உடல் ஆரோக்கியத்திற்கு சமையலில் செய்ய வேண்டிய அத்தியாவசிய மாற்றங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

உடல் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு எல்லாருமே இப்போது சத்தான காய்கறி மற்றும் பழங்களையே விரும்பி சாப்பிடுகிறோம்,நாம் சமைக்கும் எல்லா காய்களிலுமே ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. ஆனால் அந்த சத்துக்கள் முழுமையாக நம் உடலில் சென்று சேர்கிறதா என்று கேட்டால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.

Tips to cook vegetables without losing their nutrients

நாம் சமைக்கும் முறையில் ஏராளமான தாதுக்கள் அழிந்து விடுகின்றன. எல்லா சத்தையும் அழித்து விட்டு வெறும் சக்கையைத் தான் இதுவரை நாளும் சாப்பிட்டுக் கொண்டு இருந்திருக்கிறோம். இவற்றை தவிர்க்க வேண்டும் என்றால் காய்களில் அதன் சத்துக்களை வீணாக்காமல் எப்படி சமைப்பது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தண்ணீர் :

தண்ணீர் :

காய்கறிகளுக்கு குறைவான தண்ணீரையே பயன்படுத்துங்கள். பி விட்டமின்ஸ் குறிப்பாக பி 12 எளிதாக தண்ணீரில் கரைந்திடும். இவை நம் உடலுக்கு மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.

சருமத்தை பராமரிக்கவும், எலும்பு வளர்ச்சிக்கும், சீரான ரத்த ஓட்டத்திற்கும் இந்த சத்துக்கள் அவசியமாகிறது. அதிகமாக சூடுபடுத்துவது, அல்லது அதிகமான தண்ணீரை பயன்படுத்தி வேக வைப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

கொதித்தல் :

கொதித்தல் :

காய்கறியை தண்ணீரில் போட்டு அதிக நேரம் கொதிக்க வைக்க கூடாது. அதாவது சில காய்களை வேக வைக்க இப்படிச் செய்வதுண்டு. அதே சமயம் நீண்ட நேரமும் வேக வைக்க கூடாது. அப்படி வேக வைத்தால் அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் அழிந்துவிடும்.

அதே போல ப்ரோட்டீன்,க்ளோரோஃபில் மற்றும் விட்டமின் சி ஆகியவை ஓவர் குக்டு காய்கறியில் குறைந்திடும்.

ஆவியில் வேக வைக்கலாம் :

ஆவியில் வேக வைக்கலாம் :

காய்கறியை தண்ணீரில் சேர்த்து வேக வைப்பதை விட ஆவியில் வேக வைக்கலாம். காய்களில் இருக்கும் க்ளூகோசினேட் என்கிற பயோ ஆக்டிவ் நியூட்ரிஷியன் அழிந்திடாமல் பாதுகாக்கும்.

இது நம் உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்திடும். இப்படி வேக வைப்பதால் அந்த காய் வேகமாகவும் செரித்திடும்.

ஃப்ரை :

ஃப்ரை :

காய்கறியை டீப் ஃப்ரை செய்யவே செய்யாதீர்கள். காய்கறியில் இருக்கக்கூடிய ஸ்டார்ச் அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சும் அதோடு காய்கறியில் இருக்கக்கூடிய விட்டமின் ஏ, டி, இ மற்றும் கே போன்ற சத்துக்கள் முற்றிலுமாக அழிந்திடும்.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் தொடர்பில்லாத எண்ணெய் அதிகமாகவும், தேவையான சத்துக்கள் முற்றிலும் இல்லாமலும் ஆக்கிடும். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியதாகும்.

அதே போல காயை அதிகப்படியாக சூடுபடுத்துவதால் காய்களில் உள்ள சத்துக்கள் முற்றிலுமாக அழிந்திடும்.

எண்ணெய் :

எண்ணெய் :

முழுதாக பொறிக்க வில்லை என்றாலும் தாளிப்பதற்கு எண்ணெய் பயன்படுத்துவீர்கள் தானே அந்த எண்ணெயை தேர்ந்தெடுக்கும் போது கவனமாக இருங்கள். எண்ணெயை அடிக்கடி மாற்றாதீர்கள்.

