நினைத்த காரியம் நடக்க , பல நோய்களை தீர்க்க நத்தைச்சூரி மூலிகையை எப்படி பயன்படுத்துவது?

Posted By: Gnaana
Subscribe to Boldsky

அரிய தன்மைகள் கொண்ட மூலிகைகளில் இருந்து, மாபெரும் காயகற்ப தன்மைகள் கொண்ட மூலிகைகள் வரை, ஆயிரக்கணக்கான மூலிகைகள் நம்மைச்சுற்றி, இருந்து வருகின்றன. செடிகள், கொடிகள், வேர்கள், தண்டுகள் இலைகள், கனிகள் மற்றும் காய்களின் மூலம், மனிதர்களுக்கு நன்மைகள் செய்யும் மூலிகைகள், அடர்ந்த காடுகளில் மட்டும்தான் வளரும் என்பதில்லை, மக்கள் வசிக்கும் இடங்களிலும் அவை பரவலாக இருந்துதான் வருகிறது.

அவற்றின் மகத்துவம் உணர்ந்தவர்கள் மட்டும், அவற்றை முறைப்படி பயன்படுத்தி, தங்கள் உடல் நலம், தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களின் உடல் நலத்தை காத்து வருகின்றனர்.

மூலிகைகளில், காயகற்ப மூலிகைகள் என்பன உயர்வானவை, அவற்றின் பயன்பாடுகளும், வளருமிடங்களும் சித்தர்களால், சங்கேத மொழிகளில் இரகசியமாகவே, வைக்கப்பட்டிருக்கும். அப்படியே அந்த உயரிய தன்மைகள் உடைய மூலிகைகளின் இருப்பிடத்தை அறிய நேர்ந்தாலும், அவற்றைப் பறிப்பதற்கு என்று சில முறைகள் உள்ளன.

குறிப்பிட்ட நட்சத்திரங்கள் நிறைந்த நாளில், குறிப்பிட்ட கால நேரத்தில், அந்த மூலிகைகளுக்கென்று உள்ள மந்திரங்களை முறைப்படி உச்சரித்து, காப்பு கட்டுவது போன்ற சடங்குகள் செய்து,, மூலிகையின் வேர்களை முற்றிலும் எடுக்கும்படி, முறைப்படி பறித்தால் மட்டுமே, மூலிகைகளின் உயரிய தன்மைகள், அந்தச் செடிகளில் இருக்கும், அல்லாவிடில், அவை வெறும் செடிகளாகவே இருக்கும், அதனால் எதிர்பார்த்த பலன்கள் கிட்டாது என்பது, முன்னோர் நம்பிக்கை. இதுபோன்ற செயல்களை மூலிகை சாப நிவர்த்தி என்பார்கள்.

இதுபோன்ற மூலிகை பறிப்பு முறைகள், காயகற்ப மூலிகைகள் எனும் உயரிய மூலிகைகளுக்கு மட்டும்தான் என்பதில்லை, அனைத்து வகை மூலிகைகளைப் பறிப்பதற்கும், இத்தகைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதுமின்றி, எந்தவித கால நேரக் கணக்குகள் இல்லாமல், எந்த வித சடங்குகளும் இன்றி, நாம் மூலிகைகளை பறிக்க முடியுமா, அதுவும், அந்த மூலிகை உயரிய காயகற்ப மூலிகையாகவும் இருந்தாலும், எளிதில் பறிக்க முடியுமா? என்பது போன்றவை நமது கேள்விகள் என்றால், அதற்கு முன்னோர்களின் பதில், நிச்சயம் முடியும் என்பதுதான்.

ஆம்! அது போன்ற ஒரு உயரிய மூலிகை இருக்கிறது, அதுதான், நத்தைச்சூரி! சாப நிவர்த்தி செய்யத் தேவை இல்லாத, உயரிய மூலிகை, சொன்னதைச் செய்யும் நத்தைச்சூரி, என்பர், முன்னோர்கள் எல்லாம்.

காயகற்ப மூலிகை நத்தைச்சூரி!

அதிகமாக வயல் வெளிகளில், ஈரப்பாங்கான இடங்களில் மற்றும் வாய்க்கால் கரையோரங்களில் தானாக வளரும் அபூர்வ மூலிகைதான், நத்தைச்சூரி.

