Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது! -
கொங்குநாட்டு ஸ்டைல் பச்சைப்பயறு குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
நட்ஸ்கள் குறித்து பலரது மனதில் உள்ள டாப் 5 சந்தேகங்களுக்கு பதிலளித்த டாக்டர்.அருண்குமார்! மிஸ் பண்ணாம படிங்க.. -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்! -
ரவா பன் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம் -
சனி-சந்திரனால் உருவாகியுள்ள விஷ யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்!
நச்சுக்களை வெளியேற்றி உடல் எடையை குறைக்க நீங்கள் குடிக்க வேண்டிய பானங்கள்!!
மற்றர்கள பொறமைப்படும் அளவிற்கு ஒரு சிறந்த உடல் அமைப்பை பெற விரும்புகிறீர்களா? வேகமாக உங்கள் எடையை குறைக்க உதவும் சிறந்த பானங்கள் பற்றி மேலும் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.
நீங்கள் எப்போதும் ஒரு சரியான உடல் வடிவத்தை விரும்பும் நபரா? அதற்காக மிகத் தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றீர்களா? அதில் உங்களுக்கு வெற்றி கிடைக்க வில்லையா? மேல் கூறிய கேள்விகளுக்கான உங்களின் பதில் ஆம் எனில் இந்தக் கட்டுரை உங்களுக்கு நிச்சயம் உதவும்.
இங்கே குறிப்பிடப்பட்டுள்ளை உடல் நச்சுக்களை நீக்க உதவும் இந்த பானங்கள், உங்களுடைய உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து உங்களுடைய உடல் எடையை குறைக்க உதவுகின்றன. உங்களுடைய வழக்கமான உடல் பயிற்சிகளுடன் இந்த பானங்களை அருந்துவதன் மூலம் மிகச் சிறந்த பலன்களை அடைய முடியும்.
உடல் எடையை குறைக்க உதவும் இந்த பானங்களை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

1. ஆப்பிள் மற்றும் பட்டை பானம் :
ஒரு வெட்டப்பட்ட மற்றும் விதை நீக்கப்பட்ட ஆப்பிளை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் ரசாயனம் இல்லா இலவங்கப்பட்டை குச்சியை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இவை இரண்டையும் தண்ணீரில் நன்கு கலக்கி ஒரு அரிய பானத்தை தயாரியுங்கள். இந்தக் கலவையில் தாவர ஊட்டச்சத்துகள் மற்றும் ஆன்டியாக்ஸிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. மேலும் இது வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க உதவுகிறது.

2. தர்பூசணி, ஸ்ட்ராபெரி மற்றும் புதினா பானம்:
இந்த பானத்தில் வைட்டமின்கள் ஏ, பி6, சி, லைகோபீன், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளது. இது உங்கள் உடல் வலிமையை அதிகரிக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
சில தர்பூசணி துண்டுகள், புதினா, மற்றும் ஸ்ட்ராபெரி ஆகிய மூன்றையும் ஒன்றாகக் கலந்து இந்த பயனுள்ள நச்சு நீக்கும் பானத்தை தயார் செய்யுங்கள்.

3. ஆரஞ்சு ராஸ்பெர்ரி பானம்:
நார்ச் சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிஜடெண்ட், வைட்டமின்கள், மற்றும் புற்று நோயை தடுக்க உதவும் பினோலிக் கலவையான எல்ஜிக் அமிலம் நிறைந்த இந்த பானம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி, உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

4. சியா விதை பானம்:
சியா விதைகளில் குளுட்டோன்கள் இல்லை, மேலும் இதில் அதிக அளவு கால்சியம் உள்ளது. இந்த நச்சு நீக்கும் பானம் உங்களுடைய அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான ஆற்றலை அளித்து, உங்களை சோர்வடையாமல் பாதுகாக்கின்றது. மேலும் உங்களுடைய உடலுக்கு தேவையான சக்தியை தருகின்றது.

5. வெள்ளரிக்காய் பானம் :
உடல் எடையைக் குறைக்க உதவும் ஒரு அற்புத மருந்தாக வெள்ளரிக்காய் கருதப்படுகின்றது. இதில் வைட்டமின்கள், அழற்சியை போக்கும் சேர்மங்களான ஃபிளாவனாய்டுகள் அதிக அளவில் உள்ளது.
இது மிக வேகமாக எடையைக் குறைக்க உதவும் ஒரு சிறந்த பானமாக கருதப்படுகின்றது.

6. ஆப்பிள் சாறு வினிகர் பானம்:
ஆப்பிள் சாறு வினிகரில் அதிக அளவில் என்சைம்கள் மற்றும் உடலுக்கு பயன் தரும் பாக்டீரியா உள்ளது. அது இரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவுகிறது மற்றும் உடல் வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகின்றது.

7. ப்ளூபெரி மற்றும் ஆரஞ்சு பானம்:
இந்த பானத்தில் அதிக அளவில் வைட்டமின் சி உள்ளது. மேழும் இது உடல் வளர் சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகின்றது. எனவே இது பசியை கட்டுப்படுத்தும் அரு மருந்தாக கருதப்படுகின்றது.

8. மஞ்சள் நீர்:
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவில் உள்ளது. மேழும் இது உடலுக்கு ஏற்படும் புற்று நோய் ஆபத்தை குறைக்கின்றது. இது உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் நச்சுக்களில் இருந்து உடல் செல்களை காப்பாற்றுகின்றது. மேழும் இது உடல் எடையை குறைக்க உதவும் ஒரு அற்புத மருந்தாக கருதப்படுகின்றது.



Click it and Unblock the Notifications