ஒற்றை தலைவலி பாடாய் படுத்துதா? இதை ட்ரை பண்ணி பாருங்களேன்!

Written By:
Subscribe to Boldsky

ஒற்றை தலைவலியால் பெரும்பாலோர் அவதிப்படுவார்கள். வந்தால் எளிதில் போகாது. நாள் முழுவதும் இருந்து தொல்லை கொடுக்கும்.

ஒரு நாளோடு விட்டால் பரவாயில்லை. ஆனால் அடிக்கடி வந்து நம் நிம்மதியை குறைக்கும். இது தீவிரமான தலைவலி, குமட்டல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட நரம்பியல் தொடர்பான ஒரு நோய்யாகும்.

Granny remedies to treat migraine

இப்படி நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டாம். பதிலுக்கு இந்த வைத்தியங்களை செய்து பாருங்கள். பக்க விளைவுகள் இல்லை. எளிதில் குணமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
 கேரட், பீட்ரூட் சாறு :

கேரட், பீட்ரூட் சாறு :

ஒற்றை தலைவலி உண்டாகும்போது 1 டம்ளர் கேரட் சாறில் சிறிது வெள்ளரிக்காஅய் மற்றும் பீட்ரூட் சாறு கலந்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.

 முட்டை கோஸ் ஒத்தடம் :

முட்டை கோஸ் ஒத்தடம் :

முட்டைகோஸ் இலைகளை நன்றாக இடித்து ஒரு சுத்தமான துணியில் கட்டி, அதனைக் கொண்டு தலையில் ஒத்தடம் கொடுத்தால் ஒற்றை தலைவலி குறையும்.

 லவங்கம் மற்றும் பட்டை:

லவங்கம் மற்றும் பட்டை:

லவங்கப்பட்டையை பொடி செய்து நீரில் குழைத்து சிறிது தலையில் தேய்த்து விடுங்கள். காய்ந்ததும் துடைத்தால் மூக்க்டைப்பு விலகும். தலைவலி மறையும்.

திப்பிலி :

திப்பிலி :

திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், சந்தனம் மற்றும் உப்பு ஆகிய்வற்றை பாலில் ஊற வைத்து அரைத்து சிறு உருண்டையாக செய்து காய வையுங்கள். அதன் பின் தலைவலி வரும்போது ஒரு உருண்டையை நீரில் கரைத்து நெற்றியில் பற்று இடுங்கள்.

வெள்ளை எள்ளு :

வெள்ளை எள்ளு :

வெள்ளை எள்ளை பாலில் ஊற வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுங்கள். தொடர்ந்து 3 நாட்கள் இப்படி செய்து வந்தால் ஒற்றை தலைவலி வராது.

சாப்பிட வேண்டியவை :

சாப்பிட வேண்டியவை :

விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடியகாய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Granny remedies to treat migraine

Granny remedies to treat migraine
Please Wait while comments are loading...
Subscribe Newsletter