For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுறீங்களா? அப்ப இந்த எளிய முறைகளை ட்ரை பண்ணுங்க...

தலைசுற்றல் வந்தால் நீங்கள் குணப்படுத்த என்ன செய்யலாம் என இயற்கையான பக்கவிளைவுகளற்ற குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது.

By Divyalakshmi Soundarrajan
|

வெர்டிகோ என்பது கிறுகிறுப்புடன் கூடிய தலைச்சுற்றல் ஆகும். நாம் நம்மைச் சுற்றியிருப்பவர்களை சுற்றுவது போலவோ அல்லது நம்மைச் சுற்றியிருப்பவர்கள் நம்மை சுற்றுவது போலவோ உணரக்கூடிய ஒரு பிரச்சனை தான் வெர்டிகோ.

பொதுவாக வெர்டிகோ உயரம் சம்பந்தப்பட்ட நோயாக கருதப்படுகிறது. இதை ஆங்கிலத்தில் உயரம் சம்மந்தப்பட்ட நோயை 'அக்ரோபோபியா'என்பர். ஆனால் இது உயரம் சம்பத்தப்பட்டது என்பது தவறான நம்பிக்கையாகும். உண்மையாக கூறவேண்டுமென்றால் உடலின் சமநிலை தவறும் போது இந்த வெர்டிகோ உணரப்படுகிறது. சரி உடலின் சமநிலை ஏன் தவறுகிறது...?

Effective Ways To Prevent Vertigo

இந்த வெர்டிகோ விற்கு பல காரணங்கள் இருந்தாலும் அதில் முதன்மையான காரணம் உள்காதுகளில் அளவுக்கு அதிகமாக கால்சியம் படிந்தால் உடலில் சமநிலை பேனப்படுவது தவறுகிறது அப்படி சமநிலை இல்லாத தருணங்களில் இந்த வெர்டிகோ உணரப்படுகிறது இதை ஆங்கிலத்தில் BBPV (Benign paroxysmal positional vertigo) என்பர்.

உங்கள் இதயம் எவ்வளவு பாதுகப்பாக உள்ளது? நீங்கள் முக்கியமாய் கடைபிடிக்க வேண்டிய வழிகள்

அதாவது உள்காதுகளில் வடியும் திரவம்,மற்றும் உள்காதுகளில் வைரஸ்களின் தாக்குதல் போன்றவற்றால் இந்த கால்சியம் படிதல் ஏற்படுகிறது சுருக்கமாக சொன்னால் உள்காதுகள் பாதிக்கப்பட்டால் இந்த வெர்டிகோ உணரப்படும்.

சரி இந்த வெர்டிகோவை எப்படி சரிசெய்வது...? இதற்கு பல மருந்து மாத்திரைகள்... ஏன் அறுவைசிகிச்சை முறையே இருக்கிறது. அப்படி இருந்தாலும் இது வராமல் தடுக்கச் சிறந்த வழி 'நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்' என்ற வள்ளுவனின் குறளுக்கேற்ப நோயின் ஆணிவேரான மூலகாரணத்தை கண்டறிந்து அதை சரிசெய்வது தான் சரியாய் இருக்கும்.

வாருங்கள் இப்போது நாம் வெர்டிகோ பிரச்சனை போக்க கடைபிடிக்க வேண்டிய சில எளிய முறைகளைப் பற்றி பார்ப்போம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 நல்ல தூக்கம்

நல்ல தூக்கம்

இரவில் நன்கு தூக்கம் வேண்டும். நல்ல உறக்கம் என்பது மறுநாள் காலையில் எழும் போது நன்கு ஃபிரஸ்ஷாக உணர்வது. இப்படி ஒரு தூக்கம் அமையும் போது அன்றைய தினம் நல்ல நாளாக அமையும். அப்படியான நமது தினசரி ஆரோக்கியமான நடவடிக்கை இந்த வேர்டிகோவை பிரச்சனையை சற்று தூரம் தள்ளியே வைக்கும்.

நீர் அதிகமாக குடிப்பது

நீர் அதிகமாக குடிப்பது

உடலில் நீர் சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் மிக அவசியமானது. நீர் சத்து குறைந்தாலும் உடலின் சமநிலை தவறி இந்த வெர்டிகோ பிரச்சனையை அதிகமாக உணர வேண்டியதாக இருக்கும். எனவே, தினசரி குறைந்தப்பட்சம் இரண்டு லிட்டர் நீராவது குடிப்பது நல்லது.

துளசி சாப்பிடுவது

துளசி சாப்பிடுவது

மூலிகை இலைகளை சாப்பிடுவது. அதுவும் குறிப்பாக தினசரி காலை வெறும் வயிற்றில் இரண்டு துளசி இலைகளை மென்று தின்றால் இந்த வெர்டிகோ எனும் கிறுகிறுப்பு, தலைசுற்றலை சுலபமாக தவிர்க்கலாம். கொதிக்கும் வெந்நீரில் சில துளசி இலைகளை போட்டு அதை முகர்வதும் நல்ல ப

இஞ்சி டீ

இஞ்சி டீ

இஞ்சி அல்லது சுக்கு டீ குடித்தால் நல்ல பலன் கிடைக்கும். இஞ்சியில் வெர்டிகோவை போக்கக் கூடிய முக்கியமான தன்மைகள் உள்ளன. வெர்டிகோ ஏற்படுவதற்கான அறிகுறிகளை இஞ்சி போக்கிவிடும். ஒரு கப் இஞ்சி டீயை தினமும் குடித்து வந்தால் வெர்டிகோ அறிகுறிகளை முற்றிலும் நீக்கிவி

பாதாம் பால்

பாதாம் பால்

பாதாமில் வைட்டமின்கள் E மற்றும் B நிரம்பியுள்ளது. இதையும் அடிக்கடி சூடான பாலில் சேர்த்துக் குடித்தால் இந்த தலைசுற்றல், கிறுகிறுப்பை அதனால் ஏற்படும் வாந்தி போன்றவற்றை தவிர்க்கலாம்.

எனவே, பாதாம் பால் குடிப்பது நிச்சயம் வெர்டிகோவிற்கு சிறந்த மருத்துவமாக அமையும். வீட்டில் இருந்தவாரே வேர்டிகோ பிரச்சனையை போக்கும் இந்த எளிய வழி முறைகள் முலம் எளிதில் அனைத்து பிரச்சனைகளையும் தடுத்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Effective Ways To Prevent Vertigo

Effective Ways To Prevent Vertigo
Story first published: Wednesday, July 5, 2017, 16:45 [IST]
Desktop Bottom Promotion