நீங்கள் வயதாவதை தடுக்கும் 9 சிறந்த வழிகள்

Posted By: R. SUGANTHI Rajalingam
Subscribe to Boldsky

மார்க் வெயின் என்ற புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் என்ன கூறுகிறார் என்றால் " வயதாவதை பற்றி நீங்கள் கவலைப்பட்டுவது உங்கள் மனதிலும் மூளை யிலும் ஒரு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும். அதுவே அதைப் பற்றிய கவலை இல்லையென்றால் அது உங்களுக்கு பெரிதாக தெரியாது என்கிறார்.

ஆனால் இன்றைக்கு நிறைய பேர் கவலை படக் கூடிய பெரிய விஷயம் அவர்களின் இளமைக் காலம் சீக்கிரமாக முடிவடைந்து முதுமைக் காலம் வருவது தான்.

ஆனால் மார்க் வெயின் சொன்ன படி நமது வயதாகும் தோற்றத்தை கண்டு வருத்தப்படுவது தான் நமது மன அழுத்தத்தை அதிகரித்து சீக்கிரம் நம்மளை முதுமைக்கு கொண்டு சென்று விடுகிறது.

9 Simple Daily Habits That Can Slow Down Your Ageing Process!

நாம் எல்லோரும் ஆரோக்கியமான உணவு முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களை கொண்டு இருந்தால் நாம் வயதாகுவதை எட்டிப் பிடிப்பது காலம் தாழ்த்தி அமைகிறது.

ஆனால் இப்படி வயதாகுவதற்கான அறிகுறிகள் தென்படும் போது நம்மால் அதை கண்டு கொள்ளலாமல் டென்ஷன் ஆகாமல் இருக்க முடியாது. ஏனென்றால் இது மனிதனுக்கு ஏற்படும் ஒரு இயற்கையான உணர்ச்சி பூர்வமான எண்ணம்.

நாம் 30 வயதை எட்டும் போது நமது உடலின் ஆற்றல், வலிமை மற்றும் ஆரோக்கியம் எல்லாம் குறையத் தொடங்கி விடுகிறது.

வெளித் தோற்றத்தில் நரை முடி, சரும சுருக்கங்கள், கோடுகள், தொய்வான தோல், உடல் எடையில் மாற்றம் போன்ற அறிகுறிகளும் தென்பட ஆரம்பித்து விடுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயதினை அடையும் போது நமது உடலினுள் எண்ணற்ற மாற்றங்கள் ஏற்படுகின்றன.

40 வயதை கடந்ததும் நமது உடலின் மெட்டா பாலிக் வேகம் குறைவு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு , உடல் நலக்குறைவு போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.

இந்த மாற்றங்கள் எல்லாம் நமது உடலில் உள்ள செல்களின் இறப்பால் ஏற்படுகின்றன. நமது வயது 30-35 யை அடையும் போது இந்த மாதிரியான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

எனவே தினமும் சில ஆரோக்கியமான செயல்களில் ஈடுபடும் போது நீங்கள் வயதாவதை தடுக்க முடியும். ஏனெனில் இந்த செயல்கள் உங்கள் உடல் செல்கள் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கிறது. அதைப் பற்றிய ஒரு பார்வையை இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாய் விட்டு சிரியுங்கள்

வாய் விட்டு சிரியுங்கள்

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும் என்பார்கள். எனவே வாய் விட்டு சிரிக்க மறந்து விடாதீர்கள். இது உங்கள் மன அழகு, உடல் அழகு இரண்டையும் மேம்படுத்துகிறது. தினமும் அதிக அளவில் சிரிக்கும் போது உங்கள் முகத்திற்கு தேவையான இரத்த ஓட்டம் அதிகரித்து சீக்கிரம் சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகள் வருவது தடுக்கப்படுகிறது.

 அதிக அளவில் பழங்கள் எடுத்து கொள்ளுங்கள்

அதிக அளவில் பழங்கள் எடுத்து கொள்ளுங்கள்

பழங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. நிறைய நோய்களை தடுக்கவும் செய்கிறது. நிறைய பழங்கள் இருக்கின்றன. குறிப்பாக செர்ரீஸ், திராட்சை, பிளம்ஸ் போன்ற பழங்களில் அதிகமான விட்டமின் சி மற்றும் சோர்பிட்டோல் சத்துக்கள் உள்ளன.

