உங்கள் முதுகுவலியைப் போக்கும் 2 அற்புத மூலிகை எண்ணெய்கள்!!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

ஒருவருக்கு என்ன செய்தும் தீராத முதுகு வலி இருந்தால் என்னவாகும். எல்லா முயற்சியும் செய்து பலனில்லை என்றால் நீங்கள் விரக்தி நிலைக்கே சென்று விடுவீர்கள் அல்லவா.

தாங்க முடியாத முதுகு வலி பிரச்சனையில் இருந்து விடுபட சில டிப்ஸ்...!

இந்த தீராத முதுகு வலி உங்களை நிம்மதியாக வேலை செய்ய விடாது. எப்பவும் இடையூறு கொடுத்து கொண்டே உங்கள் தினசரி செயல்களை செய்ய விடாமல் பாதிக்கச் செய்யும். நீங்களும் சோர்ந்து போய் எந்த வித வேலையும் செய்ய முடியாமல் எப்படா ரெஸ்ட் எடுப்போம் என்று தோன்றும்.

These 2 Powerful Oils Can Reduce Back Pain In 2 Weeks!

60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் இந்த முதுகு வலி பிரச்சினையால் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். என்ன தான் அவர்கள் அறுவைச் சிகிச்சை செய்து இருந்தாலும் வலியின் தாக்கம் மட்டும் மாறுவதில்லை.

உடல் வலி உங்கள் உடம்பில் எங்கே ஏற்பட்டாலும் அது தினசரி நடவடிக்கைகளை பாதிக்கத்தான் செய்கிறது.

இருக்கிற வலியிலே மோசமான வலி இந்த முதுகு வலி தான். ஏனெனில் நமது நிறைய செயல்களான குனிதல், நடத்தல் மற்றும் உட்காருதல் போன்றவற்றிற்கு முதுகு தான் பக்கபலமாக உள்ளது. நிரந்தர முதுகு வலியாலும் எல்லாரும் அவஸ்தைபடுகின்றனர்.

முதுகு வலி வருவதற்கு அடி படுதல், ஆரோக்கியமற்ற உணவுகள், கெட்ட தோரணை, பலவீனமான எலும்புகள், வயதாகுதல், வாதம், எலும்பு தொற்று மற்றும் தசை நாட்களில் தொற்று போன்றவற்றால் முதுகு வலி வருகிறது.

ஒருவர் தீராத முதுகு வலி அல்லது மற்ற வலியால் அவதிப்பட்டால் முதலில் அவரது உணவு மற்றும் மற்ற பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும். இல்லையென்றால் அதை தீர்ப்பது மிகவும் கடினம்.

இது மட்டும் இல்லாமல் ஒரு மருத்துவரிடம் சென்று தக்க ஆலோசனை பெற்று முதுகு வலிக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். ஆனால் அவர்கள் பொதுவாக வலி நிவாரண மருந்துகளை மட்டுமே கொடுப்பதால் இது உங்களுக்கு பக்க விளைவுகளை கொடுப்பதற்கு வாய்ப்புள்ளது.

எனவே எந்த வித பக்க விளைவும் இல்லாமல் உங்கள் முதுகுவலியை சரி செய்ய இந்த இயற்கை முறை கண்டிப்பாக உங்களுக்கு உதவியாக இருக்கும்.

These 2 Powerful Oils Can Reduce Back Pain In 2 Weeks!

தேவையான பொருட்கள்:

லாவண்டர் எண்ணெய் - 8-10 துளிகள்

பெப்பர் மின்ட் ஆயில் - 8-10 துளிகள்

இந்த முறை உங்கள் முதுகு வலியை இரண்டே வாரத்தில் காணாமல் செய்து விடும். தொடர்ந்து பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

இதனுடன் சேர்த்து ஆரோக்கியமான உணவுகள் மேற்கொள்ள வேண்டும். தயவு செய்து அழற்சி உண்டாக்கும் எண்ணெய் மற்றும் காரமான உணவுகளை தவிர்த்தால் நல்லது.

These 2 Powerful Oils Can Reduce Back Pain In 2 Weeks!

மேலும் எளிதான உடற்பயிற்சி முதுகு பகுதிக்கு கொடுப்பதால் நல்ல ரிலாக்ஸ் கிடைக்கும்.

லாவண்டர் எண்ணெய்யில் அதிகமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்கள் சரும துளைகள் வழியாக தசைகளுக்கு சென்று அந்த பகுதியில் உள்ள அழற்சி மற்றும் வலியை குறைக்கிறது.

பெப்பர் மின்ட் ஆயில் உங்கள் முதுகு பகுதியில் இரத்த ஒட்டத்தை அதிகரித்து வலியை குறைக்கிறது.

செய்முறை மற்றும் பலன்கள்:

ஒரு பெளலை எடுத்து உங்கள் தேவைக்கு தகுந்தமாறி ஆயிலை எடுத்துக் கலந்து கொள்ள வேண்டும்.

நன்றாக கலக்க வேண்டும்

இந்த கலவையை உங்கள் முதுகில் எல்லா இடங்களிலும் சமமாக தடவ வேண்டும்

பிறகு இன்னொருத்தரர் உதவியை கொண்டு 20 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்

இந்த முறையை தினமும் ஒரு தடவை செய்ய வேண்டும்.

இப்படியே இரண்டு வாரங்கள் செய்து வந்தால் நீங்கள் நல்ல மாற்றத்தை காண்பீர்கள்.

English summary

These 2 Powerful Oils Can Reduce Back Pain In 2 Weeks!

These 2 Powerful Oils Can Reduce Back Pain In 2 Weeks!
Story first published: Thursday, July 27, 2017, 13:13 [IST]