Latest Updates
-
Ganesh Chaturthi 2026: விநாயகர் சதுர்த்தி எப்போது வருகிறது? வீட்டிலேயே எப்படி விநாயகரை வழிபடுவது? -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்
தொப்புளை எப்பவாச்சும் உப்பு வெச்சு சுத்தம் பண்ணியிருக்கீங்களா?... இப்பவாச்சும் பண்ணுங்க...
மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் திறப்புகளில் ஒன்று தொப்புள். வளையம் போடுவதற்காக குத்துவது, சுத்தமாக பேணாமல் இருப்பது, அதிகமான வியர்வை என்று பல காரணங்களால் தொப்புளில் இன்பெக்ஷன் ஏற்படக்கூடும்.
'தொப்புள்' - கேட்டாலே ரொமண்ட்டிக் மூடை தூண்டுகிற வார்த்தை! 'பம்பரம் விடலாம்; ஆம்லேட் போடலாம்' என்பதையெல்லாம் தாண்டி உடல் ஆரோக்கிய ரீதியில் யோசித்துப் பார்க்க வேண்டிய பிரச்னை, தொப்புளில் ஏற்படும் தொற்று. மனித உடலில் இயற்கையாகவே இருக்கும் திறப்புகளில் ஒன்று தொப்புள்.

வளையம் போடுவதற்காக குத்துவது, சுத்தமாக பேணாமல் இருப்பது, அதிகமான வியர்வை என்று பல காரணங்களால் தொப்புளில் இன்பெக்ஷன் ஏற்படக்கூடும். பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் தொப்புள் தொற்றை உருவாக்குகின்றன. தொப்புளில் ஏற்படும் இன்பெக்ஷனை எளிதாக குணமாக்க சில வழிகள்:

வேப்பிலை
வேப்ப மரத்தின் இலை, நல்ல கிருமி நாசினியாக, நோய் தொற்றை தடுப்பதாக பயன்படுகிறது. பாக்டீரியாவாக இருக்கட்டும்; பூஞ்சையாக இருக்கட்டும், வேப்பிலை அவற்றை விரட்டி விடும். வேப்பிலையை நன்றாக பசை போன்று அரைத்து தொப்புளில் பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி வர, தொப்புள் தொற்று குணமாகி விடும். வேப்ப எண்ணெயையும் இதற்கு பயன்படுத்தலாம்.

உப்பு கரைசல்
உப்புக்கும் பாக்டீரியாவுக்கு எதிராக செயல்படும் தன்மை உண்டு. ஒரு டேபிள் ஸ்பூன் உப்பினை (கல் உப்பு, தூள் உப்பு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்) அரை கப் வெதுவெதுப்பான நீரில் கரைத்து, தொற்று பாதிப்புள்ள பகுதியில் தினமும் இரண்டு அல்லது மூன்று வேளை போட்டு வர நல்ல குணம் கிடைக்கும்.

வெள்ளை வினிகர்
வினிகரிலுள்ள அமிலத்தன்மை, பாதிக்கப்பட்ட தொப்புளிலிருந்து அசுத்தம் வெளியேறுவதை நிறுத்த உதவும். வினிகர் ஒரு பங்கு, வெள்ளை வினிகர் இரண்டு அல்லது மூன்று பங்கு கலந்து தொப்புளில் போட்டு 15 முதல் 20 நிமிட நேரம் கழித்து கழுவ வேண்டும். தினமும் மூன்று அல்லது நான்கு முறை இப்படி செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

கற்றாழை
சோற்றுக் கற்றாழை அநேக பலன்களை தரும். அதில் ஒன்று, உடலில் செப்டிக் ஏற்படாமல் பாதுகாக்கும் தன்மை. சோற்றுக் கற்றாழையின் சதைப்பகுதியினை நோய் தொற்றினால் பாதிக்கப்பட்ட தொப்புளில் சாதாரணமாக பூசி வர விரைவில் குணம் பெறலாம். தினமும் மூன்று அல்லது நான்கு முறை கற்றாழை ஜெல்லை பூச வேண்டும். இதை வீட்டிலேயே வளர்க்கலாம். ஆகவே, தினமும் புதிதாக எடுத்து பயன்படுத்த முடியும்.

மஞ்சள்
மஞ்சள், மகத்துவமான மருத்துவ குணம் நிறைந்தது. நோய் எதிர்க்கும் திறன், செப்டிக் ஆகி விடாமல் தடுக்கும் திறன் நிறைந்தது மஞ்சள். மஞ்சளை நீரில் குழைத்து தொப்புளில் தடவி வந்தால், இன்பெக் ஷன் குணமாகும். வெதுவெதுப்பான பாலில் மஞ்சளை கலந்து குடித்து வருவதும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும்.

டீ ட்ரீ எண்ணெய்
டீ ட்ரீ ஆயிலும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. நோய்க் கிருமிகளை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ஆகவே, தொப்புள் தொற்று போன்ற பாதிப்புகளை குணமாக்குவதற்கு டீ ட்ரீ ஆயிலை பயன்படுத்தலாம். ஆனால், தேங்காயெண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலோடு கலந்து பயன்படுத்த வேண்டும். தனியாக பயன்படுத்த வேண்டாம்.

சாமந்தி
'காலெண்டுலா' என்னும் சாமந்தி செடியும் நோய் தொற்றை தடுக்கும் குணம் கொண்டது. சாமந்தி பூவின் மூன்று அல்லது நான்கு இதழ்களை எடுத்து பிழிந்து, கிடைக்கும் சாற்றினை தொப்புளில் தொற்று ஏற்பட்டுள்ள பகுதியின் மேல் பூசுங்கள். அரை கரண்டி தேனை இந்தச் சாற்றுடன் சேர்த்து பூசி வர நல்ல பலன் கிடைக்கும்.
தொப்புள் முக்கியம்ங்க; தொற்று ஏற்படாம பார்த்துக்குங்க!



Click it and Unblock the Notifications
