For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சளி, ஜலதோஷம் உடனே நீங்க ஒரு எளிய பலன் தரும் மூலிகைத் தேநீர்! – பாக்கலாமா?

ஜலதோஷம், கபம் கரைய மூலிகை தே நீர் எப்படி தயாரிப்பது என இந்த கட்டுரையில் திரு ஞானா அவர்கள் குறிப்பிடுகிறார்.

By Gnaana
|

ஜலதோஷம் சாதாரணமாக வந்து, நம்மை மிக அதிகம் படுத்திவிட்டு போகும் ஒரு வியாதி. ஜலதோசம் வந்தாலே, மூக்கை சிந்திக்கொண்டு அல்லது தொண்டை கட்டிக்கொண்டு, அவஸ்தையில் மேலதிகாரிகள் மற்றும் வாடிக்கையாளர் அழைப்பைத் தவிர்ப்பதும், அதனால் உண்டாகும் சிரமங்களும் பல உண்டு.

கிராமங்களில் அடிக்கடி சொல்வார்கள், ஜலதோஷம் ஒரு மோசமான வியாதி, மருந்து சாப்பிட்டலைன்னா குணமாக, ஏழு நாட்கள் ஆகும், மருத்துவரிடம் காட்டி மருந்து சாப்பிட்டால், ஒரே வாரத்துலே சரியாகிடும் என்று. உண்மைதான்.

மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடாவிட்டாலும், உடலில் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு தன்மை காரணமாக, ஒரு வாரத்தில் சரியாகிவிடும்தான். ஆயினும், அலுவலகத்தில் பணியாற்றுவோர், மார்கெட்டிங் மற்றும் சேல்ஸ் பணியில் இருப்போர் அவ்வாறு இருக்க முடியுமா? ஜலதோஷம் போகும்வரை நரக வேதனையாகி விடுமே!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எவ்வாறு ஜலதோசத்தை சரி செய்வது?

எவ்வாறு ஜலதோசத்தை சரி செய்வது?

மிக எளிமையான தீர்வுதான், மூலிகை மருந்துக்கடைகளில், திரிகடுகு என்று ஒரு முக்கூட்டு மருந்து கிடைக்கும், அதை வாங்கிக்கொள்ளுங்கள், சுக்கு, மிளகு மற்றும் திப்பிலி எனும் அருமருந்துகள் சரியான விகிதத்தில் கலந்த கலவை அது. மிக நல்ல சித்த மருந்து, சித்த மருத்துவர்கள் நிறைய மருந்துகளுக்கு துணை மருந்தாக அல்லது அந்த மருந்திலேயே திரிகடுகம் கலந்து வழங்குவர்.

உடலின் அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும் அருமருந்தாக விளங்கும், இதன் பலன்கள் ஏராளம். மனிதனுக்கு அனைத்து வகையிலும் உடல் நலத்தைக் காக்கும் அரு மருந்தாக மும்மருந்துகள் கலந்த திரிகடுகம் விளங்குவதைப்போல, தமிழின் நன்னெறி நூலான திரிகடுகமும், ஒவ்வொரு பாடலிலும் மூன்று நற் கருத்துகளின் மூலம், மனிதர்களின் மனத் தீமை நீக்கும் நல்மருந்தாக,சமூக நல்வாழ்வுக்கு உறுதுணையாக விளங்குகிறது. இரண்டும் தமிழனின் நலனுக்கே, தமிழன் மூலம் உலகோர் நலனுக்கே என்பதே, இவற்றின் தனிச் சிறப்பு.

தேநீர் தயாரிக்கும் முறை :

தேநீர் தயாரிக்கும் முறை :

இப்படி அரும்பெரும் ஆற்றல் கொண்ட, திரிகடுக சூரணத்தில் [ பொடி ] இரு டீஸ்பூன் அளவு எடுத்து, ஒரு பாத்திரத்தில், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் சுட வைக்க வேண்டும். இந்த திரிகடுக நீர், மூன்று டம்ளர் என்ற அளவிலிருந்து, ஒரு டம்ளர் என்ற அளவுக்கு வரும்வரை, சுண்டக் காய்ச்ச வேண்டும். அதன்பின் அந்த நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து, சற்று சூடு தணிந்த உடன், சிறுகச் சிறுக பருகி வரவேண்டும். இதுவே திரிகடுக தீநீர்.