சிறிய இலைகள் மற்றும் பூக்களுடன் காணப்படும் நத்தைச்சூரியின் இலைகள், வேர்கள் மற்றும் விதைகள் அரிதான பலன்கள் தருபவை.

நத்தைச்சூரியின் விதைகளே, காயகற்ப மருந்தாகிறது. இந்த விதைகளை தூளாக்கி, அதை நீரிலோ அல்லது தேனிலோ கலந்து தினமும் பருகி வர, உடல் வலுவுடன் பல ஆண்டுகள் நலமுடன் வாழலாம் என்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நத்தைச்சூரி சூரணம் :

நத்தைச்சூரி சூரணம் :

சமூலம் என்பது ஒரு செடியின் இலை, தண்டுகள், மலர்கள், காய்கள், விதைகள் மற்றும் வேர்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் சேர்த்துக் குறிப்பிடுவது என்பதை நாம் அறிந்திருப்போம், அதுபோல, நத்தைச்சூரி செடியின் அனைத்து பாகங்களையும் நன்கு நிழலில் உலர்த்தி, உரல் அல்லது ஆட்டுக்கல்லில் இட்டு தூளாக்கி சலித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

நரம்பு பாதிப்புகள் :

நரம்பு பாதிப்புகள் :

இந்த நத்தைச்சூரி சூரணத்தை, பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டுடன் சேர்த்து, தினமும், இருவேளை, தொடர்ந்து சாப்பிட்டு வர, உடல் தேறி, நரம்புகள் வலிமையாகி, இரத்தம் சுத்தமாகி, வியாதிகள் விலகி, உடல் பொலிவாகி, மனமும் புத்துணர்வடையும் என்கிறார்கள், முன்னோர்கள்.

நினைத்த காரியம் நடக்க :

நினைத்த காரியம் நடக்க :

நத்தைச்சூரி இலைகளை நன்கு மென்று வாயில் அதக்கிக்கொள்ள, உடலில் சக்தி அதிகரித்து, அதிக வலிமை உண்டாகும். மேலும், நத்தைச்சூரி விதைகளை தூளாக்கி தினமும் சாப்பிட்டு வர, நல்ல மனநிலை மற்றும் உடல் நிலையுடன் கலைகளில் தேர்ச்சி பெற்று, நலமுடன் வாழலாம் என்கிறார்கள். இதைப்போல நினைத்ததை நலமுடன் சாதிக்க வைப்பதால், சொன்னதைச்செய்யும் நத்தைச்சூரி என்கிறார்கள், முன்னோர்.

நத்தைச்சூரி விதை மருத்துவம் ;

நத்தைச்சூரி விதை மருத்துவம் ;

சிலரின் நெடுநாள் வியாதிகள், முறையான மருத்துவத்தால் தீர்ந்தாலும், மருத்துவ சிகிச்சைக்குப் பின், அவர்கள் மிகவும் உடல் நலிந்து, மெலிந்து காணப்படுவர். இந்த நிலையை மாற்றி, அவர்களின் உடல்நிலையை நல்ல ஆரோக்கியத்துடன் திடகாத்திரமாக விளங்கவைக்கும்.

உடல் சீராக இயங்க :

உடல் சீராக இயங்க :

நத்தைச்சூரியின் விதைகளை நன்கு உலர்த்தித் தூளாக்கி, அதைத் தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டு வர, உடலில் வியாதியால் உண்டான பாதிப்புகள் விலகி, சுவாசம் இயல்பான நிலையை அடைந்து, உடலின் உள் உறுப்புகள் சீராக இயங்கும் நிலை ஏற்படும். இதன் மூலம், இரத்தம் சுத்தமாகி, நச்சுக்கள் உடலில் இருந்து நீங்கும், மேலும் உடல் விரைவில் சதைப்பற்றுடன் வலுவாகித் தேறி, வரும்.

சிறுநீரக கற்களை சரிசெய்யும் :

சிறுநீரக கற்களை சரிசெய்யும் :

நத்தைச்சூரி விதைகளை நன்கு உலர்த்தி தூளாக்கி, அந்தத் தூளை, பாலில் இட்டு சூடாக்கி, பனங்கற்கண்டு சேர்த்து, தினமும் இரு வேளை பருகி வர, உடலில் ஏற்பட்ட சூடு தணியும், இரத்தத்தை சுத்தம் செய்து, உடலில் தேங்கியுள்ள நச்சுப்பொருட்கள் மற்றும் உப்புக்களை சிறுநீரின் மூலம் வெளியேற்றி, சிறுநீரகத்தில் கல் ஏற்படாமல், பாதுகாக்கும்.