எந்த எண்ணெயில் சத்துக்கள் அதிகமாக இருக்கிறதோ அதனையே தேர்வு செய்திடுங்கள். மாறாக விலை குறைவு என்ற காரணத்தை முன் வைக்க வேண்டும்.

க்ரில் :

க்ரில் :

சில காய்களை க்ரில் செய்து சாப்பிடுவோம். அதுவும் அளவோடு இருக்க வேண்டும். அதிக நேரம் க்ரில் செய்தால் காய்களில் இருக்கும் நியூட்ரிசியன்கள் அழிந்திடும்.

குறிப்பாக இப்படி அதிகப்படியாக க்ரில் செய்வதால் விட்டமின் பி கரைந்திடுவதால் அந்த காயை சாப்பிடுவதால் கிடைக்க கூடிய முழு பலன் கிடைக்காது.

ஓவன் :

ஓவன் :

காய்களை சமைத்த பிறகு மீண்டும் சூடுபடுத்த ஓவனை பயன்படுத்த வேண்டாம். ஒரே உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் அதிலிருக்கும் நியூட்ரிசியன்கள் முற்றிலுமாக அழிந்திடும். அப்படியே ஓவனில் காய்களை சமைக்கும் சூழல் ஏற்பட்டால் இரண்டு நிமிடத்திற்கு மேல் வைக்க கூடாது.

சூடு :

சூடு :

காலையில் சமைத்த காயை மதியம் சாப்பிடும் போது சூடு படுத்துவது, அல்லது இன்னொரு முறை எடுத்துக் கொள்ளும் போது சூடு படுத்துவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும். முதல் முறை சமைக்கும் போதே அதிலிருக்கும் சில தாதுக்கள் அழிந்திருக்கும் இப்படி மீண்டும் மீண்டும் சூடு படுத்துவதால் அது ஆபத்தையே ஏற்படுத்திடும்.

காய்களை நறுக்குதல் :

காய்களை நறுக்குதல் :

அலங்காரத்திற்காக எந்த காயினையும் பொடியாக நறுக்காதீர்கள். இப்படிச் செய்வதால் அதிலிருக்கும் சத்துக்கள் எல்லாம் வீணடிக்கப்படுகின்றன. மாறாக முடிந்தளவு பெரிது பெரிதாக நறுக்கலாம்.

அதே போல நறுக்குவதற்கு முன்னால் கழுவிக் கொள்ளுங்கள். காய்களை நறுக்கிய பிறகு தண்ணீரில் போட்டு கழுவக்கூடாது.

காலையில் அவசரமாக கிளம்புகிறேன் என்று முந்தைய நாள் இரவே காய்களை நறுக்கி வைக்கும் வேலையையும் தவிர்த்திட வேண்டும்.

அவை மறு நாள் காலையில் பார்க்கும் போது ஃப்ரஷ்ஷாக இருந்தாலும் அவற்றில் இருக்கும் நியூட்ரிஷியன்கள் குறைந்திடும்.

சுத்தம் :

சுத்தம் :

காய்கள் வாங்கியதும் சுத்தமாக்குகிறேன் என்று அதிக நேரம் தண்ணீரில் கழுவுவது, அதன் தோலை முற்றிலும் நீக்குவது ஆகியவற்றை இனி செய்யாதீர்கள்.

உருளைக்கிழங்கு,கேரட் போன்றவற்றில் அதன் தோல் பகுதியில் தான் நார்சத்து அதிகமாக இருக்கிறது. அதனை முற்றிலுமாக நீக்குவதால் அதிலிருந்து கிடைக்ககூடிய நார்சத்து முழுவதுமாக நமக்கு கிடைக்காமல் போகிறது.

அதிகமாக சமைக்கப்பட்ட காய்களை விட சாலெட் போன்று சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips to cook vegetables without losing their nutrients

Tips to cook vegetables without losing their nutrients
Story first published: Thursday, November 9, 2017, 12:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter