நவராத்திரி காலங்களில் நமது சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது எப்படி?

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

நவராத்திரி காலம் நெருங்கி விட்டது. ஹிந்துக்களின் திருவிழாக்களில் மிகப்பெரிய திருவிழாவாக இது பார்க்கப் படுகிறது. நமது நாட்டின் பிரதான பெண் தெய்வங்களுக்கு, ஒவ்வொரு நாளும், ஒருவருக்கு என 9 நாட்கள் திருவிழாவாக போற்றி கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் போது விரதம் இருப்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது, அநேக மக்கள் அதை மிகுந்த பக்தியுடன் பின்பற்றுகிறார்கள்.

விரதம் ஏன்?

இந்து நம்பிக்கைகள் படி, விரதம் ஒரு நபரின் இதயத்தையும் ஆத்மாவையும் தூய்மைப்படுத்துகிறது.மேலும் ஆன்மீக நன்மைகளைத் தாண்டி, விரதங்கள் நமது உடலைக் குறைத்து, செரிமான அமைப்புகளை மேம்படுத்துவதோடு, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, ஆரோக்கியத்திற்கும் மிக நல்ல பலன்களை கொடுக்க வல்லது.

How To Manage Sugar Level During Navratri

மேலும் விரதம் இருப்பதால் அது வாயுவை நீக்குகிறது, உடலை ஒளிர செய்கிறது, மனநலத்தை மேம்படுத்துகிறது, தூய்மையான நாக்கு, புதிய சுவாசம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. மிக முக்கியமாக, இது எடை இழப்புக்கு உதவுகிறது! இருப்பினும், 9 நாட்களுக்கு ஒரு கடுமையான உண்ணாவிரதம் இருப்பது நமது இரத்த சர்க்கரை அளவுகளை குறைக்கலாம் மற்றும் உடல் பலவீனம் அடையும்.

இரத்த சர்க்கரைஅளவு என்றால் என்ன, அது ஏன் முக்கியம்?

இரத்த சர்க்கரை அளவு என்பது ஒரு நமது இரத்தத்தில் காணப்படும் குளுக்கோஸ் அளவு (சர்க்கரை) ஆகும்.

நாம் உண்ணும் உணவு செரிமான ஆகிய பின் குளுக்கோஸ் வடிவில் இரத்தத்தில் கலந்து, பின் இரத்தத்தின் மூலம் மற்ற பாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இன்சுலின் என்பது நமது கணையத்தில் உற்பத்தி செய்யப்படும் ஒரு வித ஹார்மோன் ஆகும். இது இரத்தத்தில் உள்ள குளுகோஸுடன் வினை புரிந்து ஆற்றலாக மாற்றுகிறது. ஒரு மனிதனின் சரியான சர்க்கரை அளவு, 90-130 mg/டெசிலிட்டர் ஆகும். விரதங்கள் போது இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.

சர்க்கரை அளவை கட்டுப்பாடுடன் எப்படி வைத்திருப்பது?

நாம் கிழே கொடுத்திருக்கும் குறிப்புகள் கொண்டு, சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி நவராத்திரியை சிறப்பான முறையில் கொண்டாடுவோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 அதிகமாக காய்கறிகளை சேர்க்கலாம்:

அதிகமாக காய்கறிகளை சேர்க்கலாம்:

இந்த நேரங்களில் நமது உடலுக்கு தேவைப்படும் வைட்டமின் மற்றும் நார் சத்துகளை கொடுக்கும் உருளை கிழங்கு, முட்டைக்கோஸ், கீரை மற்றும் குடமிளகாய் போன்ற காய்கறிகளை பயன்படுத்தலாம். அதிகப்படியான எண்ணெய் உட்கொள்ளலை குறைக்க, பூரி அல்லது பக்கோடாவிற்கு பதிலாக ரொட்டியை எடுத்துக்கொள்ளலாம்.

முளைக்கீரை:

முளைக்கீரை:

முளைக்கீரையை விரத நேரங்களில் எடுத்துக் கொள்வது மிகசிறந்த பயனளிக்கும் செயலாகும் . இவை நமது உடலுக்கு ப்ரோட்டீன் அளிக்கவல்லது. இவற்றை பாலுடனோ அல்லது காய்கறிகளுடனோ சேர்த்து உண்ணலாம்.

 பழங்களும், நட்ஸ்களும்:

பழங்களும், நட்ஸ்களும்:

பழங்களிலும், நட்ஸ்களிலும் குறைந்த அளவில் கலோரிகள் இருப்பதால் அது அதிக காலத்திற்கு நமது பசி உணர்வை கட்டுப்படுத்தும். வறுத்த வேர்க்கடலை, பாதாம், பேரிச்சம்பழம் மற்றும் காய்ந்த திராட்சைகள் நமது பசியை போக்க உதவும்.

 நீர்ச்சத்திற்கு தேவையான உணவுகள்:

நீர்ச்சத்திற்கு தேவையான உணவுகள்:

விரத நேரங்களில், திரவ உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளவேண்டும். இதற்க்கு பழங்கள் மற்றும் காய்கறி சாறு பெரும் அளவில் உதவும். இனிப்பு தேவைப்படும் பழச்சாறுகளில் தேவைக்கேற்ப வெல்லம் அல்லது தேனை கலந்து குடிக்கலாம்.

குறைந்த அளவில் இனிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்:

குறைந்த அளவில் இனிப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்:

நமக்கு கடுமையான பசி இருக்கும் அந்த நேரங்களில் இனிப்புகளை எடுத்துக் கொள்வதால் நமக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். எனினும் மற்ற நேரங்களில் இனிப்புகளை அதிகமாக உட்கொள்ளாமல் மிதமான அளவில் உட்கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Manage Sugar Level During Navratri

How To Manage Sugar Level During Navratri
Story first published: Tuesday, September 5, 2017, 17:27 [IST]
Subscribe Newsletter