நத்தைச்சூரி வேர் வைத்தியம்.

நத்தைச்சூரி வேர் வைத்தியம்.

நத்தைச்சூரியின் வேரை சுத்தம் செய்து அதை ஒன்றரை தம்ளர் நீரில் காய்ச்சி, பின்னர் மூன்று மணி நேரம் ஊறவைத்து, தினமும், இந்த வேர் நீரை மூன்று வேளை சிறு அளவில் பருகி வர, காய்ச்சல் மற்றும் மற்ற வியாதிகளின் பாதிப்புகள் விலகும்.

கண் எரிச்சல்

கண் எரிச்சல்

சிலருக்கு அதிக அலைச்சல் மிக்க வேலைகள் மற்றும் நேரந்தவறிய உணவுப் பழக்கங்களால், உடல் மிகுந்த சூட்டுடன் காணப்படும். இதனால், கண்களில் எரிச்சல் மற்றும் உடலில் அரிப்பு மற்றும் தடிப்பு இதற்கு நத்தை சூரி எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம்.

முடி உதிர்தலைத் தடுக்கும் நத்தைச்சூரி

முடி உதிர்தலைத் தடுக்கும் நத்தைச்சூரி

நத்தைச்சூரி வேரை அரைத்து, அத்துடன் நாயுருவி வேர், குப்பைமேனி வேர், துத்தி வேர், வன்னி வேர், உத்தாமணி வேர், தூதுவளை வேர், விளா வேர், பாகல் வேர், வேப்பம் பட்டை, கடுக்காய், மிளகு, பூண்டு, வசம்பு, திப்பிலி இவற்றை ஒரே அளவில் எடுத்துக் கொண்டு, சற்றே அரைத்து, அரை லிட்டர் நல்லெண்ணையில் நன்கு காய்ச்சி, லேகியம் போன்ற பதத்தில் வந்ததும், இறக்கி, ஆற வைத்து, சேகரித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த மூலிகை எண்ணையை உடலில் தடவி வர, அரிப்பு, தடிப்பு போன்ற சரும பாதிப்புகள் யாவும் சரியாகி விடும். உடலில் ஏற்பட்ட சூடு, விலகும். இந்த எண்ணையைத் தலையில் நன்கு தேய்த்து, சற்று நேரம் ஊற வைத்த பின்னர், குளித்து வர, அதிக அளவில் தலை முடி உதிர்ந்து வந்தது நின்று விடும். மேலும், தலையில் ஏற்படும் சூட்டை போக்கி, தலைமுடியை நன்கு வளர வைக்கும் ஆற்றல் மிக்கது, இந்த மூலிகை எண்ணை.

உடல் நலத்துக்கு பெரும் நன்மைகள் செய்யும் நத்தைச்சூரி, மனிதரின் செல்வ வளத்துக்கும் ஏற்றங்கள் தர வல்லது.

நத்தைச்சூரி தாயத்து!

நத்தைச்சூரி தாயத்து!

நத்தைச்சூரி செடி அல்லது வேரை நன்கு அலசி சுத்தம் செய்து, நிழலில் உலர்த்தி, சிறிதாக வெட்டி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்த தாயத்தில் வைத்து, நூலில் கட்டி, இடுப்பில் அல்லது கையில் அணிந்துகொள்ள, செய்யும் காரியங்கள் யாவும் வெற்றியடையும், புதிதாக ஆரம்பிக்கும் தொழில்கள் மற்றும் வியாபாரங்கள் மிகப்பெரும் அளவில் ஆதாயங்கள் கொடுக்கும். வாழ்வில் நேர்மையையும், வெற்றியையும் தொடர வைக்கும் ஆற்றல் நிறைந்தது, இந்த நத்தைச்சூரி தாயத்து என்கின்றனர் முன்னோர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Medicinal benefits of Spermacoce Hispida

Medicinal benefits of Spermacoce Hispida
Story first published: Tuesday, November 21, 2017, 17:30 [IST]