For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக இதை செய்திடுங்கள்!

சருமத்தில் எங்காவது தீக்காயம் ஏற்ப்பட்டுவிட்டால் உடனடியாக அதற்கு சிகிச்சையளிப்பது அவசியம். வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு முதலுதவி என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.

|

தீப்புண். மிகவும் பயங்கராமனது அதே சமயம் வலி மிக்கது. உடனடியாக நாம் தரப்போகின்ற முதலுதவி சிகிச்சை வாழ்நாள் முழுமைக்கும் நினைவுகளில் இருக்கச் செய்திடும். தீப்புண் உண்டான பிறகு தரப்படுகிற சிகிச்சைகளை விட, முதலில் தருகின்ற முதலுதவி தான் மிகவும் முக்கியமானது.

What to do immediately for burn wounds

வீட்டில் கவனக்குறைவாக ஏதேனும் சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீப்புண் உண்டானால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மூடிடுங்கள் :

மூடிடுங்கள் :

வீட்டில் தீக்காயம் ஏற்ப்பட்டால் உடனடியாக அந்த புண்ணை கவர் செய்திடுங்கள். மற்ற பாக்டீரியா தொற்று அதில் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் . உடனடியாக ப்ளாஸ்டிக் கவர் மூலமாகவோ அல்லது சுத்தமான துணியாலோ அந்த புண்ணை மூடிடுங்கள்.

தண்ணீர் :

தண்ணீர் :

காயம் அதிகமில்லை லேசான வீக்கம் மட்டும் அல்லது எரிச்சல் மட்டும் இருக்கிறதென்றால் இதனை செய்யலாம். தீப்புண் உண்டான இடத்தை குழாய் நீரில் காட்டிடுங்கள். சுமார் பத்து நிமிடம் வரை குளிர்ந்த நீரினால் காயமேற்ப்பட்ட இடத்தை கழுவிடுங்கள்.

பின்னர் அந்த இடத்தில் ஐஸ் வைக்கலாம். ஆண்ட்டிபயாட்டிக் க்ரீம் இருந்தால் தடவலாம். கவனம், காயம் ஆழமாக இல்லாதிருந்தால் மட்டுமே இப்படிச் செய்ய வேண்டும்.

ட்ரஸ்ஸிங் :

ட்ரஸ்ஸிங் :

அதிக சூட்டினால் கொப்புளங்கள் உண்டாகி அது உடைந்து அதிலிருந்து சீழ் அல்லது தண்ணீர் வந்தால் உடனேயே கழுவிடுங்கள். நன்றாக கழுவிய பின்னர். சுத்தமான துணியைக் கொண்டு மூடிட வேண்டும்.

குளிக்க :

குளிக்க :

உடலில் தீக்காயம் ஏற்ப்பட்டால் முதலில் சருமத்தை குளிர்ச்சியாக்க வேண்டும். காயத்தை சுத்தமாக கழுவிய பின்னர் குளிர்ந்த நீரில் குளித்திடுங்கள். இது உங்கள் மனநிலையையும் மாற்றிடும்.

பேஸ்ட் :

பேஸ்ட் :

சூடான தண்ணீர் கொட்டி விட்டது என்றால் உடனடியாக குளிர்ந்த நீரினால் கழுவி விட்டு அங்கே அதிக கெமிக்கல் இல்லாத டூத் பேஸ்ட் அப்ளை செய்திடலாம்.

உருளைக்கிழங்கு :

உருளைக்கிழங்கு :

சூடான பாத்திரத்தை தொட்டதாலோ அல்லது சூடான பதார்த்தங்கள் கொட்டியதாலோ தீக்காயம் உள்ளாகியிருந்தால் இதனை செய்திடலாம். ரத்தக்காயமில்லாமல் சிவந்திருந்தால் இதனைச் செய்யுங்கள்.

உருளைக்கிழங்கினை சுத்தமாக கழுவி தோல் நீக்கி காயத்தின் மீது வைக்கலாம். இதற்கு சமைக்காத உருளைக்கிழங்கு தான் பச்சையாக அப்படியே பயன்படுத்த வேண்டும். வேக வைத்தவற்றை பயன்படுத்தக்கூடாது. உருளைக்கிழங்கின் தோலைனைக் கூட இதற்கு பயன்படுத்தலாம்.

பால் :

பால் :

பாலில் இருக்கும் சில தாதுக்களால் தீக்காயங்கள் குறைந்திடும். தீக்காயம் ஏற்ப்பட்டபின் குளிர்ந்த நீரினால் கழுவி பின்னர் காயமேற்ப்பட்ட பகுதியை பாலில் முங்கச் செய்திடலாம். சுமார் பதினைந்து நிமிடம் இப்படியிருந்தால் எரிச்சல் குறைந்திடும்.

டீ பேக் :

டீ பேக் :

தீக்காயம் ஏற்ப்பட்ட பகுதியில் அதிக எரிச்சல் இருந்தால் இதனை செய்திடுங்கள் . வீட்டில் பயன்படுத்திய டீ பேக் இருந்தால் அதனைக் கூட பயன்படுத்தலாம். சூடாக இருந்தால் குளிர்ந்த நீரில் கழுவி குளிர்ச்சியாக்கிக் கொள்ளுங்கள்.

பின்னர் அதனை காயமேற்ப்பட்ட இடத்தில் பத்து நிமிடங்கள் ஒத்தடம் கொடுகக்வும். டீயில் இருக்கும் டேனிக் ஆமிலம் காயத்தின் எரிச்சலை கட்டுப்படுத்தும்.

தயிர் :

தயிர் :

எல்லாரின் வீட்டிலும் இருக்கும். தீக்காயம் ஏற்ப்பட்டு சருமம் சிவந்திருந்தாலோ அல்லது அதிக வலியோ எரிச்சலோ உண்டானால் காயத்தின் மீது தயிர் தடவலாம். இது சீக்கிரமே காய்ந்திடும்.

காய்ந்ததும் மீண்டும் இரண்டாவதாக மூன்றாவதாக தயிர் அப்ளை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What to do immediately for burn wounds

What to do immediately for burn wounds
Story first published: Wednesday, September 27, 2017, 17:17 [IST]
Desktop Bottom Promotion