மற்றும் இரத்த ஓட்டத்தின் அழுத்தத்தை கட்டுப்படுத்து உதவுகிறது. அதாவது அதிக இரத்த அழுத்தம் உள்ள பகுதியில் இருந்து அழுத்தத்தை குறைக்கஉதவுகிறது. இரத்தப்போக்கு தொடங்கும் என தோன்றும் போதே, கெய்ன் தூள் ஒரு டீஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கவும். இது நல்ல பலன் அளிப்பதாக கூறப்படுகிறது.

நெட்டில் இலை
நெட்டில் இலை தொட்டால் எரிச்சலூட்டுகிற ஒரு மூலிகை மருந்து. இது இயல்பாகவே ஒவ்வாமை தொடர்பான இரத்த வடிதலை கட்டுப்படுத்த உதவும். ஹேமாஸ்டாஸ்டிக் என்றும் அரியப்படும். நெட்டில் இலையை தேயிலை போல் கொதிக்க வைக்கவும். பின்ன்ர குளிர விட்டு, துணியை அதில் நனைத்து மூக்கில் வைக்கவும். இரத்தம் வடிவது நிற்கும் வரை ஐந்து முதல் 10 நிமிடங்கள் வரை வைத்திருக்கவும்.

நிறைய நீர் அருந்தவும்
தினமும் போதுமான அளவு நீர் குடிக்கவும். குறைவாக நீர் குடித்தல் கூட மூக்கில் இரத்தவடிய காரணமாகி மூக்கின் சளி சவ்வுகளில் வறட்சி ஏற்படலாம்.

மாங்கொட்டை
"மூக்கில் இரத்த வடிதலுக்கு கொத்தமல்லி இலைகளில், மாம்பழ பூக்கள் மற்றும் ஒரு பழுத்த மாம்பழத்தின் மென்மையான மாங்கொட்டை சோறு ஆகியவற்றை தடவினால் நல்ல பலன் தரும் சொல்லியிருக்கிறார்.



Click it and Unblock the Notifications