இது உங்கள் சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. எனவே இது ஏஜ் ஸ்பாட்ஸ், சுருக்கங்கள் மற்றும் சரும கோடுகள் வருவதை தடுக்கிறது.

மசாஜ் செய்தல்

மசாஜ் செய்தல்

உங்கள் முகம், உடம்பு, கை மற்றும் கால்கள் இவற்றில் செல்கள் வயதாகுவதை தடுக்க புதிய செல்களை உற்பத்தியாக்க வேண்டும். எனவே மசாஜ் செய்வதன் மூலம் புதிய செல்கள் உருவாகி செல்கள் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் முகச் சுருக்கம், கோடுகள் மற்றும் சரும தொய்வு போன்றவற்றையும் தடுக்கிறது.

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்

குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் கீரைகள் மற்றும் காய்கறிகள் சேர்த்து கொள்ள வேண்டும் என்பார்கள். இது நமக்கும் பொருந்தும். கீரைகள், புதினா, காய்கறிகள் போன்றவற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் கே போன்ற சத்துக்கள் உள்ளன. இவைகள் புதிய செல்கள் உருவாகுவதை ஊக்குவிக்கின்றன.

மீன் சாப்பிடுதல்

மீன் சாப்பிடுதல்

நீங்கள் சைவ வாசியாக இல்லாவிட்டால் கண்டிப்பாக உங்கள் உணவில் மீன் சேர்த்து கொள்ளுங்கள். சால்மனில் ஏராளமான விட்டமின் ஈ மற்றும் டைஎத்தில்அமினோஎத்தனால போன்ற பொருட்கள் உள்ளன. இது உங்கள் செல்கள் வயதாகுவதை தடுத்து சருமத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கிறது.

 உடற்பயிற்சி

உடற்பயிற்சி

உங்களுக்கு ஏற்கனவே தெரியும் உடற்பயிற்சி நமக்கு மிகவும் நல்லது. நமது உடல் எடை குறைத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், இதய நோய்களை தடுத்தல் போன்றவற்றை உடற்பயிற்சி எளிதாக செய்கிறது. வாரத்திற்கு 4 முறை உடற்பயிற்சி செய்தால் செல்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரித்து செல்கள் இறப்பு அடைவதை காக்கிறது. வயதாகுவதால் வரும் மூட்டு வலி, தோல் தொய்வு, வயதாகுவதால் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தையும் தடுக்கிறது.

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல்

பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்தல்

பீட்சா, பர்கர், சிப்ஸ் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. இவைகள் உடல் எடை அதிகரித்தல், இதய நோய்கள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும். இதுலுள்ள நச்சுக்கள் மற்றும் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் உங்கள் செல்களை இறக்க செய்துவிடும். எனவே இதை தவிர்ப்பது மூலம் நீங்கள் சீக்கிரம் வயதாகுவதை தடுக்கலாம்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

மன அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

மன அழுத்தம் நிறைய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதய பிரச்சினைகள், உயர் ரத்த அழுத்தம், மனக் கவலை போன்ற அதிகமான பிரச்சினைகளை உண்டு பண்ணி விடும். அளவுக்கு அதிகமான மன அழுத்தம் வயதாகுவதை சீக்கிரமாக ஆக்கி விடும். எனவே மன அழுத்தத்தை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு வயதாகுவதை விரட்டுங்கள்.

எலக்ட்ரானிக் பொழுது போக்கு சாதனங்களை தவிர்த்தல்

எலக்ட்ரானிக் பொழுது போக்கு சாதனங்களை தவிர்த்தல்

இந்த நவீன தொழில் நுட்ப காலத்தில் நிறைய எலக்ட்ரானிக் பொழுது போக்கு சாதங்களான கம்யூட்டர், மொபைல் போன், டேபிளட்ஸ் போன்ற போன்ற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இவை நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்தாலும் இதை சரியான அளவில் பயன்படுத்துவது நல்லது. இவைகளை அதிகமாக பயன்படுத்தும் போது முகம், கண்களை சுற்றி சுருக்கங்கள், கோடுகள் போன்றவை சீக்கிரமாகவே வர ஆரம்பித்து விடுகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

9 Simple Daily Habits That Can Slow Down Your Ageing Process!

9 Simple Daily Habits That Can Slow Down Your Ageing Process!
Story first published: Thursday, December 7, 2017, 8:00 [IST]