 திரிகடுக தேநீரின் நன்மைகள் :

திரிகடுக தேநீரின் நன்மைகள் :

சித்த வைத்தியத்தில், சுண்டக் காய்ச்சி பருகுவது என்பது மிக சக்தி வாய்ந்த ஒரு நோய் தீர்க்கும் முறையாகும், அதன் அடிப்படையில், நாம் பருகி வரும் இந்த திரிகடுக தீநீர், உடன் வேலை செய்து ஜலதோசம் போக்கும், ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறை பருகினாலே, ஜலதோசம் நீங்கி, உடல் நிலை சரியாகிவிடும், இயல்பான நிலையில் மீண்டும் பணிக்குத் திரும்பலாம், எந்த ஒரு சங்கடமும் இல்லாமல்.

 திரிகடுக தேநீரின் நன்மைகள் :

திரிகடுக தேநீரின் நன்மைகள் :

திரிகடுகத் தேநீர் மிக்க ஆற்றல் மிக்க ஒரு மருந்து ஆகும். ஜலதோஷம் வந்தபோதும், வரு முன்னரும் பருகி வரலாம், உடலின் ஜீரண உறுப்புகளையும் தூண்டி, இரத்தத்தை சீராக்கி, பல நன்மைகள் செய்ய வல்லது.

மேலும், திப்பிலி இரசம் சாப்பிட்டு வரலாம், இதுவும் ஜீரண சக்தியை அதிகரித்து, பசியைத் தூண்டும், உணவின் சுவை மறந்த நாவுக்கு சற்றே இதமாகவும், உடலுக்கு தெம்பு தருவதாகவும் திப்பிலி இரசம் அமையும்.

 கண்டங்கத்தரி சூரணம்!

கண்டங்கத்தரி சூரணம்!

இயல்பாகவே, பள்ளிகளில் ஒரு குழந்தைக்கு ஏற்பட்ட சளி, இருமல் பாதிப்பு மற்ற குழந்தைகளுக்கும் வேகமாகப் பரவும், அதன் காரணமாகவே, குழந்தைகள் சோர்ந்து, மூச்சுத் திணறலுடன் வீடு திரும்புவர். இதில் பயப்பட ஒன்றுமில்லை, குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் தன்மையின் குறைபாடுகளால், இந்த நோய்த் தொற்று ஏற்படுகிறது. இத்தகைய பாதிப்புகளிலிருந்து, எளிய மூலிகைகளின் மூலம் குழந்தைகளை, விரைவில் குணமடைய வைக்கலாம்.

கண்டங்கத்திரி பெறுவது எவ்வாறு?

கண்டங்கத்திரி பெறுவது எவ்வாறு?

மூலிகைகளில் காயகற்ப மூலிகைகள் மிக உயர்ந்தவை, அந்த வகையில் திரிகடுகம் போலே, ஒரு காயகற்ப மூலிகையாகும் கண்டங்கத்திரி. சமூலம் என்று சொல்லப்படும், இலை,தண்டு,காய்,பூ மற்றும் வேர் இவை கொண்ட கண்டங்கத்திரியை நன்கு காயவைத்து இடித்து சலித்து எடுப்பதே, சூரணமாகும், அல்லது கடைகளில் கிடைக்கும் கண்டங்கத்திரி பொடியையும் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை :

பயன்படுத்தும் முறை :

இந்த சூரணத்தை காலை மாலை வேளைகளில், குழந்தைகளுக்கு தேனில் கலந்து கொடுக்க, சளி மற்றும் இருமல் சரியாகும்.

மேலும் சளி காரணமாக ஏற்பட்ட சுவாசக் கோளாறுகளையும் சரி செய்யும். குழந்தைகளின் சோர்வும் ஜலதோஷமும் படிப்படியாக நீங்கி, குழந்தைகள் பழைய உற்சாகம் திரும்பப் பெறுவர். மேலும், இந்த சூரணம், குழந்தைகளின் ஜீரண சக்தியை சீராக்கி, பசியைத் தூண்டும் தன்மையும் கொண்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Herbal tea to cure cold and cough

Herbal tea to cure cold and cough
Desktop Bottom Promotion