For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு கண்டிப்பா ரோஸ் கொடுக்கணும் ஏன் தெரியுமா ?

இன்றைக்கு உலக ரோஜா தினமாக கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரோஜாப்பூ கொடுப்பது வழக்கம்.

|

செப்டம்பர் 22 ஆம் தேதி உலக ரோஜா தினமாக கொண்டாடப்படுகிறது. கனடாவைச் சேர்ந்த பன்னிரெண்டு வயதான சிறுமி மெலிண்டா ரோஸ் ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். ஒரு வாரம் மட்டுமே உயிருடன் இருப்பார் என்று மருத்துவர்கள் கெடு விதித்த நிலையில் ஆறு மாதங்கள் வரை தன் நோயுடன் போராடி மறைந்தார்.

அந்நாட்களில் புற்றுநாய் பாதித்தவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அவர்களுக்கு ரோஜாப்பூ கொடுப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இந்த நாளில் புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நாளில் ரோஜா மணத்திற்காக மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தலாம் என்பதை உணர்த்தும் வகையில் ரோஜாவினால் ஏற்படும் சில நன்மைகள் .

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மலச்சிக்கல் :

மலச்சிக்கல் :

ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களைச் சுத்தம் செய்துகொள்ளுங்கள். பின்பு ஒரு பாத்திரத்தில் அவற்றை இட்டு, ஒரு டம்ளர் நீரை ஊற்றி நன்கு கொதிக்கவைத்துக் கொள்ளுங்கள்.

கொதிநீரை எடுத்து வடிகட்டி பாதி அளவு தீநீரோடு இனிப்பு சேர்த்து காலையும், மாலையிலும் குடித்து வர மலச்சிக்கல் விலகும். சிறுநீர்ச் சுருக்கு குணமாகும். மூலச்சூடும் தணியும்.

பேதி :

பேதி :

250 கிராம் அளவு ரோஜா இதழ்களை எடுத்து சுத்தம் செய்து, சற்று வாயகன்ற கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் 150 மி.லி., தேனை ஊற்றி நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

அதனை சூரிய ஒளி படும்படி ஒரு வாரம் வெயிலில் வைத்துப் பின் காலை மாலை என இருவேளையும் தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர ரத்த, சீதபேதி வயிற்றுக்கடுப்பு ஆகியன குணமாகும்.

ஒரு கைப்பிடி அளவு ரோஜா இதழ்களை எடுத்து சுத்திகரித்து மைய அரைத்து ஒரு டம்ளர் அளவு கெட்டித் தயிரில் போட்டுக் கலந்து தினந்தோறும் காலை வேளையில் மூன்று நாட்கள் குடித்து வர சீதபேதி குணமாகும்.

 மாதவிடாய் :

மாதவிடாய் :

ரோஜா இதழ்களைத் தேநீராகக் காய்ச்சிக் குடிப்பதால் கருப்பைப் கோளாறுகள் சரியாவதுடன் மாதவிடாய்க் காலத்தில் அதிகமான வலி, அதிகமான ரத்தப்போக்கு ஆகியவற்றிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.தவறிய மாதவிலக்குக்கும், குழந்தைப் பேறின்மைக்கும் ரோஜா அற்புதமான பலனைத் தரும்.

செரிமாணம் :

செரிமாணம் :

உடலில் சேர்ந்த தேவையற்ற நீரை வெளித்தள்ள சிறுநீரகத்துக்கு உதவி செய்கிறது .ரோஜாவை தேநீராகக் காய்ச்சிக் குடிப்பதால் ஜீரணப்பாதையில் ஏற்பட்ட தொற்றுக் கிருமிகள் அழிக்கப்பட்டு, நம் உடலுக்குத் தேவையான நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உருவாகும்.

அதிக சூடு :

அதிக சூடு :

ரோஜாவில் வைட்டமின் சி, பி, இ மற்றும் கே போன்றவையும், ஆர்கானிக் அமிலங்கள், டேனின், பெக்டின் போன்ற சத்துக்களும் அடங்கி உள்ளன.ரோஜாப்பூ உடலிலுள்ள நச்சுக்களையும் அதிக சூட்டையும் தணிக்கும் திறன் கொண்டது.

புற்றுநோயை கட்டுப்படுத்தும் :

புற்றுநோயை கட்டுப்படுத்தும் :

ஒரு கப் ரோஸ் தேநீர் செய்து குடிப்பதால் சுமார் 1000 மி.கி., வைட்டமின் ‘சி' சத்து கிடைக்கும், ஒருவர் அன்றாடம் 2000 மி.கி. வைட்டமின் ‘சி' சத்து உட்கொள்வதால் புற்றுநோய் செல்கள் கட்டுப்படும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to use rose for medicinal purpose

How to use rose for medicinal purpose
Story first published: Friday, September 22, 2017, 14:47 [IST]
Desktop Bottom Promotion